கேள்விகளும் பதில்களும் Jeffersonville, Indiana, USA 61-1015M 1...இந்தக் கேள்விகளை, நான் பிரசங்க பீடத்துக்கு வருவதற்கு முன்பு, ஆனால் சகோ. மூர் தொலைபேசியில் ஒரு அவசர அழைப்பு விடுத்தார், யாரோ மிகவும் வியாதிப்பட்டிருப்பதாக எண்ணினேன், பார்க்கப் போனால் அவருக்கு ஒரு கூட்டத்தை நான் நடத்தி தர வேண்டுமென்று விரும்பினார். அவர் தொலைபேசியில் பேசுவதை முடித்துக் கொள்ள நான் முயன்று கொண்டிருந்தேன். அவர் நன்றி கூறுதல் நாளின் போது வந்து லூயிசியானாவிலுள்ள அவர்களுக்கு ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்ய வேண்டு மென்று விரும்பினார். சென்ற ஆண்டு நாங்கள் அங்கு சென்றிருந்த போது, நாங்கள்... கர்த்தர் ஒரு எழுப்புதலைத் தொடங்கினார். அது இதுவரைக்கும் முடியவில்லை. அது இன்னும் தொடர்ந்து சென்று. கொண்டிருக்கிறது. அந்த எழுப்புதல். கடந்த இந்த ஆண்டில் எத்தனையோ நூற்றுக்கணக்கான மக்கள் இரட்சிக்கப்பட்டனர்அங்கு எழுந்த அந்த எழுப்புதலுக்குப் பிறகு. 2இன்று காலை இங்கு வந்திருப்பது ஒரு விதத்தில் ஆச்சரியமாயுள்ளது என்று நினைக்கிறேன், எனக்கு அவ்விதம் உள்ளது. எனக்குத் தெரியாது. எனவே ஜனங்களுக்கு இதை நாங்கள் அறிவிக்கவில்லை. சில கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக இங்கு வந்தேன். நான் நினைத்தேன், அந்த வகையில் ... ஜனங்கள் கேள்வி கேட்கும்போது, அவர்களுடைய இருதயங்களில் என்ன உள்ளதென்று ஒரு போதகர் அறிந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் ஜனங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நாங்கள் கண்டு கொள்கிறோம். இன்று காலை நாம் தொடங்குவதற்கு முன்பு, ஒரு குழந்தையைப் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று யாரோ ஒருவர் கூறினார் என்று நினைக்கிறேன். குழந்தையின் பிரதிஷ்டை இருக்குமென்று பில்லி என்னிடம் கூறினான். அப்படியானால், ஏன்... நல்லது. அந்த சிறுவனை நாம் மேடையின் மேல் கொண்டு வந்து. அவனை கர்த்தருக்கு பிரதிஷ்டை செய்து விட்டு, பிறகு கேள்விகளுக்கு பதிலளிப்போம். அதன் பிறகு நாங்கள் வியாதியஸ்தருக்கு ஜெபிக்கப் போகின்றோம். 3என் தாயார் அதே நிலையில் தான் இருக்கிறார்கள் என்று அறிவிக்க விரும்புகிறேன். அவர்கள்.... அவர்கள் நிலை முன்பிருந்ததை விட மோசமடையவில்லை என்று நினைக்கிறேன், ஆனால் அவர்கள் அவ்விதம் எண்ணுகின்றனர். நான் அவ்விதம் எண்ணவில்லை; அதே நிலையில் தான் அவர்கள் உள்ளதாக எண்ணுகிறேன். அவர்கள் மரித்துப் போவார்கள் என்று தேவன் என்னிடம் கூறும் வரைக்கும், அதை நான் நம்ப மாட்டேன். என் தாயாருக்காக நான் விசுவாசத்தை பற்றிக் கொண்டவனாய் இருக்கப் போகின்றேன் (பாருங்கள்?), அவர்கள் இவ்வுலகை விட்டு போகப் போகின்றார்கள் என்று அவர் என்னிடம் கூறும் வரைக்கும். இப்போது, ​​அவர் அவளை அழைத்துச் செல்லலாம். எனக்கு தெரியாது. அதை என்னிடமிருந்து விலக்கிக்கொண்டிருக்கலாம், கவலைப்படுவதிலிருந்து என்னைக் காத்திருக்கலாம் அல்லது ஏதாவது இருக்கலாம். ஆனா அவ என்ன இருந்தாலும் கடவுள் நல்லா வரணும்னு நம்பப் போறேன். அவள் மூன்று வாரங்களாக சாப்பிடவில்லை (ஆனால் குளுக்கோஸ் மட்டுமே), ஆனால் அவள் எப்படியும் குணமடைவாள் என்று நான் நம்புகிறேன். 4[சகோதரர் பிரான்ஹாம் ஒரு குழந்தையை அர்ப்பணிக்கிறார்.] சரி, இது ஒரு . . . இன்னொரு சாமியார் இங்கு வருவார் என்று நம்புகிறேன். லிட்டில் மிஸ்டர் வூட்ஸ். (அவரது முழுப் பெயர் என்ன?) இது வூட்ஸ் குடும்பத்தில் இப்போது சேர்க்கப்பட்ட ஒரு சிறிய டோக்கன். நிச்சயமாக, அவர் பாட்டியின் செல்லப்பிள்ளை. வில்லியம் டேவிட் ஜூனியர். நிச்சயமாக அவன் நல்ல சிறுவன். மற்றும் அவரது சிறிய கைமுட்டிகள் [தெளிவற்ற வார்த்தைகள்]. ஏனென்றால் அவன். . . . ஆம், அவர் விரல்களை இரட்டிப்பாக்கியுள்ளார். அவனுடைய தூண்டுதல் விரல் உள்ளது. . . . அணில் வேட்டைக்காரன், இல்லையா? ஒரு கண்ணால் என்னைப் பார்க்கிறார். அவர் ஒருவிதத்தில் பின்தங்கியவர் என்று நினைக்கிறேன். கடவுள் நம் வீட்டிற்கு அனுப்பும் சிறிய விஷயங்கள் இவை என்பதை நாம் பாராட்டுகிறோம், மேலும் இவற்றை வளர்க்கும் பொறுப்பை நமக்குத் தருகிறோம். கடவுளின் அருள் இந்த குடும்பத்தில் தொடர்ந்தால், இந்த குழந்தை கடவுளின் அறிவுரையில் வளர்க்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தலை வணங்குவோம். எங்கள் பரலோகத் தகப்பனே, இன்று காலை சிறிய வில்லியம் டேவிட் வூட்டை, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், அவர் பூமியில் இருந்தபோது, ​​கைக்குழந்தைகள், சிறு குழந்தைகளை, அவர் கிடப்பதற்காக, அவர்கள் அவரிடம் கொண்டுவந்த வேதவசனத்தைப் பொறுத்தமட்டில், இன்று காலை உங்களிடம் கொண்டு வருகிறோம். அவருடைய கரங்கள் அவர்கள்மீது அவர்களை ஆசீர்வதிப்பார். இன்று காலை அவர் மாம்ச சரீரத்தில் இங்கே இருந்திருந்தால், நமது சகோதரனும் சகோதரியும் இந்த சிறிய கிருபையை அவருக்கு எடுத்துச் செல்வார்கள் என்பதை நாங்கள் அறிவோம், இதனால் இன்று நாம் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்துவோம், அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வழியில், அவர்கள் குழந்தைகளைக் கொண்டு வருகிறார்கள். எங்களுக்கு. நாங்கள், விசுவாசத்தால், சிறிய தாவீதை இயேசுவின் பெயரால் உங்களிடம் உயர்த்துகிறோம். ஆண்டவரே, நீங்கள் அவரை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். கடவுளே, நீங்கள் தாமதித்தால் அவர் உமக்கு அடிமையாக வாழ்வார். அருள்வாயாக, ஆண்டவரே. அவருக்கு ஆரோக்கியத்தையும் வலிமையையும் கொடுங்கள். அவனுடைய அப்பாவையும் தாயையும் ஆசீர்வதியுங்கள். உங்கள் தெய்வீக சித்தத்தில் இருந்தால், இந்தச் சிறுவன் வரவிருக்கும் நாட்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க எழுப்புவான். அருள்வாயாக, ஆண்டவரே. இந்த சிறிய வில்லியம் டேவிட் வுட்டை இயேசு கிறிஸ்துவின் பெயரால் உங்களின் ஒரு வரவுக்காக நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். ஆமென். 5அவர் ஒருக்கால் அவர்களை எடுத்துக் கொள்ளலாம்; எனக்குத் தெரியாது. அவருடைய ... அதை அவர் என்னிடம் மறைத்து வைத்திருக்கக் கூடும், நான் கவலை கொள்ளாமல் இருப்பதற்காக; அவர்களுடைய நிலை என்னவானாலும், தேவன் அவர்களை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கப் போகின்றேன். மூன்று வாரங்களாக அவர்கள் ஒன்றுமே உண்ணவில்லை, க்ளுகோஸ் மட்டும். ஆனால் அவர்கள் எப்படியும் சுகமடைவார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள்? (சகோ. பிரான்ஹாம் குழந்தையைப் பிரதிஷ்டை செய்கிறார் - ஆசி), 6இப்பொழுது, ஒரு சில கேள்விகள் இங்குள்ளன. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வேதத்தை திறந்து பார்க்கவும் கூட எனக்கு தருணம் கிடைக்கவில்லை; ஏனெனில் இவை இன்று காலையில் தான் என்னிடம் கொடுக்கப்பட்டன. சிறிது நேரத்திற்கு முன்பு தான் அவைகளைக் கையிலெடுத்தேன், அவைகளில் ஒரு பகுதியை விரைவாகப் படித்தேன் , சில கேள்விகளை நான் கண்டபோது எப்படி.... என்று வியந்தேன்... அவைகளில் சில.... நான் இதுவரை பெற்றுக் கொண்டதில் இவையே மிகவும் கடினமான கேள்வித் தொகுப்பாய் உள்ளன. எனவே இவைகளை நான் பார்த்துக் கொண்டிருந்த போது, நமக்கு இவைகளைக் கொண்டு கடினமான நேரம் உண்டாயிருக்கும் என்பதைக் கண்டு கொண்டேன். எனவே உங்கள் கருத்துக்கேற்ப இக்கேள்விகளுக்கு நான் பதில் அளிக்காமல் போனால்... இவை என் அறிவுக்கு எட்டின் வரையில் என்பதை நினைவில் கொள்ளவும். சில வேளையில் இவைகளுக்கு பதிலளிக்க ஒரு வேதவசனத்தை நான் குறிப்பிட்டு, அதை படிக்க நேரம் இல்லாமலிருக்கக் கூடும். நீங்கள் வீட்டுக்கு சென்ற பிறகு, அதை எடுத்து வாசியுங்கள். நான் தவறான வேத வசனத்தை குறிப்பிட்டிருந்தால், நான் தவறு செய்து விட்டிருப்பேன். நான் வேண்டுமென்று வேத வசனத்தை தவறாக குறிப்பிடுவதில்லை, ஆனால் சில நேரங்களில் நமக்கு அவ்விதம் நேர்ந்து விடுகிறது. அது ஒன்றைக் குறிக்கும் வசனமாயிருக்கும், நாம் வேறொன்றை தவறாக குறிப்பிடக் கூடும். அதை செய்வது எவ்வளவு எளிதென்று உங்களுக்குத் தெரியும். ஆனால் நமது நோக்கம். அதை சரியாக குறிப்பிடுவதே நமது நோக்கமாயுள்ளது. இக்கேள்விகளை இந்த ஞாயிறு எடுத்துக் கொண்டு, அவைகளுக்கு அடுத்த வாரம் பதிலளித்திருப்பேனானால், அவைகளைத் தேடிப் பார்க்க எனக்கு வாரம் முழுவதும் நேரம் இருந்திருக்கும். 7ஆனால் வியாதிப்பட்ட அநேகர் வந்து கொண்டிருந்தனர். எனக்கு அதிகமான வேலை இருந்தது, எனக்கு வந்திருந்த அழைப்புகளுக்கு வெளியே செல்ல எனக்குத் தருணமே கிடைக்கவில்லை. எனவே வியாதியஸ்தரை கூடாரத்துக்கு வரவழைத்து அவர்களுக்காக நாம் ஜெபிக்க இன்று ஒரு நல்ல தருணம் என்று எண்ணினேன். ஜெபம் காரியங்களை மாற்றி விடுகிறதென்று நாமறிவோம். ஜெபம் நமக்கு ஏதோ ஒன்றைச் செய்கிறது. ஜெபத்தின் காரணமாகவே இன்று நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் ஜெபத்தின் மூலமாக தேவனுடைய கிருபையினால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்று காலை நான் சிறிது களைப்புற்றிருக்கிறபடியால், உங்களுடைய ஜெபங்களை நான் வாஞ்சிக்கிறேன் - எனக்காக நீங்கள் ஜெபிக்க வேண்டுமென்று 8நேற்று என் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன், ஒரு கிறிஸ்தவ குடும்பம். அங்கு சில வாலிப கிறிஸ்தவர்கள் கூடியிருந்தனர். அவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்த போது, ஏதோ ஒன்று என் மனதில் பட்டது, ஒரு எண்ணம். நான் சுற்றியுள்ள மரங்களைக் கண்டபோது, அவை பட்டுப் போய் கொண்டிருந்தன “இந்த மரங்கள் பட்டுப் போகும் நிலையில் இருந்த போதிலும், அவை எவ்வளவு அழகாயிருக்கின்றன!” என்று எண்ணினேன். சில நேரங்களில் இந்த மரங்கள் பச்சையாகவும் சிறப்பாயும் இருக்கும் நிலையைக் காட்டிலும் பட்டுப் போகும் நிலையில் மிகவும் அழகாயுள்ளன. அது நம்முடைய நிலைக்கு எவ்வளவு பொருத்தமாய் பரலோகப் பிதாவின் பார்வையில் அமைந்துள்ளது! ஏனெனில் அவர் “பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது என்று கூறியுள்ளார் (சங். 116:15). பிதா தம்முடைய பிள்ளை, கிறிஸ்துவில் தன் ஸ்தானத்தையும், தன் விசுவாசத்தையும், “தேவனுடைய கிருபையினால் நான் இரட்சிக்கப்பட்டேன்” என்னும் அறிக்கையையும் கொண்டவனாய் (பாருங்கள்?) மரண நேரத்தில் நின்று கொண்டு அவரிடம் வீட்டுக்கு வருவதை கீழே நோக்கி பார்ப்பது எவ்வளவு அழகான காரியமாயிருக்கும்! மரண நேரத்திலும் நாம் இரட்சிக்கப்பட்டோம் என்னும் நம்முடைய நிலையை நம்மால் பற்றிக் கொண்டிருக்க முடிகிறது. 9பிதா நம்முடைய தீரத்தையும் விசுவாசத்தையும் நம்முடைய சாட்சியை நாம் பற்றிக் கொண்டிருப்பதையும் நேசிக்கிறார் என்று நான் நம்புகிறேன். நாம் ஆரோக்கியமாயும் திடமாயும் நல்லுணர்வு தோன்றும் நேரத்திலும் சாட்சி கூறுவது அல்ல; நீங்கள் சோர்வுற்று, பெலன் குன்றி, துன்பப்படும் போது சாட்சி கூற வேண்டும். அப்பொழுது தான் உங்கள் சாட்சி முக்கியம் பெறுகிறது. அதைக் குறித்து நான் எண்ணிப்பார்க்கையில்; இதைக் குறித்து நான் எண்ணிப் பார்த்தேன். அதாவது மரணம் ஜீவனுடன் சம்பந்தப்பட்டதல்ல. ஜீவனும் மரணமும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. மரத்திலுள்ள இலைகள் செத்துப் போவதற்கு முன்பு, அதன் சத்து அதை விட்டு வெளியேற வேண்டும். எனவே, மரணமானது எதனுடன் சம்பந்தப்பட்டுள்ளதென்றால் - நான் மானிடர்களைக் குறித்து பேசுகிறேன் - மரணம் பாவத்துடன் சம்பந்தப் பட்டுள்ளது. ஏனெனில் நமக்கு பாவம் எதுவும் இருந்ததற்கு முன்பு, மரணம் இருக்கவேயில்லை. ஆனால் மரணம் எங்குள்ளதோ, அங்கு பாவம் உள்ளது; பாவம் எங்குள்ளதோ, அங்கு மரணம் உள்ளது; ஏனெனில் பாவத்தின் பலனே மரணம். அதன் பிறகு, அவன்... பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்“ (எசே. 18:20). ஆனால் நாம் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறக்கும்போது, நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டு, மரணத்துடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படாதவர்களாயிருக்கிறோம். பாருங்கள்? மரணம் ஜீவனுடன் சம்பந்தப்பட முடியாது. ஜீவனும் மரணத்துடன் சம்பந்தப்பட முடியாது. 10நேற்று சில வாலிப கிறிஸ்தவர்கள் கூடியிருந்த அறையில் நான் பேசிக் கொண்டிருந்த போது, “நீங்கள் சாலையில் நின்று கொண்டிருந்த போது, ஒரு கார் மணிக்கு தொண்ணூறு மைல் வேகத்தில் கட்டுக்கு மீறி சாலையில் வந்து கொண்டிருக்குமானால், நீங்கள் உங்களால் முடிந்த வரையில் மிகவும் வேகமாக அந்த நெடுஞ்சாலையை விட்டு விலகி விடுவீர்கள். அந்த காரின் வழியிலிருந்து விலகிக் கொள்ள, நீங்கள் குதித்து, வழுக்கி , எது வேண்டுமானாலும் செய்வீர்கள்” என்றேன். அந்த விதமாகத் தான் பாவமும் ஒரு கிறிஸ்தவனுக்கு இருக்க வேண்டும், ஏனெனில் பாவம் மரணத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. பாவத்தை நீங்கள் எந்த உருவிலும் கண்டால், உடனே அதிலிருந்து குதித்து விலகியோடுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பது எனக்குக் கவலையில்லை, பொல்லாப்பின் தோற்றத்திலிருந்து விலகுங்கள். ஏனெனில் பாவத்துடன் சம்பந்தப்படுதல் மரணத்தை விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது அங்கு நின்று கொண்டு, உங்களை நோக்கி வரும் கார் உங்கள் மேல் மோத விட்டுக் கொடுப்பது போல் உள்ளது. நீங்கள், அது என்ன செய்யும் பார்க்கலாம் என்று காத்திராதேயுங்கள்; அதன் வழியிலிருந்து விலகி விடுங்கள். தீமையின் தோற்றத்தைக் கண்டால், அதை விரைவில் பறக்கணிக்து விடுங்கள். சோதனை வருவதை நீங்கள் காணும்போது, பாவம்... அது தவறான ஒன்றாக இருக்குமானால், மரணம் உங்கள் பின்னால் பதுங்கியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள்? அப்படியானால், மணிக்கு தொண்ணூறு மைல் வேகத்தில் உங்களை நோக்கி வரும் மோட்டார் வாகனத்திலிருந்து எவ்வளவு விரைவாக தப்பி ஓடுவீர்களோ, அவ்வளவு விரைவாக இதையும் விட்டு ஓடிவிடுங்கள். நீங்கள் மோட்டார் வாகனத்தின் வழியிலிருந்து விரைவில் விலகிக் கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் குதித்து, வழுக்கி, எப்படியும் ஓடித் தப்பித்துக் கொள்வீர்கள். 11நமக்கு ஜீவன் உள்ளதென்று நாம் எப்படி அறிந்து கொள்கிறோமென்றால், நாம் பாவத்தை வெறுக்கும் காரணத்தாலே. நாம் பாவத்தை மிகவும் அதிகமாக வெறுக்கிறோம், அதனுடன் மரணம் சம்பந்தப்பட்டுள்ளதென்று நாம் அறிந்திருக்கிறோம், அது தோன்றும்போது, நாம் உடனே அதை புறக்கணிக்கிறோம். நாம் அதிலிருந்து எந்த வகையிலும் விலகியோட, நாம் குதிக்கிறோம், ஒடுகிறோம், பாவத்திலிருந்து விலகியிருக்க நாம் எதையும் செய்கிறோம், ஏனெனில் பாவத்தில் மரணம் உள்ளது. நாம் பாவத்துடன் தொடர்பு கொண்டிருக்க நிச்சயமாக விரும்புவதில்லை. அதிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறோம் எனவே அது ஒரு நல்ல சிறு கருத்தாய் இருக்குமென்று எண்ணினேன். நேற்று அந்த கிறிஸ்தவர்களுடன் நான் பேசிக் கொண்டிருந்த போது, இக்கருத்து எனக்கு தோன்றினது; அதை இந்த சபைக்கு இன்று காலை எடுத்துரைப்பது நலமென்று எண்ணினேன் - முக்கியமாக இங்கு அமர்ந்துள்ள வாலிபப் பிள்ளைகளுக்கு இத்தகைய சோதனை நேரிடுகையில். 12பிறகு, இதனுடன் சம்பந்தப்பட்டுள்ள ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அதை மட்டும் இப்பொழுது பார்க்க நேர்ந்தால்... இதை ஞாபகம் கொள்ளுங்கள், பாவமுள்ள எதிலுமே மரணம் படுத்துக் கிடக்கிறது. நீங்கள் பாவத்தில் பங்கு கொள்வீர்களானால், மரணத்தில் பங்கு கொள்கிறீர்கள். எனவே அதிலிருந்து விலகியிருங்கள். பாவம் என்பது என்ன? அவிசுவாசம்! அவிசுவாசம் அனைத்திலுமிருந்து விலகியிருங்கள். தேவனுடைய வார்த்தையை அவமதிக்கும் எந்த ஒன்றிலுமிருந்து விலகியிருங்கள். நான் சுகமளிக்கும் ஆராதனையைத் தொடங்கும் முன்பு, இக்கேள்விகளுக்கு விடையளிப்பதை என்னால் நேரத்தோடே முடிக்க முடிந்தால், அவமரியாதை என்பதைக் குறித்து சிறிது பேச விரும்புகிறேன். 13இப்பொழுது, இக்கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு அல்லது விடையளிக்க முயற்சிப்பதற்கு முன்பு. நாம் ஜெபம் செய்வோம்: எங்கள் பரலோகப் பிதாவே, இன்று காலை நாங்கள் இயேசுவின் நாமத்தில் உமது சமுகத்தில் வந்து, நாங்கள் உலகத்தின் காரியங்களிலிருந்து எங்களை விலக்கிக் கொண்டு விட்டோம் என்று கூற முற்படுகிறோம். தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ் செய்ய எங்களால் கூடாது என்றும், நாங்கள் ஒன்றைப் பகைத்து மற்றதை சிநேகிப்போம் என்றும் அவரால் உரைக்கப் பட்டுள்ள து (மத். 6:24). நாங்கள் நித்திய ஜீவனுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம் என்று இன்று காலையில் விசுவாசிக்கிறோம்; ஏனெனில் நாங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தினால் ஏற்றுக் கொண்டு எங்கள் ஜீவியத்தில் பரிசுத்த ஆவி தங்கி எங்களை வழிநடத்துகிறது என்னும் அத்தாட்சியை பெற்றுள்ளோம். இதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நாங்கள் பாவத்தைக் காணும் போது, அது எவ்வளவு சிறிதாக இருந்தபோதிலும், எவ்வளவு அழகாக அது காணப்பட்டாலும், பயங்கர வேகத்தில் வரும் காரைக் குறித்து நான் ஒரு உதாரணத்தைக் கூறினது போல, எங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று. குதித்து அதிலிருந்து விலகியோடும்படி செய்கிறது. நாங்கள் எந்தவிடத்திலும் பாவத்தில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை, அதிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறோம். 14இப்பொழுதும் கர்த்தாவே, வியாதியஸ்தர், தேவையுள்ளவர் அநேகர் இன்று காலை இருப்பதை உணருகிறேன். கர்த்தாவே, அவர்களுக்கு விசுவாசத்தை தரும்படியாக ஜெபிக்கிறேன் - முக்கியமாக இன்று காலை இந்த கூடாரத்தில் ஜெப வரிசையில் வருபவர்களுக்காக . இவர்கள் பாரமான யாவற்றையும், எல்லா அவிசுவாசத்தையும் தள்ளி விட்டு, அதிலிருந்து வேகமாக வெளி யேறி, விசுவாசத்துடன் கர்த்தராகிய இயேசுவினிடம் ஓடிப் போவார்களாக! மருத்துவமனைகளிலும், வியாதிக்குப் பின்பு ஓய்வெடுக்கும் வீடுகளிலும் உள்ளவர்களுக்காக ஜெபிக்கிறேன். கர்த்தாவே, என் தாயாருக்காக ஜெபிக்கிறேன். இதுவரைக்கும், கர்த்தாவே, அவர்களை எங்களோடு கூட வைத்து வந்திருக்கிறீர், இதற்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். விசுவாசத்துடன் தேவைப்பட்ட கரங்களுடன் உம்மை அணுகுகிறோம், முதலாவதாக உம்முடைய சித்தத்தை அறிந்து கொள்ள, அவர்கள் இவ்வுலகை விட்டுப் போவது அவருடைய சித்தமா என்று காண். அது அவருடைய சித்தமாயிருக்குமானால், நாங்களும் - அது எங்களுடைய சித்தமும் கூட, ஆனால் சாத்தான் இந்த பொல்லாப்பைச் செய்தானா என்றும் எங்களுக்கு ஒரு சோதனையைக் கொடுப்பதற்கென உம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடந்து கொண்டிருக்கிறதா என்றும் நாங்கள் முதலில் அறிந்து கொள்ள விரும்புகிறோம். அப்படியானால், கர்த்தாவே, எங்கள் கடமையின் பாதையில் நாங்கள் தீரமாக நிற்க விரும்புகிறோம். 15பிதாவே, எங்களுக்கு வந்துள்ள அந்த தொலைபேசி அழைப்புகளையும் அலுவலகத்தில் காத்துக் கொண்டிருக்கிற விசேஷித்த விண்ணப்பங்களையும் நினைவுகூரும்படி இக்காலையில் உம்மை வேண்டிக் கொள்கிறோம். எல்லாவிடங்களிலுமுள்ள எங்களுக்கு அன்பார்ந்தவர்களை ஆசீர்வதிப்பீராக. இன்றைக்கு கேள்விகளுக்கு பதிலளிப்பது என் மேல் விழுந்த கடமையாயுள்ளது, கர்த்தாவே. இவை ஆழமானவை என்றும், ஜனங்களின் இருதயத்தில் எழுந்த உத்தமமான கேள்விகள் என்றும் நாங்கள் உணருகிறோம். ஏதோ மூடத்தனமாக அவர்கள் இவைகளைக் கேட்கவில்லை; சத்தியத்தை அறிந்து கொள்ள அவர்கள் சிரத்தை கொண்டுள்ளதால், இவைகளைக் கேட்டிருக்கின்றனர். உமது வசனமே சத்தியம். எனவே பிதாவே, இக்காலையில் இந்த வசனமாகிய சத்தியத்துக்குள், எங்கள் சிந்தனைகளை இணைக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, போதிக்கும் இவ்வீட்டிலிருந்து நாங்கள் புறப்பட்டுச் செல்லும்போது, நாங்கள் இன்னும் அதிகமாக புரிந்து கொண்டிருக்கவும், அது எங்கள் ஆத்துமாக்களுக்கு நன்மையாயிருக்கவும் எங்களுக்கு உதவி செய்வீராக. இதை நாங்கள் தேவனுடைய மகிமைக்கென்று அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 16ஜெபம் ஏறெடுக்கப்படுவதற்காக இங்கு சில உறுமால்கள் வைக்கப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில், நம்மால் எவ்வளவு சீக்கிரமாக செய்ய முடியுமோ, அப்பொழுது ஜெபிப்போம். இப்பொழுது, சரியாக நமக்கு ஒன்றரை மணி நேரம் உள்ளது. நான் உங்களுக்கு ஏற்கனவே கூறினது போன்று, இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விடையளிக்க முடியுமா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. இன்றைக்கு நாம் திட்டமிருப்பது என்னவெனில், கேள்விகளுக்கு விடையளித்து விட்டு, ஜனங்களின் விசுவாசத்துக்கு உதவியாயிருப்பதற்கென ஒரு சிறு பிரசங்கத்தை நிகழ்த்தி விட்டு, அதன் பிறகு வியாதியஸ்தருக்கு ஜெபிக்கலாம் என்பதே. இன்றிரவு நடக்கவிருக்கும் ஆராதனைகளையும், நடுவாரஜெபக் கூட்டங்களையும், ஆண்களின் கூட்டங்களையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஞாயிறைக் குறித்து எனக்குத் தெரியவில்லை.... கூடுமானால், கர்த்தர் அனுமதிப்பாரானால், சபைக்கு அளிப்பதற்கென என் இருதயத்தில் ஒரு செய்தி உள்ளது. அது தலைசிறந்த ஒன்று, அதைப் பிரசங்கிக்க வேண்டுமென்று இவ்வாரம் என் இருதயத் தில் எழுந்தது. பிரசங்கிப்பதற்கென ஒரு செய்தி, சுவிசேஷக செய்தி ... நம்முடைய கர்த்தர் நடத்தும் விதமாக, அதைக் குறித்து சற்று கழிந்து பார்ப்போம். எனக்காக இப்பொழுது ஜெபியுங்கள், ஏனெனில் சில பெரிய தீர்மானங்கள் செய்யப்பட வேண்டியதாயுள்ளது. சகோ. ராய் பார்டர்ஸ் (இன்று காலை அவர் இங்கு எங்கோ உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்) கூட்டங்கள் ஒழுங்கு செய்வதை கவனித்துக் கொள்கிறார். கடந்த சில மாதங்களில் வந்த அழைப்புகள் ஒரு புத்தகம் நிறைய எழுதப்பட்டு, அது அவரிடம் உள்ளது - செல்ல வேண்டிய வெவ்வேறு இடங்கள், கூட்டங்கள் ஒழுங்கு செய்ய அவரை கேட்டுக் கொண்டவர்களின் பெயர்கள். எனவே இவ்விஷயத்தில் நான் சரியான தீர்மானம் எடுக்க தேவன் உதவி புரிய வேண்டுமென்று ஜெபியுங்கள். நான் எதைச் செய்தாலும், அது சரியாயிருக்கட்டும், அதுவே முக்கியம் வாய்ந்தது. 17இப்பொழுது கேள்விகளுக்கு பதிலளிக்கையில், அது... ஆகையால் தான் நான் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். சுக மளிக்கும் ஆராதனை இருக்குமென்று நாங்கள் விளம்பரப்படுத்த வில்லை, எனவே, நமது ஜனங்கள் மாத்திரமே இங்கிருப்பார்கள்; அவர்களுடைய இருதயத்தில் என்ன உள்ளதென்று நாம் அறிந்து கொள்ள முடியும். இங்கு பின்னால் அமர்ந்துள்ள நமது விலையேறப்பெற்ற சகோதரனும் மேய்ப்பனுமாகிய சகோ. நெவில் - அவர் தேவனுடைய ராஜ்யத்தில் முன்னேறி வருவதைக் காண்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளில் அவர் முன்னேறினதை ஒன்று சேர்த்து பார்த்தால், அதை காட்டிலும் சென்ற இரண்டு ஆண்டுகளில் அவர் அதிகமாக முன்னேறியிருக்கிறார் என்பது என் கருத்து. கர்த்தர் எவ்வளவாக அவரை ஆசீர்வதித்திருக்கிறார்! அதைக் குறித்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இதை நான் அவருக்கு நேராக கூறுவதில்லை ... அவருக்குப் பின்னாக இதை கூறியிருக்கிறேன், அது உங்களுக்குத் தெரியும். நான் பையனாயிருந்த முதற்கொண்டு சகோ. நெவிலை அறிவேன். பாருங்கள்? எனக்குத் தெரியும், சகோ. நெவில் ... இதை நான் விசுவாசிக்கிறேன்; அதாவது நம்மெல்லாரையும் போல அவரும் தவறு செய்யக் கூடியவர்; நாம் எல்லாரும் தவறு செய்யக் கூடியவர்களே, நாம் இன்னும் மானிடரே. ஆனால் அது அவருடைய இருதயத்திலிருந்து எழுந்த ஒன்றாக இருக்காது; அதை நான் நம்பமாட்டேன். அவர் உத்தமமுள்ளவர். அவர் எப்பொழுதுமே மிகுந்த உத்தமமுள்ளவராய் இருந்து வந்திருக்கிறார். 18அவர் இந்த செய்திக்குள் வந்தபோது, சபையின் வாக்குகளை (vote) கொண்டு அவரை இங்கு மேய்ப்பராகக் கொண்டு வந்தேன். அவர் இப்பொழுது இவைகளைப் புரிந்து கொண்டிருப்பது போல அப்பொழுது புரிந்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அவர் உத்தமமாக மற்றெல்லாவற்றையும் தள்ளி விட்டு இதை ஆராய்ந்து பயபக்தியுடன் அணுக முற்பட்டார். இப்பொழுது அவருக்கு செய்தியில் திடமான ஆதாரம் உள்ளதென்று நான் நினைக்கிறேன். இப்பொழுது அவர் பிரசங்க பீடத்துக்கு வரும்போது அவர் எந்நிலையில் இருக்கிறார் என்பதை அறிந்தவராயிருக்கிறார். எனவே இந்த கூடாரத்துக்காக நான் மிகவும் மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன். ஒரு புதிய கூடாரத்தைக் கட்டுவதால், அல்லது இந்த கூடாரத்தை விரிவுபடுத்தி, பெரிதாக்கி ஞாயிறு பள்ளி அறைகளை. அதில் கட்டலாமா என்று ஆலோசனை செய்ய அன்றொரு இரவு இங்கு ஒரு கூட்டத்தை அவர்கள் நடத்தினதாகக் கூறினர்; இதை விரிவுபடுத்தி பெரிதாக்கி, எல்லா வகுப்புகளுக்கும் வகுப்பறைகள் ஞாயிறு பள்ளி அறைகளைக் கட்டி, தரையில் கம்பளம் விரித்து, கூரையை வழவழப்பான 'பிர்ச்' (birch) மரத்தினால் உண்டாக்கி, வெளியே பெட்ஃபோர்ட் கற்களைப் பதித்து அதை அழகுபடுத்தலாமென்று சபையானது ஒருமுகமாக முடிவு செய்தது. இப்பொழுது கட்டிடக் கலை நிபுணர்களும் (architects) மற்றவர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சபையை பெரிதாக்கி, பின்பாகத்தை விரிவுபடுத்தி, அதை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதற்காக நாளை ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எனவே அதற்காக நாம் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 19இப்பொழுது, இந்த கேள்விகளில் நான்... சில கேள்விகளை நான் பார்க்கக் கூட இல்லை. சில சொற்களை நான் மெள்ள எழுத்து கூட்டி அது என்னவென்று கண்டு கொள்ள வேண்டும். உங்கள் எழுத்தின் காரணமாக அல்ல, எனது குறைந்த கல்வியே காரணம். நாம் அப். 2:38ன்படி ஞானஸ்நானம் பெறுவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மற்றஞானஸ்நானத்தைக் குறித்து நாம் எவ்விதம் ஜனங்களுக்கு பதில் சொல்ல வேண்டும்? அவர்கள் இரட்சிக்கப்பட்டுள்ளனரா இல்லையா? மேலும் தொடர்ந்து சென்று வெளிச்சத்தைப் பெற்றுக் கொள்ளாதவர்கள்? இப்பொழுது, இது ஒரு நல்ல கேள்வி. இந்த கேள்விகளின் பேரில் நான் மறுபடியும் கூற விரும்புகிறேன் (பாருங்கள்?) உங்கள் கருத்துக்கேற்ப இவைகளுக்கு நான் விடையளிக்காமல் போனால்... எனக்குத் தெரிந்தவரையில் இவைகளை வேதரீதியாக்க, வேதவாயிலாக இவைகளுக்கு விடையளிக்கப் போகின்றேன். 20வேதப்பிரகாரமான தண்ணீர் ஞானஸ்நானம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே. அது அப். 2: 38லும் வேதாகமத்தின் மற்ற பாகங்களிலும், வேதாகமம் முழுவதிலும் காணப்படுகிறது. இன்றைக்கு அநேகர் - அதை தொடங்கின சபையிலிருந்து வழிவழியாக வந்த ஏறக்குறைய எல்லா சபைகளுமே - ஜனங்களுக்கு பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கின்றன. அவர்கள் தவறாக அவ்விதம் செய்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு கட்டளை வேதத்தில் எங்குமே இல்லை. அது வேதத்தில் காணப்படவில்லை. பேதுரு... இயேசு சொன்னதை மத்தேயு எழுதிக் கொண்டிருந்த போது... அவர்கள், “நீங்கள் உலகமெங்கும் போய், சகல ஜாதிகளுக்கும் போதித்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்' என்று மத். 28:19ல் உரைக்கப்பட்டுள்ளதை எடுத்துக் கொள்கின்றனர். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பட்டப்பெயர்களே, நாமம் அல்ல, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதாகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி .... அவர் .... வேதாகம காலங்கள் அனைத்திலும் அவர்கள் ஒவ்வொரு நபருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மாத்திரமே ஞானஸ்நானம் கொடுத்து வந்தனர். வரலாற்றில் வழிவழியாக லவோதிக்கேயா (என்னை மன்னிக்கவும்) - ரோமாபுரியிலுள்ள நிசாயா என்னுமிடத்தில் நிசாயா ஆலோசனை சங்கம் நடைபெற்று கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்படும் வரைக்கும். 21பெந்தெகொஸ்தே சபை ... இரண்டு குழுக்கள், அவர்கள் பிரிந்து சென்றனர். ஒரு குழு வார்த்தையில், எழுதப்பட்ட வார்த்தையில் நிலைத்து நிற்க விரும்பினது, மற்ற குழுவோ ஒரு முதல் தரமான (classical) சபையை விரும்பினது. அது கான்ஸ்டன்டைனின் அரசாட்சியின்போது நடந்தது. கான்ஸ்டன்டைன் மதப்பற்று கொண்டவன் அல்ல. அவன் தொடக்கத்திலிருந்தே ஒரு அஞ்ஞானி. ஆனால் அவன் இருதரப்பினரை இணைக்க விரும்பின் ஒரு அரசியல்வாதி... ரோமாபுரியில் பாதி பேர் கிறிஸ்தவர்கள், பாதி பேர் அஞ்ஞானிகள். எனவே அவன், முதல் தரமான குழு அஞ்ஞானக் கொள்கைகள் சிலவற்றையும் கிறிஸ்தவக் கொள்கைகள் சிலவற்றையும் கைக்கொள்ளும்படி செய்தான். அவர்கள் தங்கள் சொந்த மார்க்கத்தை உண்டாக்கிக் கொண்டனர். எனவே, வேதாகமத்தை அவமதிக்கும் வண்ணமாக, கத்தோலிக்க சபையானது, தேவன் சபைக்கு, அதன் விருப்பப்படி மாற்றவோ அல்லது எதையும் செய்யவோ அதிகாரம் அளித்துள்ளார் என்று விசுவாசிக்கிறது. பாருங்கள்? எனவே அது உண்மையாயிருக்குமானால், கத்தோலிக்கரைத் தவிர நம்மெல்லாரும் தவறாயிருப்போம் (பாருங்கள்?), கத்தோலிக்க சபை மட்டுமே சரியாயிருக்கும். அப்படியானால் மெதோடிஸ்டு சபை செய்வது சரி, பாப்டிஸ்டு சபை செய்வது சரி, அனைத்து ஸ்தாபனங்களும் செய்வது சரி. பாருங்கள்? அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. அப்படியானால் யார் சரி? கத்தோலிக்க சபைக்கு வேதம் கூறியுள்ள எதையும் மாற்றி அமைத்து, “மரியாளே வாழ்க' போன்றவைகளை உபதேசங்களாக செய்துவிட அதிகாரம் இருக்குமானால், மெதோடிஸ்டு சபைக்கு, ”முழுக்கு ஞானஸ்நானம் தவறு, நாங்கள் தெளிப்போம்' என்று கூறுவதற்கு அதிகாரம் உண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் செய்வது சரியே; ஏனெனில் சபை தனக்கு விருப்பமானதை செய்து கொள்ளலாம் என்றால், எது உண்மையான சபை? மெதோடிஸ்டு சபையா, பாப்டிஸ்டு சபையா, பிரஸ்பிடேரியன் சபையா, கத்தோலிக்க சபையா, அல்லது எந்த சபை? பாருங்கள்? 22பெந்தெகொஸ்தே சபை ... இரண்டு குழுக்கள், அவர்கள் பிரிந்து சென்றனர். ஒரு குழு வார்த்தையில், எழுதப்பட்ட வார்த்தையில் நிலைத்து நிற்க விரும்பினது, மற்ற குழுவோ ஒரு முதல் தரமான (classical) சபையை விரும்பினது. அது கான்ஸ்டன்டைனின் அரசாட்சியின்போது நடந்தது. கான்ஸ்டன்டைன் மதப்பற்று கொண்டவன் அல்ல. அவன் தொடக்கத்திலிருந்தே ஒரு அஞ்ஞானி. ஆனால் அவன் இருதரப்பினரை இணைக்க விரும்பின் ஒரு அரசியல்வாதி... ரோமாபுரியில் பாதி பேர் கிறிஸ்தவர்கள், பாதி பேர் அஞ்ஞானிகள். எனவே அவன், முதல் தரமான குழு அஞ்ஞானக் கொள்கைகள் சிலவற்றையும் கிறிஸ்தவக் கொள்கைகள் சிலவற்றையும் கைக்கொள்ளும்படி செய்தான். அவர்கள் தங்கள் சொந்த மார்க்கத்தை உண்டாக்கிக் கொண்டனர். எனவே, வேதாகமத்தை அவமதிக்கும் வண்ணமாக, கத்தோலிக்க சபையானது, தேவன் சபைக்கு, அதன் விருப்பப்படி மாற்றவோ அல்லது எதையும் செய்யவோ அதிகாரம் அளித்துள்ளார் என்று விசுவாசிக்கிறது. பாருங்கள்? எனவே அது உண்மையாயிருக்குமானால், கத்தோலிக்கரைத் தவிர நம்மெல்லாரும் தவறாயிருப்போம் (பாருங்கள்?), கத்தோலிக்க சபை மட்டுமே சரியாயிருக்கும். அப்படியானால் மெதோடிஸ்டு சபை செய்வது சரி, பாப்டிஸ்டு சபை செய்வது சரி, அனைத்து ஸ்தாபனங்களும் செய்வது சரி. பாருங்கள்? அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. அப்படியானால் யார் சரி? கத்தோலிக்க சபைக்கு வேதம் கூறியுள்ள எதையும் மாற்றி அமைத்து, “மரியாளே வாழ்க' போன்றவைகளை உபதேசங்களாக செய்துவிட அதிகாரம் இருக்குமானால், மெதோடிஸ்டு சபைக்கு, ”முழுக்கு ஞானஸ்நானம் தவறு, நாங்கள் தெளிப்போம்' என்று கூறுவதற்கு அதிகாரம் உண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் செய்வது சரியே; ஏனெனில் சபை தனக்கு விருப்பமானதை செய்து கொள்ளலாம் என்றால், எது உண்மையான சபை? மெதோடிஸ்டு சபையா, பாப்டிஸ்டு சபையா, பிரஸ்பிடேரியன் சபையா, கத்தோலிக்க சபையா, அல்லது எந்த சபை? பாருங்கள்? 23எவராகிலும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டதாக வேதத்தில் எங்குமே இல்லை; ஏனெனில் அப்படிப்பட்ட ஒன்று கிடையவே கிடையாது. பிதா என்பது நாமமல்ல; குமாரன் என்பது நாமமல்ல; பரிசுத்த ஆவி என்பதும் நாமமல்ல. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. அதை தான் அப்போஸ்தலர்களும் காலங்கள் தோறும் இருந்தவர்களும் அறிந்து பின்பற்றினர். இப்பொழுது, அடுத்த கேள்வி... நான் கூறினது வேதப்பிரகாரமாக சரி. அது உண்மை. வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலன்றி வேறெந்த வகையிலும் ஞானஸ்நானம் பெற்றிருந்தவர்கள், தாங்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கென இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பெறும்படி கட்டளையிடப்பட்டனர் - அப். 19:5. உண்மை! எனவே வேதப்பிரகாரமாக அதுவே சத்தியம். அதற்கு விரோதமாக எந்த ஒரு பேராயரும், எந்த ஒரு தலைமைப் பேராயரும், எந்த ஒரு ஊழியக்காரனும், வேறு எவருமே ஒரு வார்த்தையும் கூற முடியாது, ஏனெனில் அதுவே சத்தியம். பாருங்கள்? 24அன்றொரு நாள் சிக்காகோவில் இதைக் குறித்து வாக்குவாதம் செய்ய அங்கு நின்று கொண்டிருந்த முன்னூறு போதகர்களைக் கேட்டேன்... நான் ... கர்த்தர் என்னிடம் கூறினார். அவர் எனக்கு ஒரு தரிசனத்தை அருளி நாங்கள் எங்கிருப்போம் என்றும், என்ன செய்ய வேண்டுமென்றும் என்னிடம் கூறினார். நான் முன்னூறு திரித்துவ போதகர்களின் முன்னால் நின்று கொண்டு, “இந்த உபதேசத்தில் நான் தவறாயிருந்தால், உங்களில் சிலர் எழுந்து நின்று வேதப்பிரகாரமாக நான் எங்கு தவறாயிருக்கிறேன் என்பதை எனக்குக் காண்பியுங்கள் - பாடபுத்தகத்தைக் கொண்டல்ல. நான் போதித்து வருகிற சர்ப்பத்தின் வித்து என்பது போன்ற ஒன்று கிடையாதென்றால், இங்கு வந்து வேதத்தின் மூலமாக அதை எனக்குக் காண்பியுங்கள்” என்றேன். யாருமே அசையவில்லை (பாருங்கள்?), எனெனில் அதை செய்ய முடியாது. அது உண்மை. நான் வித்தியாசப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, ஆனால் அது சத்தியம்; அது வார்த்தை. அங்குதான். அதைக் குறித்து யாரும் வாக்குவாதம் செய்ய முடியாது; அது தேவனுடைய வார்த்தை; அதை எவருமே செய்ய முடியாது. பாருங்கள்? 25இப்பொழுது, “இதை பெற்றிராதவர்கள்... அது சரியா என்று நிச்சயப்படுத்திக் கொள்ள, அதை நான் படிக்கட்டும். பாருங்கள்? ”மற்ற ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் இரட்சிக்கப்பட்டுள்ளனரா இல்லையா? மேலும் தொடர்ந்து சென்று வெளிச்சத்தைப் பெற்றுக் கொள்ளாதவர்கள்?“ நல்லது, நான் விசுவாசிக்கிறேன் - தேவன் தமது ஜனங்களை அழைத்து அவருடைய சபையை நியமித்திருக்கிறார் என்றும், உலகத் தோற்றத்துக்கு முன்பிருந்த அனைவரும் அதில் இருப்பார்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். வேதாகமம் அவ்விதம் போதிக்கிறதென்று நான் விசுவாசிக்கிறேன். தேவனிடத்தில் அன்புகூரும் ஒவ்வொரு மனிதனும் தன் முழு இருதயத்தோடும் சத்தியத்தை அறிந்து கொள்ள அதைத் தேடுவான் என்று நான் விசுவாசிக்கிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன், அவர்கள் அவ்விதம் செய்வார்கள் என்று. தேவனிடத்தில் அன்புகூரும் ஒவ்வொரு மனிதனும் அதைச் செய்வான். ஒரு மனிதன் அறியாமையின் காரணமாக தவறான ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டு, அவன் பெற்றது தவறான ஞானஸ்நானம் என்பதை அறியாமல் இருந்தால்.... இப்பொழுது, வேதப்பிரகாரமாக இதை என்னால் கூற இயலாது. ஆனால், ஒரு மனிதன் சரியானதை செய்ய அறியாமலிருந்து, தன் அறிவுக்கு எட்டின விதமாக அவன் ஒன்றைச் செய்திருந்தால், தேவன் அதை பாராமல், அவனை எப்படியும் இரட்சிப்பார் என்று என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அவனுக்கு... வெஸ்லியின் காலத்தில், சீர்திருத்த காலமாகிய லூத்தரின் காலத்தில், தேவன் கனப்படுத்தி, அவர் கனப்படுத்தினதாக நிரூபித்த அந்த தேவனுடைய மகத்தான மனிதர், அவர்களுக்கு கிடைக்கப் பெற்ற வெளிச்சத்தில் அந்த விசுவாசத்தைக் கொண்டவர்களாய் மரித்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 26நான் நம்பவுது என்னவெனில் இன்னும் அநேக காரியங்கள்... இன்று காலை சார்ல்ஸ் ஃபுல்லர் “பழைய பாணியில் எழுப்புதலின் நேரம்” என்னும் வானொலி நிகழ்ச்சியில் பேசினதை கேட்டீர்களா? அவர் எனக்கு மிகவும் பிரியமான வேத போதகர்களில் ஒருவர், இருப்பினும் அவர் மிகவும் அவர் சிறந்த வேதப் போதகர் என்பது என் கருத்து. இன்று காலை அவர் (அவர் தீர்க்கதரிசனத்தைக் குறித்துப் பேசினார் என்று எண்ணுகிறேன்); இன்னும் பெரிய காரியங்கள் வரப் போகின்றன என்றும், சபை இதுவரைக்கும் அறியாத காரியங்கள் ஜனங்களுக்கு வெளிப்படும் என்றும் அவர் கூறினார். நான் அதற்கு “ஆமென்” என்றேன். இன்னும் ஒரு பெரிய வெளிச்சம் வரவிருக்கிறது என்றும், இந்நாட்களில் ஒன்றில் அது ஒரு குறுகிய காலத்திற்கு - ஒருக்கால் ஒரு சில மாதங்களுக்கு - பூமியை வெள்ளம் போல் நிரப்பும் என்றும் நான் நம்புகிறேன். ஒரு பெரிய வெளிச்சம் வரவிருக்கிறதென்று நான் நம்புகிறேன். எந்த ஒரு நபரும் தனக்குள்ள விசுவாசத்திலும் உத்தமத்திலும், தனக்குக் கிடைக்கப் பெற்ற வெளிச்சத்தில் நடந்தால் இரட்சிக்கப்படுவார் என்று நான் நம்புகிறேன். 27ஞாபகம் கொள்ளுங்கள், கர்த்தராகிய இயேசு இவ்வுலகில் வந்த போது, அப்பொழுது அவர்களுக்கிருந்த வெளிச்சத்தில் அவர் கண்டார் என்று உங்களுக்கு ஞாபகமுள்ளதா? என்ன நடந்ததென்று நினைவில் உள்ளதா? “அந்த ரோம் நூற்றுக்கு அதிபதி நல்லவன் அல்லவா? அவன் நமது பட்டினத்தைக் கட்டினான் - நமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினான், (இவையனைத்தும் அவன் செய்தான்) - அவனுக்கென்று கேட்கப்படும் ஆசிர்வாதங்களுக்கு அவன் தகுதியுள்ளவன்”. பாருங்கள், தேவன் புரிந்து கொள்ளும் பிதாவாயிருக்கிறார்; அவர் உங்கள் இருதயத்தை அறிந்திருக்கிறார். நீங்கள் உண்மையில் வெளிச்சத்தைக் காண்கிறீர்களா அல்லது காணவில்லையா என்று அவருக்குத் தெரியும். இப்பொழுது, இந்த கேள்விக்கு சரியான விடை, சரியான ஞானஸ்நானம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானமே. அதற்கு மாறாக வேறு வழியில் ஞானஸ் நானம் பெற்றவர்கள், தங்கள் இருதயத்தில் சுயநலமில்லாமல், “நல்லது, அதனுடன் நான் விளையாடிக் கொண்டிருக்க விரும்பவில்லை” என்று கூறுங்கள்... அது அந்த நபருக்கும் தேவனுக்கும் இடையே உள்ள ஒன்று. ஆனால் அவர்களுக்கு வித்தியாசம் தெரியயாமலிருந்தால், அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்பது என் கருத்து. அதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியாது. அதன் பேரில் நாம் நீண்ட நேரம் நிலைத்திருக்க முடியும், ஆனால் கூடுமானால், இக்கேள்விகள் அனைத்தையும் நாம் காண முயல்வோம். 28தயவுகூர்ந்து எபிரேயர் 6:4 முதல் 6 வசனங்களையும் எபிரேயர் 10:26- 29 வசனங்களையும் விளக்கித் தருவீர்களா? இது பரிசுத்த ஆவி பெற்ற மக்களை குறிப்பிடுகிறதா அல்லது பரிசுத்தமாக்கப்பட்டவர்களையா என்பதையும் விளக்குங்கள்; வித்தியாசம் என்னவென்று விளக்குங்கள். நல்லது. அந்த நபர் குறிப்பிட்டுள்ள எபிரேயர் 6:4லக் காண்போம். வேதாகமக் கேள்விகள் என்றால் எனக்கு மிகவும் பிரியம். அது உங்களிலிருந்து ஏதோ ஒன்றை இழுத்து வெளி கொணர்கிறது. உங்களுக்கு ஏதோ ஒன்று கிடைக்கப் பெறுகிறது; மற்றபடி நீங்கள் அதை பெற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் மற்றவர்களின் கருத்தக்களைத்தான், அவர்கள் இருதயத்தில் உள்ளதைத் தான். நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் என்ன செய்கிறார்களென்று உங்களுக்குத் தெரியும். இப்பொழுது, அங்கே எபிரேயர் 10 உள்ளது, இங்கு எபிரேயர் 6:4 உள்ள து. சரி. ஏனெனில், ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிற படியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். எபி. 6:4-6 அது ஒன்று. இப்பொழுது எபிரேயர் 10:26. சரி, எபிரேயர் 10ம் அதிகாரம் 26ம் வசனம். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப் பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால். பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப் பாருங்கள். எபி. 10: 26-29. 29இவையிரண்டும் ஒரே காரியத்தை குறித்து உரைக்கின்றன. இப்பொழுது, இந்த கேள்வி கேட்ட நபருக்கு விளக்கிக் கூற விரும்புகிறேன். இப்பொழுது நீங்கள் எபிரேயர் 6:4ஐக் கவனிப்பீர்களானால், “ஒரு தரம் பிரகாசிக்கப்படுபவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்” என்று அது உரைக்கிறது. அது இப்பொழுது நாம் வாசித்த மற்ற வேதபாகத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. நீங்கள் பிரகாசிக்கப்பட்டு, அந்த பிரகாசிப் பிக்கப்படுதலை விட்டு விலகிச் செல்வீர்களானால், அந்த நபர் மறுபடியும் தன் இடத்தை பெற்றுக் கொள்ள முடியாது. பாருங்கள்? இப்பொழுது, எபிரேயர் நிரூபம், இந்த புறக்கணிப்பினால் கிடைக்கப் பெறும் தண்டனையையே எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவை புறக்கணித்தல், வேதத்தின் வெளிச்சத்தைப் புறக்கணித்தல் என்பது உலகிலுள்ள மிகப் பயங்கரமான காரியங்களில் ஒன்றாகும். 3062... இப்பொழுது, கவனியுங்கள், “ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரிசுத்த ஆவியைப் பெற்றும் மறுதலித்துப் போனவர்களை மனந்திரும்புதற்கேதுவாய் மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்”. பாருங்கள்? “ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், (கவனியுங்கள்) பரம ஈவை ருசிபார்த்தும்”. அவர்கள் அந்த ஒரத்துக்கு வந்து விட்டனர்: “பரம ஈவை ருசிபார்த்தும்”. இப்பொழுது, அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துக்கு வரவில்லை என்பதை கவனியுங்கள். பாருங்கள்? அவர்கள் அதற்கு பிரகாசிப்பிக்கப்பட்டனர். “பரம ஈவை ருசி பார்த்து (பாருங்கள்?) பரிசுத்த ஆவியில் பங்கு கொண்டு (அதை ருசி பார்த்ததன் மூலம்), தேவனுடைய நல்வார்த்தையையும் (அதன் ஒரு பாகத்தை பாருங்கள்?) இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப் போனவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது.... 31இப்பொழுது, எபிரேயர் 10ம் அதிகாரம் அதற்கான நியாயத்தீர்ப்பை அளிக்கிறது. “மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே. தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணினவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான்? உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் வண்ணம் இவ்விரண்டு வேதபாகங்களையும் ஒன்று சேர்த்த பின்பு, இப்பொழுது அவ்விதம் செய்த ஒரு மனிதனை வேதத்திலிருந்து நாம் எடுத்துக் கொண்டு பார்ப்போம். இப்பொழுது, இன்றைய சபை அனைத்தும் முன்னடையாளத்தின் நிறைவேறுதலாயுள்ளது. அது நமக்குத் தெரியும். ஒரு முன்னடையாளமும் அதன் நிறைவேறுதலும் உள்ளன. இஸ்ரவேல் ஜனங்கள் பாலஸ்தீனாவிலிருந்து - எகிப்திலிருந்து பாலஸ்தீனாவுக்குப் பிரயாணம் செய்தல், ஆவிக்குரிய சபை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு பிரயாணம் செய்வதற்கு முன்னடையாளமாயுள்ளது.... நீங்கள் எல்லோரும் அதை ஒப்புக்கொள்கிறீர்கள், இல்லையா? வேதசாஸ்திர பண்டிதர் அனைவருமே அது முன்னடையாளம் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். 32அவர்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்டனர். எகிப்துதான் உலகம். அவர்கள் அதை விட்டு வெளி வந்து, சிவந்த சமுத்திரத்தில் ஞானஸ்நானத்தின் மூலம் பிரிவினையின் தண்ணீர்கள் வழியாய் கடந்து, களிகூர்ந்து தேவனைத் துதித்தவர்களாய் மற்ற பக்கத்துக்கு வந்தனர். அவர்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றுக் கொண்டனர். அங்கிருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிச் சென்றனர். நல்லது, நீங்கள் கவனித்தீர்களா? அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைவதற்கு சற்று முன்பு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் அவர்கள் பிரவேசிப்பதற்கு முன்பு; அது சில நாட்களுக்குள் நடந்திருக்க வேண்டிய ஒன்று. பத்து அல்லது பதினொன்று நாட்களுக்கு அதிகமாக இருக்க வழியில்லை, ஏனெனில் அது நாற்பது சொச்சம் மைல்கள் தூரத்தில் இருந்தது. அவர்கள் நேராக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத் துக்குள் பிரவேசித்திருப்பார்கள், நமது பிரயாணத்தில் நாம் நடந்து செல்லும் ஒவ்வொரு கட்டத்தையும் அவர்கள் கடந்திருப்பார்கள். அவர்கள் வெளியே வந்து, சிவந்த சமுத்திரத்தைக் கடந்தனர், அவர்களுக்குப் பின்னே வந்த பார்வோனின் சேனை மூழ்கினது. அவர்களுடைய சத்துருக்களிலிருந்து அவர்கள் நீங்கலாகி, வனாந்திரத்தில் பிரயாணம் செய்து காதேஸ்பர்னேயாவில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தின் எல்லையை அடைந்தனர். அங்கே அவர்கள் தோல்வியடைந்தனர். ஏன்? அவர்கள் ஏன் தோல்வியடைந்தனர்? இப்பொழுது, மோசே பத்துக் கோத்திரத்தினரிடமும் பேசி, அந்த தேசம் எவ்விதம் உள்ளது என்று வேவு பார்க்க ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு பிரதிநிதியை அனுப்பப் போவதாக கூறினான். 33இன்று காலையில் நீங்கள் வந்துள்ள இடத்துக்கு அது ஒத்ததாய் உள்ளதல்லவா? இன்றைக்கு நீங்கள் - சபையானது லூத்தரின் மூலம் நீதிமானாக்கப்படுதலைக் கடந்து, மெதோடிஸ்டின் மூலம் பரிசுத்தமாக்கப்படுதலைக் கடந்து வந்து, இப்பொழுது வாக்குத்தத்தத்தின் நேரத்தை அடைந்துள்ளது. அந்த வாக்குத்தத்தம் ஆவியின் அபிஷேகமே. அது பழைய ஏற்பாடு முழுவதிலும் புதிய ஏற்பாட்டிலும் கூட (பாருங்கள்?) வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளது; “என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்” (லூக். 24:49). பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு அவ்வாறு கூறினான். அதுதான் வாக்குத்தத்தம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் என்பது இந்த பரிசுத்த ஆவியின் தேசத்தில் வாழ்வதேயாகும். ஆவியின் வல்லமையில் வாழ்வதே தேவன் சபைக்கு அளித்துள்ள வாக்குத்தத்தம். அது வேறொரு உலகம்; அது வேறொரு தேசம். வாக்குத்தத்தத்தைப் பெற்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் வாழ்வதற்கு, நீங்கள் முன்பிருந்த நிலையிலிருந்து வெளியே வர வேண்டும். “உன்னதத்திலிருந்து வரும் பெலனால் நீங்கள் தரிப்பிக்கப் பட்டு, பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது பெலனடைவீர்கள்” என்னும் வாக்குத்தத்தத்தை நினைவுகூருங்கள். பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் காலங்கள் தோறும் அளிக்கப்பட்ட வாக்குத்தத்தம் என்று பேதுரு கூறினான்.... இந்த வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டு வந்துள்ளதை நீங்கள் படிப்படியாக பெந்தெகொஸ்தே நாள் வரைக்கும் காணலாம், அதன் பிறகு அவர்கள் வாக்குத்தத்தத்தில் பிரவேசித்தனர். 34வெளியே புறப்பட்டு வந்த இஸ்ரவேல் ஜனங்கள் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் கண்டனர். அதன் பிறகு மோசே வேவு பார்ப்பதற்கென்று ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவனை அனுப்பினான். அவர்களில் சிலர் திரும்ப வந்து.... நல்லது. அவர்களில் சிலர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு செல்ல மறுத்தனர், அவர்களில் இருவர் மாத்திரமே சென்றனர். அவர்கள் திரும்பி வந்த போது, இரண்டு பேர் தூக்க வேண்டிய அவ்வளவு கனமான திராட்சைக் குலையை கொண்டு வந்தனர். அவர்கள் திராட்சை பழத்தை ருசிபார்த்ததில்லை. அவர்கள் வனாந்தரத்தில் இருந்தனர்; எனவே அது பழங்கள் தோன்றுதவற்கு ஏற்ற இடமல்ல. அவர்கள் வானத்திலிருந்து விழுந்த மன்னாவினாலும், காடைகளினாலும் போஷிக்கப்பட்டு வந்தனர். ஆனால் இப்பொழுது அவர்கள் அந்த தேசத்துக்குள் பிரவேசித்து, இருவர் தூக்க வேண்டிய அவ்வளவு பெரிய திராட்சைக் குலையைக் கொண்டு வந்தனர். இவர்கள் தேசத்துக்குள் பிரவேசித்து அங்கிருந்து திரும்பி வந்து, மற்றவர்களுக்கு இந்த திராட்சை பழங்களை ருசிபார்க்கக் கொடுத்தனர். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் திரும்பி வந்த பிறகு, திராட்சை பழங்களை ருசி பார்த்ததன் நிமித்தம் களிகூருவதற்கு பதிலாக, தங்கள் கோத்திரத்தாரிடம் சென்று, “ஓ, பெலிஸ்தியர் அல்லது ஏத்தியர், அல்லது பெர்சியரின் பெரிய மதில் சூழ்ந்த பட்டினங்களை நாங்கள் கண்டோம். இங்கே எல்லா விதமான ஜாதிகளும் உள்ளனர். அவர்கள் இராட்சதர்கள். அவர்களுக்கு முன்பாக நாம் வெட்டுக்கிளிகளைப் போல் காணப்படுகிறோம். அந்த தேசத்தை நம்மால் கைப் பற்ற முடியாது. மோசே, எங்களை ஏன் இங்கு கொண்டு வந்தாய்? என்றனர். பாருங்கள்? அவர்கள் எல்லோரும் - அவர்கள் ஒவ்வொருவரும் - வனாந்தரத்தில் அழிந்து போனதாக வேதம் உரைக்கிறது. அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் எல்லைக்கோடு விசுவாசிகள். அவர்கள் உண்மையான காரியம் வரைக்கும் வந்து வாக்குத்தத்தத்தைக் கண்டு, அங்கு சென்று வாக்குத்தத்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று எண்ணினர். 35இப்பொழுது, நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக் கப்படுதலின் வழியாக வந்தவர்கள் இன்றைக்கு அந்நிலையில் தான் உள்ளனர். பாருங்கள்? “தன்னைப் பரிசுத்தஞ் செய்த இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைக் காலின் கீழ் மிதித்து”. பரிசுத்தமாக்கப்பட்ட ஜனங்கள் ஓரிடத்தை அடைந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் கண்டு, திரும்பிச் சென்று அது மதவெறி. எங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் வகுப்புகளிலிருந்து நாங்கள் துரத்தப் படுவோம், எங்கள் இடங்களிலிருந்து நாங்கள் துரத்தப்படுவோம். எங்கள் சபைகளிலிருந்து நாங்கள் துரத்தப்படுவோம், எங்களால் அதை செய்ய முடியாது (பாருங்கள்?), ஏனெனில் எங்கள் சபை போதகத்துக்கு அது முரணாயுள்ளது' என்கின்றனர். பாருங்கள்? அவர்களை இவ்வளவு தூரம், வாக்குத்தத்தத்தினால் முத்திரிக்கப்படும் இடம் வரைக்கும் கொண்டு வந்த இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, அங்கிருந்து நடந்து திரும்பி சென்று விடுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் இரட்சிக்கப்படுவது முழுவதும் கூடாத காரியம் என்று அவர் கூறியுள்ளார். பாருங்கள், பாருங்கள்? வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் கடந்து சென்றவர்களை அல்ல. 36ஞாபகம் கொள்ளுங்கள், அந்த இருபத்தைந்து லட்சம் ஜனக்கூட்டத்தில், யோசுவா காலேப் இருவர் மட்டுமே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் சென்றனர். ஏனெனில் அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் ஏற்கனவே சென்று ஆசிர்வாதத்தைப் பெற்று திரும்பி வந்தனர். அவர்கள், “நம்மால் அதைக் கைப்பற்ற முடியும், ஏனெனில் தேவன் அவ்வாறு உரைத்திருக்கிறார்” என்றனர். அவர்கள் அதில் நிலைகொண்டிருந்தனர். ஏன்? மற்றவர்கள் சூழ்நிலையை நோக்கிக் கொண்டிருந்தனர், ஆனால் யோசுவாவும் காலேபும், “அந்த தேசத்தை நான் உங்களுக்குக் கொடுத்து விட்டேன், அதை போய் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்” என்று தேவன் உரைத்ததை நோக்கிக் கொண்டிருந்தனர். இன்றைக்கு ஜனங்கள், “ஓ, நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டால், நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டால், நான் அந்நிய பாஷை பேசினால் அல்லது தீர்க்கதரிசனம் உரைத்தால், என் சபையில் நான் சாட்சி கூறி கூச்சலிட்டால், அவர்கள் என்னைப் புறம்பாக்குவார்கள்” என்கின்றனர். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்! 37நீங்கள், “நல்லது, இப்பொழுது நான் உங்களிடம் கூறுகிறேன், நான் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன், நான் நல்ல, சுத்தமான பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன்” எனலாம். அது உண்மைதான். ஆனால் நீங்கள் தீர்மானம் செய்ய வேண்டிய இடத்துக்கு, எல்லைக்கோட்டுக்கு வந்திருக்கிறீர்கள். அதை நீங்கள் மறுதலிப்பீர்களானால் ஒரு தரம் பிரகாசிக்கப்பட்டவர்களை கூடாத காரியம்“. பாருங்கள்? வேறு விதமாகக் கூறினால், ஒரு மனிதன் நீதிமானாக் கப்படுதலின் வழியாகக் கடந்து வந்து, “எனக்கு வார்த்தையைப் பிரசங்கிக்க விருப்பமுள்ளது என்று நினைக்கிறேன் என்கிறார். அவர் இரசிக்கப்படுகிறார். அவர், ”நான் பாவம் செய்து அலுத்துப் போய் விட்டேன்' என்கிறார். சரி. அவர் இன்னும் புகைபிடித்துக் கொண்டிருக்கிறார், ஒருக்கால் அவர் இச்சிக்கலாம், அப்படி ஏதாவதொன்றைச் செய்து கொண்டிருக்கக் கூடும். சற்று கழிந்து அவர், “தேவனே , இது கிறிஸ்தவனுக்கு உகந்ததல்ல, முக்கியமாக ஒரு போதகருக்கு - பெண்களைத் தவறான வழியில் பார்ப்பதும், புகை பிடிப்பதும் என்கிறார். அல்லது, ”நான் அந்த ஆட்களுடன் சேர்ந்து கொண்டு சமுதாய மதுவாக 'பீர்' குடிக்கிறேன் - என் சபையோருடனும் கூட. அது சரியென்று தோன்றவில்லை. கர்த்தாவே, என்னைப் பரிசுத்தப்படுத்தும்' என்கிறார். அப்பொழுது கர்த்தர் அவரை பரிசுத்தப்படுத்தி, இச்சையையும் மற்றெல்லாவற்றையும் அவரிடத்திலிருந்து எடுத்துப் போடுகிறார். அப்பொழுது அவர் பரிசுத்தமாக்கப்பட்ட ஒரு பாண்டமாக ஆகிவிடுகிறார். அப்பொழுது தேவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பதை அவருக்கு முன்பாக வைக்கிறார். அதைச் செய்வதற்கு அவர், தான் இருக்கின்ற அந்த கூட்டம் ஜனங்களை விட்டு வெளி வர வேண்டும். அங்குதான் அவர் தன் உண்மையான நிறத்தைக் காண்பிக்கிறார், அவர் அதிலிருந்து பின்வாங்குகிறார். அவர் அவ்விதம் பின்வாங்கும் போது என்ன செய்கிறார்? அவரைப் பரிசுத்தமாக்கின இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, அது தன்னை அங்கு கொண்டு செல்ல இயலாதென்று கருதி, அதைக் காலின் கீழ் மிதித்துப் போடுகிறார். அப்படிப்பட்டவர் இரட்சிக்கப்படுவது கூடாத காரியம். அப்படியானால் அது என்ன செய்கிறது? அவரை பட்சிக்கும் கோபாக்கினைக்கும் நியாயத்தீர்ப்புக்கும் கொண்டு செல்கின்றது. இது தெளிவாகி விட்டதென்று நம்புகிறேன். இல்லையென்றால் அதை வேறொரு நேரத்தில் எனக்குத் தெரியப்படுத்துங்கள். இங்கு என்னிடம் அநேக கேள்விகள் உள்ளன. 38சகோ. பிரான்ஹாமே, பரி. யோவான் 21:15 முதல் 17 வசனங்களில் இயேசு பேதுருவிடம், அவன் தம்மிடத்தில் அன்பாயிருக்கிறானா என்று கேட்டு அவருடைய ஆட்டுக் குட்டிகளை மேய்க்கச் சொல்லிவிட்டு, அதன்பிறகு என் ஆடுகளை மேய்ப்பாயாக' என்று கூறினதன் அர்த்தம் என்ன? 17ம் வசனத்தில் அவர் மறுபடியும், 'என் ஆடுகளை மேய்ப்பாயாக“ என்கிறாரே? நல்லது. இதுதான் அது. பாருங்கள், கிறிஸ்து மேய்ப்பர். அவர் போக வேண்டிய நேரத்தில், தாம் போஷித்துக் கொண்டிருந்த ஆடுகளை, தமது மந்தையை, தமது சபையை, ஒப்படைத்துச் செல்கிறார் .... பாருங்கள் தமது மந்தையை தொடர்ந்து போஷிக்கும்படி அவர் தமது சீஷர்களுக்கு கட்டளையிட்டுச் செல்கிறார் - ஒரு மேய்ப்பனாக இருந்து, ஆடுகளைப் போஷிக்கும்படி 39வேறு விதமாக கூறுவோமானால், இது இப்படி உள்ளது. இங்கு நீங்கள் பார்ப்பீர்களானால்... இக்காலை வேளையில் அதை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். ஆடுகளுக்கு ஆடுகளின் ஆகாரம் கொடுத்தால் தான் அவை வளரும். நீங்கள் ஒரு பெரிய 'ஹாம்பர்கரை பொறித்து, அதை ஒரு ஆட்டுக்குக் கொடுத்தால், அதை உண்டு அதனால் வளர முடியாது. ஏனெனில், பாருங்கள். அது- அது ஆட்டின் ஆகாரமல்ல. பாருங்கள்? நீங்கள் ஒரு நல்ல டீ போன் ஸ்டிக்கை பொறித்து. அதை ஒரு ஆட்டுக்கு கொடுத்தால், அது - அது ஆட்டின் ஆகாரம் அல்ல. அதனால் அதை தின்ன முடியாது. அவ்வளவுதான், ஏனெனில் அது ஒரு ஆடு. ஆடுகள் ஆடுகளின் தீவனத்தையே விரும்பும். நல்லது. அப்படியானால், நீங்கள் தேவனுடைய மந்தையை போஷிக்கும் போது, அவைகளை மனிதனால் உண்டாக்கப்பட்ட வேதசாஸ்திரத்தினால் போஷிக்காதீர்கள்; அவைகளை வார்த்தையினால் போஷியுங்கள். அதைக் கொண்டுதான் ஆடுகள் வளரும். வார்த்தையைப் போஷியுங்கள்! ஒரு மேய்ப்பனாக, உண்மையான மேய்ப்பனாக இருங்கள். “என் ஆடுகளை போஷிப்பாயாக” (ஆங்கிலத்தில் “Feed my sheep” என்பதை தமிழில் “என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று மொழி பெயர்த்துள்ளனர் - தமிழாக்கியோன்). ஆட்டுக்குட்டிகள் சிறியவை. ஆடுகள் பெரியவை. எனவே குட்டிகளானாலும் பெரியவைகளானாலும், தேவனுடைய மந்தையைப் போஷியுங்கள்! பாருங்கள்? அவைகளை வார்த்தையினால் போஷியுங்கள்! வசனமே (பாருங்கள்?) சத்தியம்! ”மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்' என்று இயேசு கூறியுள்ளார் (மத். 4:4). அது சரியா? அப்படியானால் மனிதர் பிழைக்க வேண்டுமானால், அவர்கள் தேவனுடைய மந்தையாக - இந்த சபையாக - இருப்பார்களானால், அவர்கள் வார்த்தையினாலும் தேவனுடைய மன்னாவிலும் வளர வேண்டியவர்களாயிருக்கின்றனர். இதுவே அவருடைய மன்னா! 40வேதத்திலே - சபைக் காலங்களைக் குறித்து தியானித்த போது நாம் பார்த்தோம் - இயேசு மறைவான மன்னாவாயிருக்கிறார்; கிறிஸ்துவே சபையின் மன்னா. மன்னா என்பது என்ன? பழைய ஏற்பாட்டிலே மன்னா ஒவ்வொரு இரவும் வானத்திலிருந்து புதிதாக விழுந்து, பிரயாணப்பட்டு சென்று கொண்டிருந்த சபையை போஷித்து வந்தது. அது சரியா? புதிய ஏற்பாட்டில் மறைவான மன்னா எது? “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது (மறைவாயிருத்தல்), நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பேன். கிறிஸ்துவே வானத்திலிருந்து ஒவ்வொரு நாளும் தேவனிடத்திலிருந்து புதிதாக வரும் மறைவான மன்னாவாயிருக்கிறார் - ஒவ்வொரு நாளும். நீங்கள். நல்லது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தேவனைக் குறித்த ஒரு பெரிய அனுபவம் எனக்கு உண்டாயிருந்தது' என்று கூற முடியாது. இப்பொழுது என்ன நடக்கிறது? பாருங்கள்? ஒவ்வொரு நாளும் புதிதாக ஒரு புது ஆசிர்வாதம். புதிதான ஒன்று தேவனிடத்திலிருந்து இறங்கி வருகிறது. மறைவான மன்னா - கிறிஸ்து - வானத்திலிருந்து தேவனிடத்திலிருந்து இறங்கி வருகிறது. நாம் கிறிஸ்துவாகிய இந்த மன்னாவைப் புசித்து, மறுபக்கத்திலுள்ள அந்த தேசத்தை அடையும் வரைக்கும் அவர் நம்மை போஷித்து வருகிறார். 41அவர் என் ஆடுகளை போஷிப்பாயாக என்று கூறினதன் அர்த்தம் இதுவே. இதைக் குறித்தே நாம் பேசிக் கொண்டிருந்தால், மற்ற கேள்விகளுக்கு நம்மால் சொல்ல முடியாது. இது ஒரு நல்ல கேள்வி. கிறிஸ்து மன்னாவாக, ஆடுகளின் ஆகாரமாக இருக்கிறார் என்பதைக் குறித்து பேசுவது எனக்கு பிரியம். அவர்களைக் கிறிஸ்துவினால் அவருடைய வார்த்தையிலிருந்து போஷியுங்கள். பாருங்கள்? கிறிஸ்துவின் வார்த்தையை, அது இங்கு எழுதப்பட்டுள்ள விதமாகவே எடுத்துக் கொண்டு, அதை ஆடுகளுக்குக் கொடுங்கள். ஒ, அவர்களுக்கு 'ஹாம்பர்கர் - தேவை. என்று யார் கூறினாலும் அதை விசுவாசிக்காதீர்கள். அவர்களுக்குத் தேவையானது இந்த வேதாகமத்தில் உள்ளது. அதுதான்! இதுவே ஆடுகளின் ஆகாரம். இதுதான் அவர்களை வளரச் செய்யும் பரிசுத்த ஆவி, இதுவே அவருடைய வார்த்தை. அவருடைய கட்டளை. வார்த்தை ஒரு விதை விதையானது செடியைத் தோன்றச் செய்கிறது; அந்த செடியை நாம் புசிக்கிறோம். பரிசுத்த ஆவி வளரச் செய்யும் இந்த செடியைத்தான் சபையானது புசிக்கிறது. பரிசுத்த ஆவி சபையைப் போஷித்து தேவனுடைய சமுகத்தில் களிகூரும் படி செய்கிறது. ஜனங்கள் அவருடைய வார்த்தையை விசுவாசித்து, பரிசுத்த ஆவி அவர்கள் மூலம் கிரியை செய்ய விட்டுக் கொடுக்கின்றனர். அப்பொழுது பரிசுத்த ஆவி, அவர்கள் என்ன செய்வார்கள் என்று தேவன் வாக்களித்ததை அவர்களுக்கு அளிக்கிறார். தேவன் தமது சபை வளர்ந்து வருவதைக் காண்கிறார். எனவே ஆடுகள் நன்றாக போஷிக்கப்படுகின்றன, பரிசுத்த ஆவி அதன் மூலம் மகிமைப்படுகிறார். பாருங்கள்? அதுதான். “என் ஆடுகளைப் போஷிப்பாயாக”. சரி. இது மாத்திரமல்ல, இன்னும் வேறெதாகிலும் இருந்தால், எனக்கு சற்று பின்பு தெரியப்படுத்துங்கள். 42சகோ. பிரான்ஹாமே, சிறிது நேரத்துக்கு முன்பு நான் ஜெபவரிசையின் வழியாக வந்த போது அபிஷேகம் பெற்ற கரங்கள் என் மேல் வைக்கப்பட்டு, இரட்சிக்கப்படாத என் கணவருக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. அப்பொழுது நான் தேவனுடைய வல்லமையினால் கொல்லப்படுவது போல ஆட்கொள்ளப்பட்டேன். அவர் இரட்சிக்கப்படுவார் என்பதற்கு இது உறுதியான அடையாளமா? நல்லது. இந்தக் கேள்வியைக் கேட்டது ஒரு பெண்ணாயிருக்க வேண்டும். சகோதரியே, அவர் இரட்சிக்கப்படுவார் என்பதற்கு இது நிச்சயமான அடையாளம் என்று நான் கருதமாட்டேன் , இருப்பினும் தேவன் அவரை இரட்சிப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன், நிச்சயமாக, ஆனால்... “இது கர்த்தர் உரைக்கிறதாவது என்று உங்களால் கூற முடியுமா?” என்று கேட்பாயானால், அதைக் குறித்து ஜாக்கிரதையாயிரு (பார்?) ஏனெனில், பார், பரிசுத்த ஆவி உன்னை ஆசிர்வதித்திருக்கக் கூடும், ஏனெனில் நீ கிறிஸ்துவின் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டாய். பார்? 43கிறிஸ்து பாவமுள்ள சபைக்காக சிலுவைக்குச் சென்றது போல, நீ பாவமுள்ள உன் கணவருக்காக நிற்பதற்காக இங்கு வந்தாய். பார்? நீ செய்தது ஒரு பெரிய காரியம். ஆனால் நான் என்ன செய்வேனென்றால், தேவன் அதை செய்வாரென்று என் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பேன் (பார்) - தேவன் அதை செய்வாரென்று. ஏனெனில் அவர் அந்த ஆசிர்வாதத்தை கொடுத்தாலும் கொடுக்காமல் போனாலும் - அது கூடுதலாக தேவன் உனக்குக் கொடுத்த ஒன்று. அவர் உன்னை ஆசிர்வதித்ததனால், அது உனக்கு நல்லுணர்வை அளித்திருக்கும் என்று நான் நம்புகிறேன். அது இவ்விதம் உள்ளது. உதாரணமாக, நீ சபையில் அந்நிய பாஷை பேசி, அதற்கு அர்த்தம் உரைப்பவர் இல்லாமல் போனால்; அர்த்தம் உரைப்பவர் இல்லாமல், நீ சபையில் அந்நிய பாஷை பேசக் கூடாது. ஆனால் நீ அந்நிய பாஷை பேசி, அர்த்தம் உரைப்பவர் இல்லாமல் போனால்.... ஏன், உபயோகி... நீ... நீ வீட்டிலோ அல்லது வேறெந்த இடத்திலோ ஜெபத்தில் தரித்திருக்கும் போது; அந்நிய பாஷையில் பேசலாம். ஏனெனில், “அந்நிய பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான் (1 கொரி. 14:4). அது அவனுக்கு ஆறுதலை அளிக்கிறது. பார்? அவனுக்கு நல்லுணர்வு தோன்றுகிறது. ஏனெனில் அவன் அங்கு நின்று கொண்டு ஜெபித்துக் கொண்டிருக்கும்போது, முதலாவதாக என்ன தெரியுமா, பரிசுத்த ஆவி அவன் அல்லது அவள் மேல் வருகிறார், அவர்கள் அந்நிய பாஷையில் பேசத் தொடங்குகின்றனர். அவர்கள் அந்நிய பாஷையில் பேசினதால் அவர்களுடைய ஆத்துமா மகிழ்ந்து களிகூருகின்றது. பார்? நீ ஏறெடுத்த ஜெபத்துக்கு தேவன் பதிலளிப்பார் என்பதற்கு அது அடையாளமல்ல. ஆனால் பரிசுத்த ஆவியானவர் நீ சொல்வதை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அது அடையாளமாயுள்ளது. அது ஒரு ... அவர் உன்னை அறிந்திருக்கிறார்; அவர் உன்னோடு கூட இருக்கிறார் என்பதன் அடையாளம் அதுவே. இதற்கும் பொருந்தும் - பரிசுத்த ஆவியானவர் உனக்கு ஆசிர்வாதத்தை அருளுதல். 44இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு. அதுவே நான் கடைசி முறையாக அந்நிய பாஷையில் பேசினது என்று நினைக்கிறேன். நான் .... இது மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்பொழுது நான் இல்லினாய் நகரில் இருந்தேன். சீயோன் பட்டினத்திலுள்ள ஜெப வரிசைக்கு என்னை அழைத்துச் செல்ல பில்லி வந்திருந்தான். என் இருதயத்தில் பாரம் தோன்றினது. எனவே நான் முழங்கால்படியிட்டு ஜெபிக்கத் தொடங்கினேன். நான் ஜெபித்துக் கொண்டிருந்த போது, பில்லி கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. நான், “பில்லி, என்னால் இப்பொழுது வர முடியாது என்றேன். அவன் வெளியே சென்று உட்கார்ந்து கொண்டான். நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன், என் இருதயம் அதிகமாக பாரமடைந்திருந்தது. அந்த நிலையில் என்னால் சபைக்குச் செல்ல முடியவில்லை. பாருங்கள். வழக்கமாக அவர் எனக்கு ஒரு தரிசனத்தை அளித்து நடக்கப் போகும் ஒன்றை எனக்குக் காண்பிப்பார். ஆனால் அந்த நேரத்தில் அவர் அதைச் செய்யவில்லை. அந்த அறையில் நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன், அப்பொழுது யாரோ ஒருவர் கதவண்டையில் நின்று கொண்டு .... அது வெளி நாட்டு மொழியைப் போல் தொனித்தது, ஜெர்மன் மொழி, டட்ச் மொழி, அப்படி ஏதோ ஒன்று. அது மிகவும் வேகமாகவும் அர்த்தம் புரியாமலும் இருந்தது. நான் மறுபடியும் கவனித்துக் கேட்டேன். நான், “நல்லது. யாரோ ஒருவர் ஜெர்மன் மொழியில் அந்த விடுதி முதலாளியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் போலும். அவர் அவருக்கு பதில் கொடுப்பார் என்று நினைத்துக் கொண்டேன். நான் ஜெபம் பண்ணி முடித்து, நாற்காலியில் இப்படி சாய்ந்து கொண்டு கவனித்துக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். அவர் பேசிக் கொண்டே போனார். நான், “ஏன் யாரும் அவருக்கு பதில் கொடுக்கவில்லை?” என்று நினைத்துக் கொண்டு கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். “இது விசித்திரமாயுள்ளதே” என்று எண்ணினேன். 45கீழே சாலையில் எடை போடும் கருவி ஒன்றிருந்தது. அங்கிருந்த ஒருவன் ஒருவனைப் பார்த்து, “ஓட்டிக் கொண்டு போ என்றும், மற்றொருவனிடம், ”ஒட்டிக் கொண்டு எடைக் கருவின் மேலே வா“ என்றும் கூச்சலிடும் சத்தம் கேட்டது. நான் திரும்பி அந்தப் பக்கம் பார்த்தேன். எனக்கு ஏதோ ஒரு உணர்ச்சி ... பார்க்கப் போனால், நான்தான் அவ்விதம் பேசிக் கொண்டிருந்தேன். அது நான் . நான் அமைதியாக இருந்தேன், எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. நான் கட்டுக்கு மீறி பேசிக் கொண்டிருந்தேன், ஆனால் நான் பேசினது ஒன்றும் எனக்குப் புரியவில்லை. நான் .... என் வாய் அசைந்து கொண்டிருந்தது, நான் ஏதோ ஒருவிதமான மொழியை - பேசிக் கொண்டிருந்தேன். நான் மிகவும் அமைதியாக இருந்தேன். சற்று கழிந்து அது நின்று போனது. அது நின்றபோது, ஒ என்னே, எனக்கு கூச்சலிட வேண்டும் போல் தோன்றினது. நான் மிகவும் சந்தோஷமாயிருந்தேன், ஏனென்று எனக்குத் தெரியவில்லை, பாரம் என்னை விட்டு நீங்கினது. எனவே நான் பில்லியைக் கூப்பிட்டு, சபைக்குச் சென்றேன். நான் சபைக்குச் சென்ற போது .... அப்பொழுது திரு. பாக்ஸ்டர் கூட்டம் ஒழுங்கு செய்வதற்கு மேலாளராக பணியாற்றினார். அவர் பாடிக் கொண்டு, காத்துக் கொண்டிருந்தார். நான் அரை மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக அந்த இடத்தை அடைந்தேன். தாமதமாகி விட்டது என்று அவரிடம் கூறினேன். நான் அழுது கொண்டிருப்பதை அவர் கண்டார். அவர் என்ன விஷயம்?“ என்று கேட்டார். 46நான் “ஒன்றுமில்லை” என்றேன். பத்து நிமிடங்கள் கழித்து ஒரு பெண் அரங்கத்தின் பின்வழியாக வந்து பின்னால் உள்ள இருக்கையில் அமரவிருந்தாள். நாங்கள் என்ன நடந்ததென்று அறிந்து கொள்ள அவளிடம் கேட்ட பொழுது, அவள் இரட்டை பட்டினத்திலிருந்து (செயின்ட் பால் அல்லது மினியாபோலிஸ், அந்த இரண்டு பட்டினங்களில் ஏதோ ஒரு பட்டினத்திலிருந்து) சாலை மார்க்கமாக வந்து கொண்டிருந்தாளாம்.... அவள் காச நோயால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால், நோயாளி ஊர்தி அவளைக் கொண்டு வர தைரியப்படவில்லை, அவளுடைய சுவாசப் பைகள் மிகவும் பயங்கரமான நிலையில் இருந்தது - பசையைப் போலிருந்தது. எனவே ஒரு சில சகோதரர் ஒரு பழைய ஷெவர்லே காரை எடுத்து, அதன் பின் இருக்கையை கழற்றி விட்டு, அந்த இடத்தில் எப்படியோ ஒரு கட்டிலைப் பொருத்தி - அல்லது ஒரு படுக்கையை - அவளை அதில் கிடத்தி, கூட்டத்துக்கு கொண்டு வந்து கொண்டிருந்தனர். அவள் வரவேண்டுமென்று விரும்பினாள். மருத்துவர்கள் அவளைக் கைவிட்டு விட்டனர். சாலையில் வந்து கொண்டிருந்த போது... ஒரு சிறு குலுக்கல் ஏற்பட்டாலும் அவள் இரத்தம் கக்குவாள் என்று அவர்கள் அவளிடம் கூறி யிருந்தனர். அவள் அதே விதமாக இரத்தம் கக்கத் தொடங்கினாள். அவர்கள் அவளை வெளியே தூக்கி புல் தரையில் கிடத்தினர். அந்த பரிசுத்தவான்கள் அவக் சுற்றிலும் நின்று கொண்டு அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தனர். அவள் வெறும் ... ஒவ்வொரு முறையும் அவள் சுவாசித்த போது, இரத்தம் கொப்பளித்துக் கொண்டு அவள் வாயின் வழியாக இப்படி வெளி வந்தது. அப்பொழுது திடீரென்று அவள் உடனே சுகமடைந்தாள். அவள் குதித்தெழுந்து களிகூர்ந்தவளாய் சபைக்கு வந்தாள். அவள் அங்கு பின்னால் இருந்து கொண்டு, சாட்சி கூறிக் கொண்டிருந்தாள். “அது எந்த மணி நேரத்தில் நடந்தது?” என்று கேட்டேன். அவள் அதை உரைத்த போது, அதே மணி நேரத்தில் தான் என் மூலமாக அந்த பேச்சு நடந்து கொண்டிருந்தது. நல்லது. அது என்ன? பரிசுத்த ஆவியானவர் அந்த ஸ்திரீக்காக அங்கு வேண்டுதல் செய்து கொண்டிருந்தார். நான் கூறுவது விளங்குகிறதா? 47இப்பொழுது, வேதம் அதை உரைக்கிறது. சில நேரங்களில் நாம் வார்த்தைகளை முணுமுணுக்குகிறோம்; நாம் எதைக் குறித்து பேசுகிறோம் என்று நமக்குத் தெரிவதில்லை. ஆனால் அங்கு பரிசுத்த ஆவியானவர் அசைவாடி, நாம் புரிந்து கொள்ளாத காரியங்களுக்காக வேண்டுதல் செய்கிறார். பாருங்கள்? அந்த ஸ்திரீ உடனே சுகமடைந்தாள். அவள் நீண்ட காலமாக எங்களுடன் தொடர்பு கொண்டிருந்தாள். அவள் பரிபூரண சுகமடைந்தாள், அவள் சுகமடைந்து விட்டாள். இப்பொழுது பாருங்கள், அவை எங்குள்ளன என்று தேவன் அறிவார். அதைச் செய்ய அவருக்கு ஒரு முறை உண்டு. பாருங்கள்? அதை அவர் தமது சொந்த வழியில் செய்கிறார். அவர் என்ன செய்கிறாரோ அதற்கு நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். அந்த நிலையை நீங்கள் அடையும் போது, மூடபக்தி வைராக்கியத்தையும் சத்தியத்தையும் பிரிக்கும் குறுகிய கத்தி முனையில் நிலைத்திருப்பது கடினமான காரியம். இப்பொழுது, நீங்கள் கவனமாயிராவிடில், பிசாசு உங்களை மூடபக்தி வைராக்கியத்துக்குள் கொண்டு சென்று விடுவான், அப்பொழுது நீங்கள் உங்கள் அனுபவத்தையும் மற்றெல்லாவற்றையும் இழந்து விடுவீர்கள். பாருங்கள்? நீங்கள் அவ்விதம் செய்யும்போது, நீங்கள் திடமான சத்தியத்தில் நிலைத்திருக்க இயலாது. வேதத்தில் கவனமாயிருந்து அதில் நிலைத்திருந்து, சாந்த குணத்தோடும் தாழ்மையோடும் இருங்கள். நீங்கள் அதில் நிலை கொண்டிருந்தால், தேவன் உங்களை பாதையின் வழியாக கல்வாரியை நோக்கி, கொண்டு சென்று கொண்டேயிருப்பார். 48சகோதரியே, அது உன்னுடைய விவகாரத்தைப் போன்ற ஒன்று. தேவன் உனக்கு ஆசிர்வாதத்தை அருளினார். நீ உன் விருப்பத்தை அடைவாய் என்பதற்கு அது ஒருக்கால் உறுதியான சாட்சியாக இருக்கக் கூடும். ஆனால் நான் அதன் மேல் மாத்திரம் சார்ந்திருந்து (பாருங்கள்?) “கர்த்தர் என்னிடம் கூறினார் என்று சொல்ல மாட்டேன். எனக்கு நேர்ந்த அனுபவத்தை நான் எடுத்துரைத்த காரணம், நீ தொடர்ந்து விசுவாசிப்பதற்கு அது உன்னை உற்சாகமூட்டக் கூடும் என்பதனால் தான். என்னவாயினும், தேவன் அங்கு செய்தது - அந்த விதமாக ஆவியை உன்மேல் கொண்டு வந்தது - ஏதோ ஒரு நோக்கத்துக்காகவே. அது வேறொன்றாக இருக்கக் கூடும். ஆனால் அது உன் கணவருக்காக நேர்ந்திருக்குமானால், அவர் நிச்சயமாக தேவனுடைய இராஜ்யத்துக்குள் வந்து விடுவார். அதை நான் விசுவாசிக்கிறேன். 49சகோ. பிரான்ஹாமே, ஸ்திரீகள் சபையில் பேசக் கூடாது என்பது வேதபூர்வமானது அல்லவா? இவர் இரண்டு கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அது உண்மை. அது உண்மை. ஸ்திரீகள் போதகர்களாக சபையில் பேசுவது சரியல்ல. அது உண்மை. 1 கொரிந்தியர் 14ம் அதிகாரம். இங்குள்ள சபையோராகிய உங்கள் அனைவருக்கும் இது தெரியும். இந்த கேள்வியை இன்று காலையில் கேட்டது ஒரு அந்நியராக இருக்கக் கூடும்; எனக்குத் தெரியாது. ஆனால் ஸ்திரீகள் பிரசங்கம் செய்வது சரியல்ல. அது உண்மை . அந்த வேதபாகத்தை இங்கு நான் படிக்கிறேன். அப்பொழுது நீங்கள் கண்டு கொள்ளலாம். அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 1 கொரிந்தியர் 14ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த பாகத்துக்கு நான் வருவேன் - என்னால் கண்டுபிடிக்க முடியுமானால்.... ஆம், அது இங்குள்ளது. சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக் கடவர்கள்: பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்க வேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது (முன்பிருந்த நாட்களில் நியாயப்பிரமாணம் ஸ்திரீ போதகர்களை அனுமதிக்கவில்லை) (law அதாவது “நியாயப்பிரமாணம் என்பதற்கு பதிலாக தமிழில் ”வேதம்“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக் கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே. கொரி 14: 34-35. 50இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், கொரிந்து சபை... கொரிந்து கிறிஸ்தவர்களில் அநேகர்... அந்த நாளில் தியானாள் பெரிய பெண் தெய்வமாக விளங்கினாள். அவள் ஒரு ரோமப் பெண் தெய்வம். அவள் எபேசுவுக்கும் பெண் தெய்வமாயிருந்தாள். அவள் உலகம் முழுவதிலும் தொழுது கொள்ளப் பட்டாள். இப்பொழுது, அவளுக்கு ஊழியம் செய்தவர்கள்... அவள் பெண்ணாக இருந்த காரணத்தால், அவளுடைய ஊழியக்காரிகளும் பெண்களாக இருந்தனர். அவர்கள் பவுலின் மூலம் கிறிஸ்தவ மார்க்கத்தைத் தழுவின் போது ... பவுல் இந்த நிரூபங்களை எழுதின போது, அவன் ரோமாபுரியில் சிறையில் இருந்தான். அவர்கள் அந்நிய பாஷையில் பேசி, மகத்தான வரங்கள் அவர்களிடையே கிரியை செய்யத் தொடங்கின போது. அவர்கள் பவுலுக்கு நிரூபங்கள் எழுதினர். நல்லது. இந்த ஸ்திரீகள் தங்கள் ஊழியத்தை தொடர்ந்து செய்ய வேண்டுமென்று எண்ணினர். 51இப்பொழுது, வேதத்தைப் படித்துக் கொண்டிருக்கிற நீங்கள் கவனிப்பீர்களானால், அவன் 36ம் வசனத்தில் இவ்வாறு உரைக்கிறான் : தேவ வசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது? ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது. ஆவியைப் பெற்றவர்னென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன். ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும். கொரி. 14: 36-38 இல்லையென்றால், ஸ்திரீகள்... இப்பொழுது, சபைக்கு எழுதப்பட்ட இந்த நிரூபத்தின் வரலாற்றை நீங்கள் எடுத்துக் கொண்டால், இந்த ஸ்திரீகள் எண்ணினது என்னவெனில் ... தியானாளுக்கு அவர்கள் பூசாரிகளாக இருந்தது போலவே, இந்த ஊழியத்தை இங்கும் தொடர்ந்து செய்யலாமென்று எண்ணினர். தேவன் ஒரு ஸ்திரீயல்ல; தேவன் ஒரு மனிதன். உண்மையான ஒருவன் மாத்திரம் உண்டு, அதுதான் மனிதன். ஸ்திரீ மனிதனிலிருந்து தோன்றின உப பொருள். மனிதன் ஸ்திரீக்காக உண்டாக்கப்பட வில்லை, ஸ்திரீயே மனிதனுக்காக உண்டாக்கப்பட்டாள். பாருங்கள்? உங்கள் ஆவிக்குரிய சிந்தையை நீங்கள் திறந்து கொடுப்பீர்களானால். பாருங்கள்? பாருங்கள்? 52மனிதன் பூமியில் முதலாவது தோன்றின போது, அவன் ஆணும் பெண்ணுமாக இருந்தான். அவன் ஆண் இனமாக ஆவதற்கு முன்பு, ஆண்மைத்தனமும் பெண்மைத்தனமும் ஒருங்கே கொண்டவனாயிருந்தான். பாருங்கள்? பெண்ணின் ஆவி, சற்று தாழ்ந்த ஆவி. அது பயந்த இயல்பைக் கொண்டது. பிறகு ஆண்மைத் தனம், ஆண். அவர் அவனை வித்தியாசமான ... உலகத்தில் பலுகிப் பெருகுவதற்கென அவர் பெண்ணின் ஆவியை அவனிலிருந்து எடுத்து, அவனுடைய விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்து, பெண்ணை உண்டாக்கினார். அவள் ஆளுகை செய்ய வேண்டியவள் அல்ல! அவள் முதலில் அதைச் செய்த போது, மானிடவர்க்கம் முழுவதும் விழுந்து போவதற்கு அவள் காரணமாயிருந்தாள். பாருங்கள்? ஓ, அது முழுவதும்... அவளே வீழ்ச்சிக்கு காரணம். அதன் பிறகு தேவன் அவளை எடுத்து, ஒரு ஸ்திரீயின் மூலம் தோன்றின கிறிஸ்துவினால் ஜீவனை உலகத்துக்கு திரும்பக் கொண்டு வந்தார். ஆனால் சபையில் போதகராயிருப்பதற்கு ஒரு ஸ்திரீ அனுமதிக்கப் பட்டதாக எங்கும் இல்லை. 53தீமோத்தேயு 3ம் அதிகாரத்தில், “உபதேசம் பண்ண வும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்க வேண்டும்' என்று பவுல் உரைத்திருக்கிறான் (1 தீமோ. 2:15). பாருங்கள்? ஸ்திரீ பிரசங்கம் பண்ணுவது சரியல்ல; அது உண்மை. சில திறமையான பெண் பிரசங்கிகளை நான் கண்டிருக்கிறேன். அவர்களால் நன்றாக பிரசங்கிக்க முடியும் - ஏமி மக்பியர்ஸன் போன்றவர்கள், இன்னும் அநேக பெண்கள். உங்கள் கரத்தை அவர்கள் மேல் சிறிது நேரம் வையுங்கள். பாருங்கள்? அதுவல்ல... அந்நிய பாஷையில் பேசக் கூடியவர்கள் இன்று காலையில் இந்த சபையில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர் என்று நான் அறிவேன். அர்த்தம் உரைப்பவர் இல்லாமல் போனால், அவர்கள் அந்நிய பாஷையில் பேச துணிய மாட்டார்கள். பாருங்கள்? அந்த ஸ்திரீகள். ஒரு குறிப்பிட்ட வம்சத்தில் பிறந்தவர்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், அதனால் அவர்கள்... உங்கள் பிறப்பு அதனுடன் நிறைய சம்பந்தப்பட்டுள்ளது. அது உங்கள் பெயர், உங்களைக் குறித்த எல்லாமே (பாருங்கள்?). என்னவாயினும், அதனுடன் தொடர்பு கொண்டுள்ளது. 54இன்று காலை இங்கு வந்து துப்பாக்கியின் குதிரையை (trigger) இழுத்து ஒரு மனிதனை என்னால் கொல்ல முடியும். ஆனால் அவ்விதம் செய்ய நான் துணிவு கொள்ள மாட்டேன். ஆனால் என்னால் செய்ய முடியும், நிச்சயமாக. பாருங்கள். நீங்கள் ஒரு அணிலைச் சுட்டுக் கொல்ல முடியும். ஆனால் நாம் அவ்விதம் செய்யக் கூடாது. பாருங்கள்? அதே காரியம் தான் பெண்கள் பிரசங்கிக்கும் விஷயத்திலும். நீங்கள் தவறு செய்யாதபடிக்கு இவைகளின் பேரில் கவனமாயிருக்க வேண்டும். இது கர்த்தருடைய கட்டளை. அவர்கள் பவுலுக்கு நிரூபம் எழுதி, “பரிசுத்த ஆவியானவர் எங்களிடம் கூறினார் என்று சொன்ன போது, பவுல் ”தேவனுடைய வார்த்தை உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது? அங்கே தீர்க்கதரிசிகள் யாராகிலும் இருந்தால், நான் கூறுபவை கர்த்தருடைய கற்பனைகள் என்று அவர்கள் ஒத்துக் கொள்வார்கள். (பாருங்கள்? அது உண்மை). எவனாகிலும் இதற்கு முரணாக செயல்பட விரும்பினால், அவன் அறியாதவனாயிருக்க விரும்பினால், அவன் அறியாதவனாயிருக்கட்டும் (பாருங்கள்?) .. அவனைத் தனியே விட்டு விடுங்கள், அவன் விருப்பப்படி செய்யட்டும் (பாருங்கள்?) நீங்களோ அதற்கு மாறாக எதையும் செய்யாதிருங்கள்' என்கிறான். அவள் சபையில் பேசக் கூடாது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். 55அங்குதான் உங்கள் மேய்ப்பரோ அல்லது மற்றவரோ, ஆவிக்குரியவரா இல்லையா என்பதை நீங்கள் நிதானிக்கலாம், பாருங்கள்? பவுல், “ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது. ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு கூறுபவை கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக் கடவன்' என்கிறான். பாருங்கள்? அதன் காரணமாகத்தான், ஜனங்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று நான் கட்டளையிடுகிறேன். பவுல் அவ்விதம் செய்தான். அவன் 'பரலோகத்திலிருக்கிற ஒரு தூதன் வந்து வேறெதையாகிலும் போதித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன்“ என்றான். அது ஏற்கனவே இந்த சபையில் போதிக்கப்பட்டுள்ளது. எந்த மனிதனாகிலும் வந்து... பரலோகத்திலிருக்கிற ஒரு தூதன் வந்து, ”ஸ்திரீகள் பிரசங்கம் பண்ணலாம். அவர்கள் பிரசங்கிகளாயிருக்கலாம். அவர்களை போதகராக அபிஷேகம் பண்ணுங்கள்“ என்று சொல்வானானால், ”அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்“ என்று வேதம் உரைக்கிறது. இங்கு அது தேவனுடைய கட்டளையாயுள்ளது. 56வாழ்த்தும்போது கிறிஸ்தவ மனிதரும் ஸ்திரீகளும் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்வது (ஓ!) சரியா? இல்லை, ஐயா! இல்லவே இல்லை! இல்லை, ஐயா! நீங்கள் ஒரே ஒரு பெண்ணைத்தான் முத்தமிடலாம், சகோதரனே. அது உங்கள் மனைவி (பாருங்கள்?), அல்லது உங்கள் பிள்ளையை, அல்லது பாருங்கள்? “அது சரியா... அதை சரியாக படித்தேனா என்று பார்க்கட்டும்: வாழ்த்தும் போது கிறிஸ்தவ மனிதரும் ஸ்திரீகளும் ஒருவரை யொருவர் முத்தமிட்டுக் கொள்வது சரியா?” இல்லை, ஐயா! இல்லவே இல்லை! அது... அதை ஒரு போதும் தொடங்கி விடாதீர்கள்! ஆம், ஐயா! வேண்டாம், ஐயா! ஸ்திரீகளிடத்திலிருந்து விலகியிருங்கள். அவர்களை விட்டுப் புறம்பேயிருங்கள். முற்றிலும் உண்மை. இப்பொழுது, அவர்கள் நமது சகோதரிகள். ஆனால் செய்யாதீர்கள். இப்பொழுது, அவர்களுக்கு அது உள்ளது. அது ... அது பெந்தெகொஸ்தே சபைகளிலும் கூட நுழைந்து விட்டது, அது “சுயாதீன அன்பு” (free love) என்று அழைக்கப்படுகிறது. யாராகிலும் அவ்விதம் செய்வார்களானால், அதை விட்டு விலகியிருங்கள். அது உண்மை ! நீங்கள் எவ்வளவு சுத்தமாயிருந்தாலும், எனக்கு கவலையில்லை.... நீங்கள் என் சகோதரன், நீங்கள் ஒரு நல்ல பரிசுத்தமாக்கப்பட்ட, பரிசுத்த மனிதன் என்று நான் நம்புகிறேன். நீங்கள் எவ்வளவு பரிசுத்தமாயிருந்தாலும், எனக்குக் கவலையில்லை; நீங்கள் இன்னும் ஒரு மனிதனே; அவள் எவ்வளவு பரிசுத்தமாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை; அவள் இன்னும் ஒரு ஸ்திரீயே. உங்களுக்கு விவாகமாகும் வரைக்கும் அதை விட்டு விலகியிருங்கள். அவ்விதம் நீங்கள் செய்யுங்கள் 57ஞாபகம் கொள்ளுங்கள், சரீரமானது... இப்பொழுது நான் இரு சாராரிடமும் பேசப் போகிறேன். அப்பொழுது வயது வந்த நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இது ஆண்களும் பெண்களும் கலந்துள்ள கூட்டம். ஆனால் நான் உங்கள் சகோதரன். இது கேட்கப்பட்ட ஒரு கேள்வி. பாருங்கள்? மனித குலத்தைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு சுரப்பிகள் (glands) உண்டு. பெண்ணுக்கு பெண் சுரப்பி உள்ளது, இன சுரப்பி. ஆணுக்கு ஆண் சுரப்பி உள்ளது. இன சுரப்பி. இந்த சுரப்பிகள் மனித உதடுகளில் அமைந்துள்ளன. அது உண்மை. மற்றும் ஒன்றைத் தொடங்க வாய்ப்புண்டு, அதாவது மனிதன் வேறொரு மனிதனை வாயில் முத்தமிடுதல். அது அசுத்தமான செயல்! அது அசுத்தம்! அது என்ன செய்கிறது? அது ஓரினப் புணர்ச்சிக்காரரைத் தோற்றுவிக்கிறது. அதிலிருந்து விலகியிருங்கள்! நீங்கள் சொல்லலாம்... 58அண்மையில் ஒரு ஆள் என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, அவர்கள் ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தினால் வாழ்த்தினார்களே' என்றார். அவர்கள் கழுத்தின் பின்புறத்தில் முத்தமிட்டனர். அவர்கள் கழுத்தின் மேல் விழுந்து அவர்களைக் கழுத்தின் பின்புறத்தில் முத்தமிட்டனர். அது கைக்குலுக்குதல் உள்ளே வருவதற்கு முன்பு. அது ஒரு வாழ்த்துதல். அப்படித்தான் அது உள்ளது. அவர்கள் ஒருவர் கைகளை ஒருவர் குலுக்குவதில்லை; அவர்கள் ஒருவரையொருவர் தழுவி, ஒருவரையொருவர் கழுத்தின் பின்புறத்தில் முத்தமிட்டனர் - உதடுகளிலோ, முகத்திலோ அல்ல. அவ்விதம் செய்வது சீர்குலைதலை உண்டாக்கும். அதிலிருந்து விலகியிருங்கள். அவ்விதம் செய்யாதீர்கள்! இந்நாட்களில் நாம் ஒருவரோடொருவர் கைகுலுக்குகிறோம். நீங்கள் விரும்பினால்... உங்கள் சகோதரனைக் கட்டித் தழுவி, அவரைக் கழுத்தின் பின்புறத்தில் முத்தமிடலாம். அல்லது அவர் உங்களை கழுத்தின் பின்புறத்தில் முத்தமிடலாம், அதில் தவறொன்று மில்லை. ஆனால் ஒரு ஸ்திரீயை முத்தமிடாதீர்கள். அவளும் உங்களை முத்தமிட அனுமதிக்காதீர்கள். பாருங்கள்? அது உண்மை! நீங்கள் அவள் கையைப் பிடித்து. “ஒரு நிமிடம் பொறு. சகோதரியே. ஒரு நிமிடம்; இதை நேராக்கிக் கொள்வோம்” என்று சொல்லுங்கள். எனவே அதை செய்யுங்கள். 59சற்று முன்பு, பிரசங்கத்தின் தொடக்கத்தில் நான் உங்களிடம் என்ன கூறினேன்? தொண்ணூறு மைல் வேகத்தில் ஒரு கார் சாலையின் வழியாக வருவதைக் காண்பீர்களானால், அதன் வழியிலிருந்து விலகுங்கள். அது உண்மை! நீங்கள் அப்படிப்பட்ட ஒரு சிறு மாற்றத்தை ஏதாகிலும் ஒன்றில் காணும்போது, அதிலிருந்து விலகுங்கள். அவ்விதமான தரையில் நீங்கள் இருக்கக் கூடாது. சாத்தான் உங்களுக்கு முன்பாக ஏதாவதொன்றைக் கொண்டுவந்து, அது உங்கள் ஆத்துமாவை சேதப்படுத்தி உங்களை நரகத்துக்கு அனுப்பி விடும். அதிலிருந்து விலகியிருங்கள்! பொல்லாங்கை கண்டால் அதைப் புறக்கணியுங்கள். அது உண்மை. மனிதனாக இருங்கள், ஸ்திரீயாக இருங்கள்.... ஒரு நிமிடம் நான் ஸ்திரீகளை ஆதரித்து பேசப் போகிறேன். அது வழக்கத்துக்கு மாறானது, இல்லையா? அவர்கள், “ஓ.. ஸ்திரீயே அதற்கு காரணம்! ஓ, அது ஸ்திரீயின் தவறு. அவள் தன் வழியை விட்டு விலகாமல் இருந்தால், மனிதனும் அவன் வழியை விட்டு விலகாமல் இருந்திருப்பான்' என்கின்றனர். அது உண்மை. அது உண்மையென்றே வைத்துக் கொள்வோம். அவள் தன் வழியை விட்டு விலகிவிட்டாள். ஒரு கெட்ட ஸ்திரீ இல்லாமல் போனால், மனிதன் கெட்டவனாக இருக்க முடியாது; ஆனால் கெட்ட மனிதன் இல்லாமல் ஒரு கெட்ட ஸ்திரீ இருக்க முடியாது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது உண்மை! 60தேவனுடைய புத்திரன் என்று உரிமை கோருபவனே, உன்னுடைய கொள்கைகள் எங்கே? ஒரு ஸ்திரீ தன் வழியை விட்டு விலகினாலும், நீ தேவனுடைய புத்திரன் அல்லவா? நீ அவளைக் காட்டிலும் உயர்ந்த, அதிக பெலமுள்ள பாண்டம் அல்லவா? அவளை பெலவீனமான பாண்டம் என்று வேதம் அழைக்கிறதே. அவள் பெலவீனமாயிருந்தால், உன்னை தேவனுடைய மனிதனாகக் காண்பி. அவளிடம், “சகோதரியே, நீ தவறாய் இருக்கிறாய்' என்று சொல். அது உண்மை! அவ்விதம் நான் செய்திருக்கிறேன், மற்ற கிறிஸ்தவர்களும் செய்துள்ளனர். நீ கிறிஸ்தவனாக இருக்கும் வரைக்கும் அவ்விதம் செய்வாய். உன்னைக் கிறிஸ்தவனாகக் காண்பி. நீ தேவனுடைய புத்திரன். உனக்கு ஸ்திரீயைக் காட்டிலும் உன் மேல் அதிக கட்டுப்படுத்தும் வல்லமை உள்ளது. அவள் பெலவீனமாயிருந்தால். அவள் பெலவீனமானவள் என்பதை அடையாளம் கண்டு கொள். அவளுடைய தவறுகளைப் புரிந்து கொள், அவளைத் திருத்த முயற்சி செய். அவளிடம், 'சகோதரியே, நாம் கிறிஸ்தவர்கள். நாம் அவ்விதம் செய்யக் கூடாது என்று சொல். பார்? உண்மையான ஒரு மனிதனாயிரு, தேவனுடைய புத்திரனாக இரு. ஸ்திரீகளை கவனி. அங்கு தான் தொடக்கத்தில் பெரிய வீழ்ச்சி உண்டானது. அது சாத்தான் ஏவாளுடன் கூட. அதன் மூலமாகத் தான் மானிட வர்க்கம் முழுவதுமாக விழுந்து போனது. நீ தேவனுடைய புத்திரனாயிருப்பாயானால், பெலமுள்ளவனாயிரு: உண்மையில் ஒரு மனிதனாயிரு. நீ அவ்விதம் இராமல் போனால், அவ்விதம் ஆகும் வரைக்கும் பலிபீடத்தில் தங்கியிரு. பொல்லாங்கு தோன்றும் போதே, அதை புறக்கணித்து விடும். இந்த விதமான வாழ்த்துதலை இப்பொழுது தொடங்காதே. 61சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் என்னிடம், அவர்கள் இரண்டு மூன்று முறை இங்குள்ள என் சபையில் கண்டதாக... இந்த சபையில் உள்ளவர்கள் அல்ல, ஆனால் இந்த சபைக்கு வெளியிலிருந்து வந்த மக்கள் செய்வதை. இன்று காலை நீங்கள் இங்கு உட்கார்ந்திருக்க நேர்ந்தால், இதை உங்களுக்கு மிகவும் ஆழமாக பதிய வைக்கப் போகின்றேன். பாருங்கள்? ஸ்திரீகள், வாலிப ஸ்திரீகள் வருவதும், இந்த மனிதர் இந்த ஸ்திரீகளை முத்தமிடுவதும். அவ்விதம் செய்யாதீர்கள்! அதிலிருந்து விலகியிருங்கள். இதை - ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! அவள் வாலிபப் பெண்ணாக, விவாகமாகாதவளாக இருப்பாளானால், என்றாவது ஒரு நாள் அவள் யாரோ ஒருவரின் மனைவியாக இருப்பாள். அதைச் செய்ய உங்களுக்கு அதிகாரமே கிடையாது. அவளை விட்டு விலகியிருங்கள். அவளுக்கு வாழ்த்து கூற நீங்கள் விரும்பினால், ஒரு தேவனுடைய புத்திரனாக, அவளுடன் கைகுலுக்கி, “எப்படியிருக்கிறாய், சகோதரியே?” என்று கேளுங்கள். அத்துடன் அது முடிவு பெறட்டும். பாருங்கள்? இத்தகைய காரியங்களிலிருந்து விலகியிருங்கள்; அது அசுத்தம்! அது விரைவில் உங்களைத் தொல்லையில் மாட்டி விடும். நீங்கள் சும்மா.... ஓ . அது... பாவம் மிகவும் எளிதாகவும், பசியை உண்டு பண்ணுவதாகவும், இனிமையாகவும் உள்ளது. அதற்குள் விழுவது மிகவும் எளிது. செய்யக்கூடிய சிறந்த காரியம் என்னவெனில், அது தோன்றுவதைக் காணும்போதே, அதிலிருந்து விலகியிருத்தலே. திரும்பிப் போய் விடுங்கள். உண்மையான கிறிஸ்தவனாக இருங்கள்! 62மனிதன் ஒருவரையொருவர் முத்தமிடும் விஷயத்தில், உங்கள் சகோதரனை நீங்கள் கழுத்தில் முத்தமிட்டால், அவ்விதம் செய்ய நீங்கள் விரும்பினால், அது சரியானது. ஆனால் எந்த மனிதனையும் உதடுகளில், வாயில், முத்தமிடாதீர்கள். அப்படி ஒன்றும் செய்து விடாதீர்கள். ஏனெனில் அது சரியல்ல. பாருங்கள்? தொடக்கத்திலேயே ஏதோ தவறுள்ளது என்பதை அது காண்பிக்கிறது. பாருங்கள்? எனவே அதிலிருந்து விலகியிருங்கள். அதைப் புறக்கணியுங்கள். அதை இங்குள்ள இந்த கூடாரத்தில் தொடங்கி விடாதீர்கள். வேண்டாம், அதை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்க முடியாது. பாருங்கள்? உங்கள் சகோதரனை நீங்கள் காண விரும்பினால், அவரை கழுத்தில் முத்தமிட விரும்பினால், நல்லது. நீங்கள் முன்சென்று அதைச் செய்யுங்கள். ஆனால் ஜனங்களை வாயில் முத்தமிடாதீர்கள். ஏனெனில் அது கிரியை செய்யாது, அது சரியல்ல. அது ஒரு சீர்குலைதலைத் தொடங்குகிறது. அது ஓரினப் புணர்ச்சிக்காரர்களையும் அப்படிப்பட்ட காரியங்களையும் தோன்றச் செய்கிறது. இப்படிப்பட்ட விஷயங்களைச் செய்யத் தூண்டுவது இரண்டு காரியங்களே... நீங்கள் தொடங்கினால் ... அந்த மனிதன்... நான் கண்டிருக்கிறான் ... ஓ. பலமுறை, ஜனங்களின் மத்தியிலே. அவர்கள் வருவார்கள். சபைகளில் கண்டிருக்கிறேன். போதகர் வந்து ஒவ்வொரு சகோதரியிடமும் சென்று அவளைத் தழுவி முத்தமிட்டு அவளை உட்காரச் செய்வார். “எப்படியிருக்கிறாய். சகோதரியே, அல்லேலூயா! மற்றொரு சகோதரியிடம் சென்று அவளை முத்தம்மிடுவார். இப்படியாக சபை முழுவதிலும் சென்று செய்வார். என்னைப் பொறுத்த வரையில் அது தவறு! 63நான் ஃபின்லாந்தில் இருந்த போது, நாங்கள் எல்லாரும் அங்கு சென்றிருந்தோம்.... உங்களுக்கு அது ஒருவேளை தெரிந்திருக்கும், அங்கு நாங்கள் கூட்டங்கள் நடத்தினோம். நான் ஒய்.எம். சி.ஏ.வுக்கு சென்றிருந்தேன். ஃபின்லாந்தில் சோப்புகள், டிடெர் ஜெண்டுகள் எதுவும் இருக்கவில்லை. என்னிடம் சவர சோப்பு இருந்தது. நாங்கள் ஒவ்வொருவரும் அங்கு நின்று கொண்டு, அந்த சவரசோப்பை உபயோகித்து குளிக்க வேண்டியதாயிற்று. எங்களிடம் ஒரு துண்டு சோப்பு மாத்திரமே இருந்தது. ஃபின்லாந்தில் சோப்புகள் கிடையாது. அவர்கள் ஏதோ ஒருவகை இரசாயனப் பொருளை உபயோகித்து குளிக்கிறார்கள். அது உங்கள் தோலை அரித்து விடுகிறது. எனவே அவர்கள். அவர்கள் எங்களை ஃபின்லாந்து தேசத்து 'சானா' குளியலுக்கு கொண்டு போகப் போவதாக கூறினார்கள். நாங்கள் ஒய்.எம்.சி.ஏ.வுக்குச் சென்றோம். 'சானா' குளியலுக்காக அங்கு சென்றோம். அது பிரபலம் வாய்ந்த ஃபின்லாந்து தேசத்து 'சானா'. இதற்கு முன்பு நான் 'சானா' குளியலை எடுத்திருக்கிறேன். அது நன்றாயிருந்தது. நான், 'நல்லது. நாம் ஒய்.எம். சி.ஏ.வுக்குப் போகப் போகிறோம். அது நன்றாயிருக்கும்“ என்று எண்ணினேன். 64ஆனால் அங்கு போக நான் புறப்பட்ட போது, பரிசுத்த ஆவியானவர் என்னிடம், “அப்படிச் செய்யாதே (ஓ, பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளது மிகவும் நல்லது), அப்படிச் செய்யாதே என்றார். நல்லது. நான் உடனே, “இன்று காலை எனக்கு குளியல் அவசியமில்லை என்று நினைக்கிறேன் என்று சொன்னேன். டாக்டர் மானியனும் மற்றவர்களும், “ஓ, சகோ. பிரான்ஹாமே, என்னே, அங்கே சில பெரிய கண்ணாடி அறைகள் உள்ளன. அது மிகவும் அழகானது' என்றனர். வழக்கமாக அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், அவர்கள் இந்த தண்ணீரை அந்த பாறைகளின் மேல் ஊற்றி அதை ஆவியாக மாற்றி, உங்களை 'பிர்ச் (birch) மரத்தின் இலைகளால் இப்படி அடிப்பார்கள். அதன் பிறகு நீங்கள் வெளியே ஓடி குளிர்ந்த தண்ணீரில் குதிக்க வேண்டும். ஃபின்லாந்து நாட்டினர் பனிக்கட்டி போன்றவைகளுக்குள் செல்கின்றனர். (ஒலிநாடாவில் முதலாம் பக்கம் முடிந்து இரண்டாம் பக்கம் தொடர்ச்சி இல்லாமல் தொடங்குகிறது - ஆசி). ...நியாயத்தீர்ப்படையாமல், மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசிக்கிறான். நான், “அதை நான் சொல்லவில்லை. அதை இயேசு கிறிஸ்து உரைத்தார்' என்றேன். அவர், “அப்படியானால் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். சவுல் இரட்சிக்கப்பட்டான் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டார். நான், “சவுல் ராஜாவா? என்று கேட்டேன். அவர் ”ஆம்“ என்றார். 65அதனால் ஒய்.எம்.சி.ஏ வரை சென்றோம். அவர்கள் உள்ளே வந்தார்கள், அந்த மனிதர்கள் அனைவரும் நின்று, என்னை வாழ்த்தினர். மேலும், ஓ, அவர்கள் பேப்பரில், முதல் மற்றும் இரண்டாவது பக்கத்தில், ஒவ்வொரு நாளும், கூட்டங்களில் தலைப்புச் செய்திகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் சுற்றி இருந்தனர், நான் ஒரு சிறிய அறைக்குள் சென்று அமர்ந்தேன், அவர்கள் அனைவரும் ஆடைகளை அவிழ்க்க அறைக்குள் சென்றனர். அவர்கள் ஆடைகளை அவிழ்ப்பதற்காக அங்கு சென்றிருந்தபோது, ​​இங்கே அழகான தோற்றமுடைய சிறிய பின்னிஷ் பொன்னிற தலை கொண்ட பெண் ஒருவர் வந்தார். மேலும் அவர்கள் நல்ல மனிதர்கள். அவர்கள் எவ்வளவு சுத்தமான, ஒழுக்கமான மனிதர்கள். இதோ தோளில் துணியுடன் வருகிறாள். அறைக்குள் நடக்க ஆரம்பித்தான். நான், “ஏய், ஏய், ஏய். நிறுத்து. ப்ஸ்ஸ்.” நான் அவளைத் தடுக்க முயன்றேன். அவள் சுற்றிப் பார்த்து சிரித்தாள், உள்ளே சென்றாள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் (ஆண்களுக்கு ஆடை இல்லை), ஒரு துண்டு கொடுத்தாள். ஒவ்வொரு பெண்ணும் இறங்கி வந்து, ஒரு ஆணை அழைத்து, அவர்களை மீண்டும் அங்கே அழைத்துச் சென்று, அப்படியே தேய்த்தார்கள். பரிசுத்த ஆவி என்றால் என்ன என்று பார்த்தேன். அதனால் நான் மீண்டும் வெளியே வந்ததும், “டாக்டர். மன்னினேன்,” நான் சொன்னேன், “அது எப்படி வரும், நீங்கள் கிறிஸ்தவர்களாக இருந்துவிட்டு, அந்த சானாக்களை அவர்களுடன் எடுத்துச் செல்லுங்கள்...” “ஓ,” அவர் கூறினார், “அந்த ஸ்க்ரப் பெண்கள், சகோதரர் பிரான்ஹாம்.”நான் சொன்னேன், “அவை என்னவாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. இது தவறு. இது சரியன்று.” நான் சொன்னேன், “இயற்கையே உங்களுக்கு கற்பிக்கிறது.”அவர் கூறினார், “சரி, சகோதரர் பிரான்ஹாம், அவர்கள் அமெரிக்காவில் உள்ள உங்கள் செவிலியர்களைப் போலவே குழந்தைகளிலிருந்து ஸ்க்ரப் செய்ய வளர்க்கப்படுகிறார்கள், அது போன்ற விஷயங்கள்; அவர்கள் அதை உயர்த்தியுள்ளனர்.”நான், “அவை என்னவாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை; அது இன்னும் தவறு. முற்றிலும். அது ஆணும் பெண்ணும், அவர்கள் பிரிந்து, ஒருவரையொருவர் உடுத்திக்கொள்ள வேண்டும். ஆமென்.நான் அதைத் தொடங்க விரும்பவில்லை, சிறிது நேரம் கழித்து நான் பிரசங்கிப்பேன், இல்லையா? எல்லாம் சரி. 66கேள்வி: “தயவுசெய்து அப்போஸ்தலிக்க விசுவாசத்தை விளக்குங்கள்.”அது ஒரு கேள்வி. ஒன்று, இரண்டு மற்றும் மூன்று கேள்விகள் உள்ளன. அப்போஸ்தலிக்க விசுவாசம் என்றால் “அப்போஸ்தலர்களின் நம்பிக்கை” என்று பொருள். அப்போஸ்தலிக்க விசுவாசம் என்றால், நீங்கள் பைபிளுடன் இருங்கள். இப்போது, ​​இன்று அப்போஸ்தலிக்க நம்பிக்கை என்று அழைக்கப்படுவது, அவர்களில் பலர் பைபிளுடன் இருப்பதில்லை. ஆனால் அப்போஸ்தலிக் என்றால் பைபிளின் அப்போஸ்தலிக்க நம்பிக்கை, அப்போஸ்தலிக்க நம்பிக்கை. எல்லாம் சரி. 67கேள்வி: “...மேலும் தங்களை அடிப்படைவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் குழு, இந்த இரண்டு குழுக்களும் காப்பாற்றப்பட்டதா?”இப்போது, ​​எனக்குத் தெரியாது. பார், எனக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை. இப்போது, ​​“இந்த குழுக்கள் காப்பாற்றப்பட்டதா?” எனக்கு தெரியாது.ஆவிக்கும், ஆவிக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குங்கள்...சரி, இப்போது அது வேறு கேள்வி. இந்த இரண்டு குழுக்களும் காப்பாற்றப்பட்டதா? இப்போது, ​​எனக்குத் தெரியாது. பார், எனக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை. இப்போது, ​​இந்தக் குழுக்கள் காப்பாற்றப்பட்டதா? எனக்கு தெரியாது. ஆவிக்கு இடையிலான வேறுபாட்டை விளக்குங்கள். . . . என்பது இப்போது வேறு கேள்வி. இந்த இரண்டு குழுக்களும் காப்பாற்றப்பட்டதா? நான் அதை உங்களுக்கு இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் சொல்கிறேன், எனக்குத் தெரியாது என்று சொல்கிறேன். எனக்கு தெரியாது. இப்போது, ​​நினைவில் கொள்ளுங்கள், இதோ என் எண்ணங்கள். அது தவறாக இருக்கலாம். ஒரு ரோமன் கத்தோலிக்கராகவோ அல்லது அவர் யாராக இருந்தாலும், மெதடிஸ்ட், பிரஸ்பைடிரியன், சர்ச் ஆஃப் கிறிஸ்து, லூத்தரன், எதுவாக இருந்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பி, அவருடைய இரட்சிப்புக்காக அவரை உறுதியாக நம்பினால், அவர் இரட்சிக்கப்பட்டார் என்று நான் நம்புகிறேன். ஆனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபை அதைச் செய்வதில்லை. தேவாலயம் அவர்களைக் காப்பாற்றுகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள், பாருங்கள். அவர்களின் இரட்சிப்பு தேவாலயத்தில் உள்ளது. இந்த பாதிரியார் சில காலத்திற்கு முன்பு இங்கே காற்றை நிறுத்தியது போல் வேறு இரட்சிப்பு இல்லை [டேப்பில் உடை] கிறிஸ்து, அது சரி. சபையால் அல்ல, கிறிஸ்துவால்.இப்போது, ​​இந்த அப்போஸ்தலர்கள் மற்றும் அடிப்படைவாதிகள் என்றால், இப்போது, ​​தங்களை அழைக்கிறார்கள். . . . 68இப்போது, ​​ஒரு அடிப்படைவாதியைப் போல, சிறிது காலத்திற்கு முன்பு என்னிடம் வந்து, அவர் என்னிடம், “நீ ஒருவித மெலிந்த கால்வினிஸ்ட், இல்லையா?” என்றார்.நான், “கால்வின் பைபிளில் இருக்கும் வரை நான் அவருடன் இருக்கிறேன்” என்றேன். நான் சொன்னேன், “நான் பைபிளுடன் செல்கிறேன், கால்வின் பைபிளில் இருந்தால்; ஆனால் அவர் பைபிளை விட்டு வெளியேறினால், நான் பைபிளை நம்புகிறேன்.அவர் சொன்னார், ”சரி,“ அவர் கூறினார், ”நான் உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஒரு மனிதன் ஒரு முறை இரட்சிக்கப்பட்டால், அவன் ஒருபோதும் இழக்கப்படமாட்டான் என்று நீங்கள் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று நீங்கள் சொன்னீர்கள். நான் சொன்னேன், “அவர் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறார், அவர் ஒருபோதும் ஆக்கினைக்குள்ளாகவோ அல்லது நியாயத்தீர்ப்புக்குள் வரமாட்டார், ஆனால் ஏற்கனவே மரணத்திலிருந்து ஜீவனுக்குக் கடந்துவிட்டார்” என்று வேதம் கூறுகிறது. “நான் சொன்னேன், ”அது நான் அல்ல. அதைத்தான் இயேசு கிறிஸ்து சொன்னார்.“அதற்கு அவர், ”நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்“ என்றார். ”சவுல் இரட்சிக்கப்பட்டார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?“நான், ”சவுலே, ராஜா சவுலா?“ என்றேன்.அவர், ”ஆம்“ என்றார்.”ஏன்,“ நான் சொன்னேன், ”நிச்சயம்.“ நான், “நிச்சயமாக” என்றேன். அவர். “இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அவன் ஒரு தீர்க்கதரிசி” என்றார். நான், “அது சரியே. அவன் தீர்க்கதரிசிகளுடன் சேர்ந்து தீர்க்கதரிசனம் உரைத்ததாக வேதம் கூறுகிறது (அவனுக்கு தீர்க்கதரிசன வரம் இருந்தது. அவன் ஒரு தீர்க்கதரிசியல்ல, ஆனால் அவனுக்கு தீர்க்கதரிசன வரம் இருந்தது. தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தபோது இவன் அவர்களுடன் இருந்தான். ஆனால் சாமுவேல் அக்காலத்தில் தீர்க்கதரிசியாக இருந்தான் என்று நாமறிவோம். எனவே ...) சவுல் தீர்க்கதரிசிகளுடன் சேர்ந்து தீர்க்கதரிசனம் உரைத்தான்” என்றேன். அவர், “அவன் தீர்க்கதரிசியாயிருந்ததால், அவன் இரட்சிக்கப்பட்டானா?” என்று கேட்டார். நான், “நிச்சயமாக” என்றேன். அவர், “அப்படியானால் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். சவுல் இரட்சிக்கப்பட்டான் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் வேதமோ, கர்த்தர் அவனை விட்டுப் போய் விட்டதாகவும், அவன் தேவனுக்கு சத்துருவானான் என்றும், அவன் தற்கொலை செய்து கொண்டான் என்றும் உரைக்கிறதே! அவன் இரட்சிக்கப் பட்டான் என்று எவ்விதம் கூற முடியும்?' என்றார். 69நான், “நீர் அடிப்படைக் கொள்கைக்காரரா (fundamentalist)? சகோதரனே, அதை நீர் சரியாக வாசிக்கவில்லை; அவ்வளவு தான். வேதம் கூறுவதை நீர் வாசிக்கவில்லை' என்றேன். அவர், “நல்லது. அவன் தேவனுடைய சத்துருவான பிறகு இரட்சிக்கப்பட முடியாது” என்றார். நான், “சவுல் இரட்சிக்கப்பட்டான் என்றேன். அவர், “ஓ!” என்றார். நான், “அவன் தீர்க்கதரிசியாயிருந்தால், அவன் இரட்சிக்கப்பட வேண்டும். பாருங்கள்? தேவன் அவனை இரட்சித்தார். நாம் வழக்கமாக கூறுவது போல, தேவன் சிகப்பு இந்தியர் கொடுப்பது போல் கொடுப்பவர் அல்ல. அவர் அவ்விதம் செய்வதில்லை... நல்லது. உங்களை அவர் இழக்கப் போகிறார் என்று அறிந்து கொண்டே தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பாரானால், பரிசுத்த ஆவியை அவர் முதற்கண் கொடுத்ததே எத்தகைய மூடச் செயலாயிருக்கும்!” என்றேன். 70நீங்கள் பரிசுத்த ஆவியைப் பாவனை செய்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டது போல் நடிக்கலாம். ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பீர்களானால், தேவன் உங்கள் ஆதி முதல் அந்தம் வரைக்கும் அறிந்திருக்கிறார். அது உண்மை! அது வியாபாரத்தை தளர்ந்த முறையில் நடத்துவது போலிருக்கும். தேவன் அவ்விதம் நடத்துபவரல்ல. அவர் முடிவற்றவர். அவர் தொடக்கம் முதல் முடிவு வரைக்கும் எல்லாவற்றையும் அறிந்திருப்பவர். இங்கு என்னென்ன இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்தவர். பூமியில் இருக்கப் போகின்ற ஒவ்வொரு மலரையும், ஒவ்வொரு சிறு பூச்சியையும், உலகத் தோற்றத்துக்கு முன்பே அவர் அறிந்திருந்தார். எனவே பாருங்கள், அவருடைய அலுவலை அவர் ஏன் அவ்விதம் நடத்த வேண்டும்? அவர் அவ்விதம் செய்வதில்லை. நீங்கள் கவனிப்பீர்களானால், நீங்கள் நித்தியமாக இரட்சிக்கப்பட்டு விட்டீர்கள். அதை நான் வேதவாக்கியங்களைக் கொண்டு நிரூபிக்க முடியும். நாம் அதை எத்தனையோ முறை செய்திருக்கிறோம். ஆனால் மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்க நாம் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில், இதை மட்டும் கூற விரும்புகிறேன். அந்த ஆள் என்னிடம், “நல்லது, சவுலைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?” என்றார். நான், 'நிச்சயமாக சவுல் இரட்சிக்கப்பட்டான்“ என்றேன். நான் தொடர்ந்து, சவுல் பின்மாற்றமடைந்தான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அவன் பின் மாற்றமடைந்து தேவனை விட்டு விலகிப் போனான். ஏனெனில் அவன் பேராசை பிடித்தவன். அவனுக்கு பண ஆசை இருந்தது என்றேன். எல்லாவற்றையும் அழித்துப் போட வேண்டும் என்று சாமுவேல் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அவனை எச்சரித்திருந்த போதிலும், அவன் பலிகளைக் கொண்டு வந்தான். அவன் ராஜாவையும் கூட காப்பாற்றினான், அவன் நிறைய பொருட்களை அழிக்காமல் கொண்டு வந்தான். ஏனெனில் பாருங்கள்? தேவனுடைய வார்த்தை உரைக்கிறபடியே, அதை பின்பற்றுவதற்கு பதிலாக, உங்கள் சொந்த கருத்துக்களை அதில் நுழைத்து விடுகிறீர்கள். அங்கு தான் நீங்கள் பின்மாற்றமடைகிறீர்கள். ஸ்தாபனங்களையும் மற்றவைகளையும் குறித்து நான் கொண்டுள்ள கருத்து அதுவே அவர்கள் வார்த்தையைப் பின் பற்றாத காரணத்தால் பின் மாற்றமடைகின்றனர். நீங்கள் வார்த்தையை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்தால், அவர்கள் அதற்கு புற முதுகு காட்டி, “ஓ, எங்கள் சபை இதை தான் போதிக்கிறது” என்கின்றனர். அது சரியல்ல, தேவன் உரைத்துள்ளதே முக்கியம் வாய்ந்தது. 71சாமுவேல், இல்லை சவுல், அங்கு சென்று எல்லாவற்றையும் முழுவதுமாக அழித்துப் போடும்படிக்கு கட்டளை பெற்றான். அதை செய்வதற்கு பதிலாக அவன் பலிக்காக சிலவற்றை சேகரித்தான், அவன் ராஜாவின் உயிரையும் காப்பாற்றினான், எல்லாவற்றையும் செய்தான். சாமுவேல் அவனிடம் நடந்து சென்று, தேவனுடைய ஆவி அவனை விட்டுப் போய் விட்டதாகக் கூறினான் - அப்படி எல்லாமே. சாமுவேல் மரித்தான். இரண்டு ஆண்டுகள் கழித்து சவுலுக்கு... தேவனுடைய ஆவி அவனை விட்டுப்போய் விட்டது, ஆனால் அவன் இழக்கப்படவில்லை. நிச்சயமாக இழக்கப்படவில்லை, அபிஷேகம் அவனை விட்டுப் போய் விட்டது. இப்பொழுது கவனியுங்கள், என்ன நடந்ததென்று. சவுல், வெகு தூரம் கர்த்தரை விட்டு விலகிப் போன பிறகு, அவன் யுத்தத்துக்கு சென்றான். அவன் யுத்தத்துக்கு செல்ல ஆயத்தமானான். யுத்தத்துக்கு செல்வதைக் குறித்து அவன் கவலை கொண்டான். அவன் கர்த்தரிடத்தில் ஒரு சொப்பனம் தரும்படி கேட்டான். கர்த்தர் அவனுக்கு எந்த சொப்பனமும் அருளவில்லை. அந்நாட்களில் தேசத்தில் தீர்க்கதரிசிகள் எவரும் இருக்கவில்லை. சாமுவேல் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். தீர்க்கதரிசனம் உரைப்பவர்கள் அவர்களுக்கு இருந்தனர். ஆனால் தேவனிடத்திலிருந்து பதில் கிடைக்க அவர்களுக்கு எந்த வழியும் இருக்கவில்லை. அவன் ஊரிம் தும்மீமிடத்திற்கும் சென்று அங்கு கேட்டான். ஊரிம் தும்மிமின் மின்னல் பிரகாசம் கூட அவனுக்கு பதிலளிக்கவில்லை. அவன் என்ன செய்தான்? அவன் ஒரு குகைக்குள் ஊர்ந்து சென்றான். அங்கே அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீ இருந்தாள், குறி சொல்லும் ஒருத்தி. அஞ்சனம் பார்க்கிற இவள்.... அவன் வேலைக்காரனைப் போல வேஷம் மாறி அவளிடம் சென்று, “நீ தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் ஆவியுடன் எனக்காக தொடர்பு கொள்வாயா? என்று கேட்டான். அவள், “நல்லது, சவுல் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?” (அவள் சவுலிடம் பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் அதை அறிந்திருக்கவில்லை) “அவர் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறி சொல்லுகிறவர்களையும் கொன்று போடுவதாக சொல்லியிருக்கிறாரே” என்றாள். அவன், “நான் சவுலிடமிருந்து உன்னைக் காப்பாற்றுவேன். நீ. எனக்காக சாமுவேலின் ஆவியுடன் தொடர்பு கொள்” என்றான். எனவே அஞ்சனம் பார்க்கிற அந்த ஸ்திரீ தன் மந்திர சக்தியால் செயல்படத் தொடங்கினாள். முதலாவதாக என்ன தெரியுமா, சாமுவேல் எழும்பி வருவதை, அவனுடைய ஆவி வந்து, அவர்களுக்கு முன்பாக காணக்கூடிய ரூபமாக ஆனதை அவள் கண்டபோது, அவள், “தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறி வருவதைக் காண்கிறேன்” என்றாள். 72அது ஆறுதலாக இருந்தது. வயோதிப சாமுவேல் அங்கு நின்று கொண்டிருப்பதைப் பாருங்கள். அவன் மரித்து இரண்டு ஆண்டுகளாயின. ஆனால் அவன் நின்றுகொண்டிருந்தான். அது மாத்திரமல்ல... அவன் தன் தீர்க்கதரிசியின் அங்கியுடன் அங்கு நின்று கொண்டிருந்தான். அவன் உயிரோடிருந்தது மாத்திரமல்ல, அவன் அப்பொழுதும் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அல்லேலூயா! அவள், சவுலிடம், “நீர் என்னை ஏமாற்றி விட்டீர்” என்றாள். சவுல்,“ சாமுவேலே, எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை; நான் நாளைக்கு யுத்தத்துக்குப் போகிறேன் , கர்த்தருடைய ஆவி என்னை விட்டுப் போய்விட்டது. எனக்கு கர்த்தரிடத்திலிருந்து ஒரு சொப்பனம் கூட கிடைக்கவில்லை. ஊரிம் தும்மீமும் கூட என்னிடம் பேச மறுக்கின்றன. நான் பயங்கரமான நிலையில் இருக்கிறேன் என்றான். - சாமுவேல் சவுலிடம், “நீ தேவனுக்கு சத்துருவாய் இருக்க, என்னை ஏன் என் இளைப்பாறுதலிலிருந்து வெளியே அழைத்தாய்?” பாருங்கள்? சாமுவேல் அவ்விதம் கூறினான். அவன் தொடர்ந்து மற்றவைகளைக் கூறினான். அவன் சொன்னான். எவ்வாறாயினும், அவன் கர்த்தருடைய வார்த்தையை அவனுக்கு உரைத்தான். அவன் அவ்விதம் செய்தபோது... ஞாபகம் கொள்ளுங்கள், அவன் மரித்து இரண்டு ஆண்டுகளாகி விட்டன. பாருங்கள்? ஆனால் அவன், “நான் வார்த்தையை உரைக்கிறேன் என்றான். அவன் அவனிடம் கர்த்தருடைய வார்த்தையை உரைத்தான். அவன், ”நாளைக்கு நீ யுத்தத்தில் மடியப் போகிறாய், உன் குமாரனாகிய யோனத்தானும் உன்னுடன் மடியப் போகிறான். நாளை இரவு இந்நேரம் நீ என்னோடிருப்பாய்“ என்றான். அவன் இழக்கப்பட்டிருந்தால், தீர்க்கதரிசியாகிய சாமுவேலும் இழக்கப்பட்டிருக்க வேண்டும். அது அடிப்படை கொள்கை (fundamentalism); அது ஏன் அவ்விதம் அழைக்கப்படுகிறதென்று காண்கிறீர்களா? பாருங்கள், பாருங்கள்? அவன், ”நாளை இரவு இந்நேரம் நீ என்னோடிருப்பாய்“ என்றான். பாருங்கள்? சவுல் இழக்கப்பட்டிருந்தால், சாமுவேலும் இழக்கப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இருவருமே ஒரே இடத்தில் இருந்தனர். 73இல்லை, இல்லை! அடிப்படை கொள்கைக்காரரே, நீங்கள்... அடிப்படை கொள்கைக்காரர் என்று அழைக்கப்படுபவரே, கிறிஸ்தவ சபை என்று அழைக்கப்படுபவரே. கிறிஸ்தவர் என்று அழைக்கப்படுபவரே - கிறிஸ்தவ மார்க்கம் என்று அழைக்கப்படுவது. இன்றைக்கு நீ அமெரிக் கனாயிருப்பதால் நீ கிறிஸ்தவன் என்று கருதப்படுகிறாய். பார்? அது கிறிஸ்தவ மார்க்கம் என்று அழைக்கப்படுவது. ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்தவர் என்னப்படுபவர் ஆவியினால் மறுபடியும் பிறந்த ஆணும் பெண்ணுமாவர். அதுவே உண்மையில் மற்ற இவர்கள் பாவனை செய்பவர்கள், ஆனால் உண்மை கிறிஸ்தவர்கள் தேவனால் அழைக்கப்பட்டவர்கள். 74ஆவிக்கும் ஆத்துமாவுக்கும் உள்ள வித்தியாசத்தை தயவுகூர்ந்து விளக்குங்கள். நல்லது. அது கடினமான ஒன்று. முதலாவதாக நீங்கள் ஒரு திரியேகன், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைப் போல. பிதா குமாரன், பரிசுத்த ஆவி என்பவை ஒரு நபருக்கு உரிமையான மூன்று பட்டப்பெயர்கள், அவர்தான் இயேசுகிறிஸ்து. நீங்கள் சரீரம், ஆவி, ஆத்துமாவாயிருக்கிறீர்கள். இந்த மூன்றும் சேர்ந்து தான் நீங்கள். அவைகளில் ஒன்று மாத்திரம் இருக்குமானால், நீங்கள் நீங்களாயிருக்க மாட்டீர்கள். இந்த மூன்றும் சேர்ந்து தான் நீங்கள். அன்றொரு நாள் நான் கூறினது போல, “இது என் கை; இது என் விரல்; இது என் மூக்கு; இது என் கண்கள்; ஆனால் நான் யார்?” இது சொந்தமாயுள்ள நான் யார்? அதுதான் எனக்குள்ளே இருக்கும் ஒன்று அது தான் ஞானம். இந்த கண்கள், இந்த கைகள், இந்த சரீரம் இன்றைக்கு உள்ளது போல் இங்கு நின்று கொண்டிருந்த போதிலும், நான் ... என் சரீரம் இங்கிருக்கலாம், ஆனால் நான் போய்விட்டிருக்கக் கூடும், நான் என்னவாயுள்ளேனோ அது எனக்குள்ளே நான் என்னவாயுள்ளேனோ, அது போய் விட்டிருக்கக் கூடும். அந்த பாகம் தான் ஆவி ஆத்துமா என்பது அந்த ஆவியின் சுபாவம், பரிசுத்த ஆவி உங்கள் மேல் வரும்போது அது ஒன்றும் செய்வதில்லை. நீங்கள்... அது உங்கள் ஆவியை ஒரு வித்தியாசமான ஆத்துமாவாக மாற்றி விடுகிறது. அந்த ஆத்துமா அந்த ஆவியின் மேலுள்ள வித்தியாசமான சுபாவமாகும். எனவே ஆத்துமா என்பது உங்கள் ஆவியின் சுபாவம். தொடக்கத்தில் நீங்கள் நீசத்தனமாகவும், பொல்லாதவர்களாகவும், பகை, குரோதம், விரோதம் போன்றவைகளைக் கொண்டவர்களாயும் இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் அன்புள்ளவர்களாயும், இனிமையாயும், தயவாயும் இருக்கிறீர்கள். வித்தியாசத்தைப் பார்த்தீர்களா? அது உங்கள் சுபாவம். நாம் அதை நான் அவ்விதமே அழைப்பேன். உங்கள் ஆத்துமா மாற்றம் பெறுகிறது. பழைய ஆத்துமா செத்து, புதிய ஆத்துமாவாகிய புது சுபாவம் உங்களுக்குள் பிறக்கிறது. பாருங்கள்? 75உங்களுடைய மூளை உங்கள் ஞானம் அல்ல, உங்களுக்குள் இருக்கும் ஆவியே உங்கள் ஞானம். பாருங்கள்? உங்கள் மூளை உயிரணுக்களையும் மற்றவைகளையும் கொண்டது. அதற்கு தானாகவே ஞானம் கிடையாது. அதற்கு அப்படி ஞானம் தானாகவே இருக்குமானால், அது அங்கிருக்கும் வரைக்கும், நீங்கள் மரித்தாலும் உயிரோடெழுந்தாலும், அது எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். பாருங்கள்? அது உங்களுடைய மூளை அல்ல; அது உங்களுக்குள் இருக்கும் உங்கள் ஆவியே. உங்கள் ஆத்துமா அந்த ஆவியின் சுபாவம். அது சரீரத்தை கட்டுப்படுத்தும் ஆவியின் ஆத்துமா . பாருங்கள்? பார்த்தீர்களா? நான் விரைவாகச் செல்ல வேண்டும், ஏனெனில் நமக்கு தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது, நான் நினைக்கிறேன் - அது விளங்கி விட்டது என்று நம்புகிறேன். 76சகோ.பிரான்ஹாமே, கூட்டத்தில் ஸ்திரீகள் சாட்சி சொல்லலாமா அல்லது அந்நிய பாஷையில் பேசலாமா என்பதை தயவுகூர்ந்து விளக்குங்கள் - தயவுகூர்ந்து தெளிவுபடுத்துங்கள். நல்லது, ஒரு ஸ்திரீ பிரசங்கியாயிருப்பாளானால் அவள் கூட்டத்தில் பிரசங்கிக்கவே கூடாது. ஆனால் அவளுக்கு அந்நிய பாஷையில் பேசும் வாரம் இருந்து, அவள் தீர்க்கதரிசனமும் மற்ற வரங்களும் கொண்டவர்கள் கூடியிருக்கும் இடத்தில் இருப்பாளானால், அவளுக்கு அப்படி செய்ய உரிமையுண்டு என்பது என் கருத்து. ஏனெனில் வேதாகமத்தில் மிரியாம் போன்ற தீர்க்கதரிசினிகளை நாம் காண்கிறோம். அவர்களுக்கு கட்டுப்பாடு எதுவும் இருக்கவில்லை... என் சிறு பிரசங்கத்தை செய்ய எனக்கு நேரமிருந்தால், அதைக் குறித்து பேசுவேன். பாருங்கள்? 77ஸ்திரீகள் வரங்களைக் கொண்டவர்களாய் இருந்தால்... நாம் வெகு சீக்கிரத்தில் ஒன்றாக கூடும்போது, நாம் கடைபிடிக்க வேண்டிய சரியான வழி ... நமது சபை இன்னும் சிறிது அதிகமாக அனுபவம் பெறும்போது... உங்களுக்குத் தெரியுமா, இன்னொரு குழு, இன்னொரு சபை, இந்த சபையுடன் இணையப் போகிறது, அவர் களுக்கு உட்கார சபையில் போதிய இடவசதி கிடைத்தவுடனே. இன்னொரு சபை இந்த சபையுடன் இணையப் போகிறது. அது ஒரு ஸ்தாபன மல்ல, அவர்கள் ஒரு கூட்டமாக இந்த சபைக்கு வரப் போகிறார்கள். அவர்கள் வரங்களைப் பெற்றுள்ள மக்கள். இப்பொழுது, அவர்கள் ஒன்றாக இணைந்த பிறகு, செய்ய வேண்டிய காரியம் என்னவெனில், வரங்களைப் பெற்றுள்ள இந்த மக்கள் குறிப்பிட்ட நேரங்களில் ஒன்றாக கூடி, ஆவியானவர் அவர்களுக்கு என்ன சொல்லுகிறார் என்பதை காண வேண்டும். அதன் பிறகு அது மேடையிலிருந்து அறிவிக்கப்படலாம். மக்கள் .... அது சபையின் பக்திவிருத்திக்காக . 78இப்பொழுது, நீங்கள் அந்நிய பாஷை பேசி, அதற்கு அர்த்தம் உரைப்பவர் யாரும் அங்கில்லை என்பதை நீங்கள் அறிந்திருந்தால்... நீங்கள் கூட்டங்களில் உள்ளபோது, சில நேரங்களில் அது மிகவும் அவபக்தியாயுள்ளது. சில நேரங்களில் நீங்கள் காண்பது என்னவெனில்.... நான் என் சபையாரின் மத்தியில் நின்று கொண்டு பீட அழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று அந்நிய பாஷையில் பேசி பீட அழைப்பைக் கெடுத்து விடுகின்றனர். இப்பொழுது பாருங்கள், அந்த நபர் சரியாகவே அந்நிய பாஷையில் பேசக்கூடும்; அது பரிசுத்த ஆவியாயிருக்கக் கூடும். ஆனால் பாருங்கள், என்ன செய்ய வேண்டுமென்று அவர்கள் போதிக்கப்படாத காரணத்தால், அதை எப்படி அடக்கிக் கொள்வதென்று .... நான் மேடையின் மேல் உட்கார்ந்து கொண்டு, ஒரு பிரசங்கி பிரசங்கிப்பதைக் கேட்டு, அவர் ஒரு தர்மசங்கடமான நிலையை அடைவதை நான் கண்டிருக்கிறேன்... நான் எழுந்து நின்று அவருக்கு உதவி செய்ய விரும்பினேன், என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. நீங்களும் அதே காரியத்தை செய்திருக்கிறீர்கள்; நாம் எல்லோரும் அதை செய்திருக்கிறோம். ஆனால் அது என்ன? அது அவபக்தி. உட்காருங்கள். என் சகோதரனை மதியுங்கள். 79நான் சகோ. நெவில் பிரசங்கிப்பதை கேட்டிருக்கிறேன், நான் பிரசங்கிப்பதையும் அவர் கேட்டிருக்கிறார். நாங்கள், எவ்வித சந்தேகமுமின்றி, நாங்கள்... சகோ. ஜே.டி. இன்னும் மற்றவர். நாம் ஒருவர் பிரசங்கிப்பதை மற்றவர் கேட்டிருக்கிறோம். நாம், “ஓ, சகோதரனே, அவருக்கு உதவி செய்ய நான் எழுந்து போவேன்” என்று சொல்லியிருக்கிறோம். பாருங்கள்? ஆவி உங்கள் மேல் ஊற்றப்படுவதை நீங்கள் உணருகிறீர்கள். ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அமைதியாயிருக்க வேண்டும். பாருங்கள்? ஏனெனில் தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது. பாருங்கள்? அது உண்மை. அமைதியாயிருங்கள். பாருங்கள்? அதை செய்யுங்கள். நான் நம்புவது என்னவெனில் ஒரு ஸ்திரீ ... கேள்வி என்னவெனில் ஒரு ஸ்திரீக்கு அந்நிய பாஷை பேசும் வாரம் இருந்து அவள் பேச விரும்பினால், அந்த நேரம் வரும்போது, அவளுக்கு அந்நிய பாஷையில் பேச உரிமையுண்டு, ஆனால் அவள் பிரசங்கம் செய்யவோ மனிதர் மேல் அதிகாரம் செலுத்தவோ கூடாது. அவள் பிரசங்கித்தால், மனிதர் மேல் அதிகாரம் செலுத்துகிறது ளாக ஆகிவிடுகிறாள். - 159. சகோ. பிரான்ஹாமே, முன்பு விவாகமாகாதிருந்த ஒரு பெண்ணை நான் விவாகம் செய்தேன். நாங்கள் விவாகரத்து செய்து கொண்டோம். அதன்பிறகு அவளுக்கு இருமுறை 80விவாகமாகி விட்டது. நாம் மணம் புரிய விரும்பினால், முதல் மனைவியிடம் திரும்பிச் செல்ல வேண்டுமென்று வேதம் உரைக்கிறது. முன்பு விவாகமான அவளிடத்தில் நான் திரும்பிச் செல்ல வேண்டுமா, அல்லது நான் சுயாதீனமாயிருக்க வேண்டுமா? நல்லது, என் சகோதரனே, அதை நீங்கள் செய்ய இதுதான் ஒரே வழி. இது ஒரு பெரிய பொருள். சபை ஒழுங்கடைந்து அது இருக்க வேண்டிய இடத்தை அடையுமானால், என்றாகிலும் ஒரு நாள் இதைக் குறித்து பேச விரும்புகிறேன். இதை நான் பயபக்தியுடன் கூறுகிறேன், நான் .... விவாகமும் விவாகரத்தும் என்னும் விஷயத்தில் சபைகளில் இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. ஒரு சாரார் ஒரு கருத்தை ஆதரிக்கின்றனர். மற்ற சாரார் மற்ற கருத்தை ஆதரிக்கின்றனர். ஆனால், தேவனுக்கு முன்பாகவும் அவருடைய வேதாகமத்துக்கு முன்பாகவும், கிருபையை என் இருதயத்தில் கொண்டவனாய், என் கருத்து என்னவெனில், அவர்கள் இருவருமே தவறு. பாருங்கள். ஆனால் அதில் ஒரு சத்தியம் அடங்கியுள்ளது. 81இயேசு உரைத்ததை நீங்கள் கவனிப் பீர்களானால்.... இங்கே என் சகோதரன் இருக்கிறார், இரத்த சம்பந்தமான என் சொந்த சகோதரன். அவர் ஒரு பெண்ணை மணந்து கொள்ளப் போகிறார். அவருக்கு ஏற்கனவே மணமாகி, ஒரு நல்ல பெண்ணின் மூலம் ஒரு பிள்ளை உள்ளது. அவர் என்னிடம் வந்து மணம் முடித்து வைக்கும்படி கேட்டார். நான் முடியவே முடியாது“ என்று சொல்லி விட்டேன். இயேசு மத்தேயு 5ம் அதிகாரத்தில், “வேசித்தன முகாந்திரத்தினாலொழிய (அவள் விவாகம் செய்வதற்கு முன்பு அவ்விதம் நடந்து கொண்டு அவளுடைய கணவருக்கு அதை தெரியப்படுத்தாமலிருந்தால்) தன் மனைவியைத் தள்ளி விடுகிறவன், அவளை விபசாரஞ் செய்யப் பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிற வனாயிருப்பான்' என்று கூறியுள்ளார் (மத். 5:32). எனவே அப்படி செய்யாதீர்கள். இல்லை, உங்கள் முதல் மனைவி மறுபடியும் விவாகம் செய்து கொண்டுவிட்டால், நீங்கள் திரும்பவும் அவளிடம் போகக் கூடாது. ஆனால் நீங்கள் - அவள் உங்களை விவாகரத்து செய்து உங்களைத் தள்ளிவிட்டிருந்தால். 82“நான் சுயாதீனமாயிருக்கலாமா?” என்று கேட்டிருக்கிறீர்கள். அதை நான் மறுபடியும் படிக்கட்டும்: “இதற்கு முன்பு விவாகமாகாத ஒரு பெண்ணை நான் விவாகம் செய்தேன். நாங்கள் விவாகரத்து செய்து கொண்டோம். அதன் பிறகு அவளுக்கு இரு முறை விவாகமாகி விட்டது (கேள்வி கேட்ட நபர் விவாகம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று எண்ணுகிறேன்). நாம் மணம் புரிய விரும்பினால் முதல் மனைவியிடம் திரும்பிச் செல்ல வேண்டுமென்று வேதம் உரைக்கிறது. இல்லை, ஐயா! லேவியராகமத்தில் கூறப்பட்டுள்ள பிரமாணத்தைப் பாருங்கள். அவள் வேறொருவருக்கு உரிமையாகி விட்ட பிறகு நீங்கள் அந்த பெண்ணிடம் சென்றால், அவளை நீங்கள் கறைபடுத்தி, நீங்கள் உங்களை முன்னைவிட மோசமான நிலைக்கு ஆளாக்கிக் கொள்வீர்கள். இல்லை, வேறொருவரை விவாகம் செய்து கொண்ட உங்கள் மனைவியை நீங்கள் திரும்பச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இப்பொழுது, “விவாகமாகி விட்ட என் மனைவியினிடத்தில் நான் திரும்பச் செல்லலாமா, அல்லது நான் சுயாதீனமாயிருக்க வேண்டுமா? நீங்கள் சுயாதீனமாயிருக்கிறீர்கள்! சுயாதீனமாக நிலைத் திருங்கள்! ஆம், நீங்கள் திரும்பிச் செல்லாதீர்கள். வேண்டாம், ஐயா! அவள் வேறொருவரை மணந்து கொண்டு விட்டாள்; அவளை விட்டு விலகியிருங்கள். அதுதான் சரி! வேண்டாம். .. அது அசுத்தப்படுத்துகிறது. நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். நமக்கு இன்னும் சிறிது நேரம் இருந்தால், அதை விவரிக்க எனக்கு விருப்பம். ஆனால் உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் வண்ணம், என் சகோதரனே, நீங்கள் யாராயிருந்தாலும், வேண்டாம், ஐயா! உங்களை விவாகம் செய்து கொண்ட பிறகு இரண்டு மூன்று முறை விவாகம் செய்து கொண்ட அந்த பெண்ணிடம் திரும்பச் செல்லாதீர்கள். அது தவறு! 83இதற்கு முன்பு விவாகமாயிருந்த அந்த தம்பதிகளுக்கு அண்மையில் நான் விவாகம் செய்து வைத்தேன். அவர்கள் விவாகரத்து செய்து ஒருவரையொருவர் பிரிந்தனர் — வயோதிப் தம்பதிகள். ஓ, அது சகோதரன் சகோதரி பக்கெட்; அவர்கள் தான் அது. அவர்களால் ஒன்று சேர்ந்து வாழ முடியவில்லை. அவர் களுக்கிடையே சிறு பூசல் உண்டானது; அவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். அவள் மிகவம் உண்மையாக தனியாக வாழ்ந்து வந்தாள். அவரும் அதே விதமாக வாழ்ந்து வந்தார். சற்று கழிந்து. அது எவ்வளவு மூடத்தனம் என்பதை அவர்கள் உணர்ந்து, மறு படியும் விவாகம் செய்து ஒன்றாக வாழ விரும்பினர். நான், “நிச்சயமாக” என்றேன். பாருங்கள்? “அது நல்லது, அப்படித்தான் நீங்கள் இருக்க வேண்டும்” என்றேன். எனவே அவர்கள்.... அவர்கள் விவாகமான நிலையிலே இருந்தனர். அவர்கள் விவாகரத்து செய்து கொள்ளவில்லை; அவர்கள் கணவனும் மனைவியுமாக வாழ்வதற்கு வேண்டிய பத்திரங்களைக் கொடுத்தேன்; அவ்வளவுதான், ஏனெனில் அவர்கள் தொடக்கத்தில் செய்திருந்தனர். 84கத்தோலிக்கருக்குள்ள அறையப்பட்ட இயேசுவின் உருவம் கொண்ட சிலுவையின் (crucifix) மேலுள்ள மூன்று எழுத்துக்களின் அர்த்தம் என்ன? நல்லது. அத்தகைய சிலுவையின் சின்னம் அனைத்தும் ஒன்றே. இல்லையென்றால்... அதை நான் மறுபடியும் பார்க்கட்டும். அது ஐ-ஆர் - என் -ஐ (I-R-N-1) என்று உள்ளது. அதன் அர்த்தம் “நசரேயனாகிய இயேசு, யூதரின் ராஜா என்பதே. அதற்கு வேறு விசேஷித்த அர்த்தம் உண்டோ இல்லையோ என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதன் அர்த்தம் நசரேயனாகிய இயேசு, யூதரின் ராஜா!” சரி.. 85சபை கட்டிட நிதிக்காக தசமபாகத்தை உப்யோகிப்பது தவறா? நல்லது. இப்பொழுது, இங்கே - இது சபைக்கு உணர்ச்சியைத் தூண்டக் கூடிய ஒரு சிறு காரியம். சரியான முறை என்னவெனில், தசமபாகம் சபையின் போதகருக்கு செல்ல வேண்டும். அது தான் சரி! வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில், ஆலயத்தை பழுது பார்ப்பதற்காக, அவர்கள் ஒரு பெட்டியை கதவண்டையில் வைத்தனர். ஜனங்கள் அந்த பெட்டியில் பணத்தைப் போடுவார்கள். அதை பலமுறை நீங்கள் பழைய ஏற்பாட்டில் படித்திருக்கிறீர்கள். அவ்விதமாகத் தான் அவர்களை ஆலயங்களை பரிபாலித்தனர். அந்த நிதியை உபயோகித்து தான் அவர்கள் ஆலயங்களை பழுது பார்த்தனர். ஆனால் பத்தில் ஒரு பாகம் - தசம பாகம் அனைத்தும் - அவர்களுடைய ஆசாரியர்களுக்கு, அவர்களுடைய மேய்ப்பர்களுக்கு சென்றது. ஆம், தசமபாகத்தை வேறெதற்கும் உபயோகிக்கக் கூடாது. ஜனங்கள் தங்கள் தசமபாகத்தை எடுத்து விதவைகளுக்கு கொடுப்பதை நான் கண்டிருக்கிறேன். அது தவறு. விதவைக்கு கொடுக்க உங்களிடம் வேறெதாவது இருக்குமானால், அதைக் கொடுங்கள். ஆனால் தேவனுடைய பணத்தை அவளுக்கு கொடுக்காதீர்கள். முதலாவதாக, அது உங்களுடையதல்ல, அது தேவனுடையது. 86உங்களுக்கு ஒரு ரொட்டி வாங்கி வருவதற்காக என்னிடம் நீங்கள் இருபத்தைந்து சென்டு காசு கொடுத்தனுப்பி, நான் தெருவில் ஒருவரை சந்தித்து அவருக்கு இந்த இருபத்தைந்து சென்டு காசை கொடுத்து விடுவேனானால், பாருங்கள், நான் உங்கள் காசை எடுத்து கொடுத்து விடுகிறேன். அவர் என்னிடம் காசு கேட்டால், என் பாக்கெட்டில் உள்ள என் காசை அவருக்கு நான் கொடுக்க வேண்டும். இது உங்கள் காசு. அதை எடுத்து கொடுத்துவிடக் கூடாது. அது போன்று தசமபாகம் கர்த்தருடையது. ஆசாரியனிய லேவி தசமபாகத்தைக் கொண்டே வாழ வேண்டும். தசமபாகம் பண்டகசாலையில் கொண்டு வரப்பட்டு, அது தேவனால் ஆசிர்வதிக்கப்படும் என்னும் வாக்குத்தத்தத்தையும் அதன் நிரூபணத்தையும் உடையதாய் இருக்கிறது. அவர், “நீங்கள் என்னை நம்பாமல் போனால், அதைக் கொண்டு வந்து நான் அதை ஆசிர்வதிக்கமாட்டேனோ என்று என்னை சோதித்துப் பாருங்கள்” என்கிறார் (மல். 3:10). பாருங்கள்? அது உண்மை . தசமபாகம் சபையின் போதகரின் ஜீவனத்துக்கென அவருக்கு செல்ல வேண்டும். கட்டிட நிதி இன்னும் மற்றவை எல்லாம் முற்றிலும் வேறுபட்ட நிதி . அது வேதப்பூர்வமானது! ஒரு முறை நாம் தொடங்கி விட்டால், நான் ஒரு இரவு எடுத்துக் கொண்டு ... சில நாட்களுக்கு முன்பு, நான் கூடாரத்தை விட்டு செல்வதற்கு முன்பு, இரண்டு மூன்று வாரங்களாக இப்படிப்பட்ட தலைப்புகளின் பேரில் பேசி, சபையில் தசமபாகம் எவ்விதம் செலுத்தப்பட வேண்டும் என்பதை காண்பித்தேன். 87சகோ.பிரான்ஹாமே, நாம் கிறிஸ்தவர்களான பிறகு, மேசன்ஸ் போன்ற விடுதியை சேர்ந்து கொள்வது தவறாகுமா? இல்லை, ஐயா! நீங்கள் எங்கிருந்தாலும் கிறிஸ்தவராயிருங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, நீங்கள் அப்பொழுதும் கிறிஸ்தவராயிருக்கலாம். 88கர்த்தரைக் கண்டு கொள்வதற்கு மிகச் சிறந்த வழி என்ன... சில முக்கியமான விஷயங்களில் கர்த்தருடைய சித்தத்தை அறிந்து கொள்ள மிகச் சிறந்த வழி எது என்பதைக் குறித்த உங்கள் கருத்து என்ன? இப்பொழுது... நான் நினைக்கவில்லை நான்... அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்கிறதா என்று பார்க்கட்டும். “மிகச் சிறந்த வழி எது என்பதற்கான உங்கள் கருத்து (அங்கே ஒரு காற்புள்ளி (comma) இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்)... ”சில முக்கியமான விஷயங்களில் கர்த்தருடைய சித்தத்தை அறிந்து கொள்ள மிகச் சிறந்த வழி எது என்பதைக் குறித்து உங்கள் கருத்து என்ன?“ அருமை நண்பனே, நான் உமக்குச் சொல்லுகிறேன், சில முக்கியமான விஷயங்களில் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ள மிகச் சிறந்த வழி ஜெபமே. பாருங்கள்? இப்பொழுது, இதை நான் ... இங்கு ஒரு அருமையான சிறு காரியம் உள்ளது. மிகவும் முக்கியமான விஷயம் உங்களுக்கு இருக்குமானால்... நான் கடைபிடிக்கும் முறை இதுவே. அதை நான் கர்த்தருக்கு முன்பாக கொண்டு செல்வேன். அது எப்பொழுதும் என் பெலனாக அமைந்துள்ளது; நான் கர்த்தருடைய சமுகத்தில் காத்திருந்து, அவர் என்ன சொல்லுகிறாரென்று பார்ப்பேன். நான் அந்த விஷயத்தில் எந்த பக்கத்தையும் ஆதரிக்காமல் நடுநிலை வகிப்பேன். நான், “இப்பொழுது, பரலோகப் பிதாவே, அது இப்படி இருக்க வேண்டும்...” என்று சொல்வதில்லை. 89என் விஷயத்தில், பெரும்பாலும், அது மிகவும் முக்கியம் வாய்ந்தது என்பது உண்மையே. ஆகையால் நான் தரிசனத்துக்காக காத்திருப்பேன். ஆனால் அநேகருடன் தேவன் தரிசனத்தின் மூலம் ஈடுபடுவதில்லை. எனவே நீங்கள் தரிசனத்துக்காக காத்திருக்க வேண்டுமென்று ஆலோசனை கூற மாட்டேன். பாருங்கள்? ஏனெனில் சிலருக்கு தரிசனம் கிடைக்கின்றது. சிலர் வேறொன்றை செய்கின்றனர். நீங்கள் செய்பவைகளை என்னால் செய்ய முடியாது - நீங்கள் தேவனை சேவிக்கும் வழியில் - நான் செய்பவைகளை உங்களால் செய்ய முடியாது. பாருங்கள்? தேவன் வெவ்வேறு விதமாக நம்முடன் ஈடுபடுகிறார். நான் உங்கள் ஸ்தானத்தில் இருந்து கர்த்தரிடத்திலிருந்து தரிசனம் பெறாமலிருந்தால், நான் கர்த்தருடைய சமுகத்தில் காத்திருந்து, “கர்த்தாவே, என்ன தீர்மானம் செய்ய வேண்டுமென்று எனக்குக் காண்பியும்” என்று அவரைக் கேட்பேன். அதை ஒரு வழியில் செய்ய உங்களுக்கு உணர்வு தோன்றுமானால், சிறிது காத்திருங்கள், அதன்பிறகு இன்னும் சிறிது அதிகம் காத்திருந்து. எந்த வழியில், எந்த பக்கம் சாய்கிறீர்கள் என்பதைப் பாருங்கள், எந்த பக்கம் ஆவியானவர் ... “பிதாவே, என் இருதயத்தில் உள்ளதை நீர் அறிந்திருக்கிறீர், அதனால் பரவாயில்லை. நான் என்ன செய்ய வேண்டுமென்று நீர் விரும்புவதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று அவரைக் கேளுங்கள். கூட்டங்களைக் குறித்தும் சில நேரங்களில் நான் அப்படித்தான் செய்கிறேன். இந்த வழியாக அல்லது அந்த வழியாக செல்ல வேண்டுமென்று நான் வழிநடத்தப்படுவதாக எனக்குத் தோன்றும், அப்பொழுது நான் அந்த வழியாக செல்வேன். அப்படித்தான் அதை செய்ய வேண்டும், ஏனெனில் அது ஜெபத்தில் வைக்கப்படுகிறது; நீங்கள் உங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பானதை செய்கிறீர்கள். 90இதை நான் விசுவாசிக்கிறேன், என் நண்பர்களே. முன்காலத்தில், புதிய ஏற்பாட்டின் காலத்தில் பவுல் இரு வழிகளுக்கு இடையே மாட்டிக் கொண்டு, எந்த வழியாக செல்ல வேண்டுமென்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் தவறான வழியில் செல்லப் புறப்பட்ட போது, அவனுக்கு மக்கதோனிய அழைப்பு வந்தது. நான் விசுவாசிப்பது என்னவெனில், நீங்கள் தேவனுக்காக ஒரு தீர்மானம் செய்து, உங்களால் முடிந்த வரைக்கும் அதை மிகச் சிறந்த முறையில் செய்வீர்களானால், தேவன் உங்களைத் திருத்தி, நீங்கள் தவறு செய்ய... பார்த்துக் கொள்வார். தேவன் அவ்விதம் செய்வாரென்று நான் , பாசிக்கிறேன். - 91நாம் பார்ப்போம். சகோ, பிரான்ஹாமே, உறங்கும் கன்னிகைகள் என்று கருதப்படுபவர் நியாயத்தீர்ப்பின்போது 'நியாயந்தீர்க்கப்படும்போது, அவர்களுக்கு என்ன நேரிடுகிறது? நல்லது, உறங்கும் கன்னிகைகள் இரட்சிக்கப் படுவார்கள் என்பது உண்மையே. அவள் நியாயத்தீர்ப்பின் போது இரட்சிக்கப்படுவாள். அவள் மணவாட்டியாக இருக்க முடியாது. அவள் நியாயத்தீர்ப்புக்கு வரும் ஒரு கூட்டம் ஜனங்கள். அவர்கள் கன்னிகைகளாய் இருப்பதனால், அவர்கள் தேவனுக்கு முன்பாக இருக்கின்றனர். பாருங்கள்? அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும். அவர் பிரிக்கிறார். அவர்கள் அவருடைய வலது பக்கத்திலுள்ள செம்மறியாடுகள் . இரட்சிக்கப்படாதவர்கள் அந்த பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பின்போது அவருடைய இடது பக்கத்திலுள்ள வெள்ளாடுகள். அதன் பேரில் நான் நிறைய நேரம் பேச முடியும், ஆனால் நேரமாகிக் கொண்டிருக்கிறது. 92பரிசுத்த ஆவியினால் நிறைந்த ஒரு நபர், தனக்கு செய்ய விருப்பமில்லாத சிறு காரியங்களைச் செய்யத் தூண்டப்பட்டு அதை செய்வதற்கு வாய்ப்புண்டா? ஓ, ஆமாம்! ஆம், ஐயா! ஆம், பரிசுத்த ஆவியினால் நிறைந்த ஒரு நபர். அப்பொழுது தான் நீங்கள் இந்த காரியங்களைச் செய்யத் தூண்டப்படுவதற்கான நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களை ஒரு இலக்காக ஆக்கிக் கொள்கிறீர்கள். நீங்கள் பிசாசை சேவித்துக் கொண்டிருந்த போது, உங்கள் விருப்பப்படி நீங்கள் அவலட்சணமாக நடந்து கொள்ள அவன் உங்களை அனுமதிக்கிறான். ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்கென்று ஒரு நிலையை தெரிந்து கொண்ட மாத்திரத்தில், நீங்கள் மற்ற பக்கத்துக்கு வந்து விடுகிறீர்கள். அப்பொழுது அவன் ஒவ்வொரு துப்பாக்கியையும் உங்கள் பக்கம் திருப்பி குறி வைக்கிறான். ஒவ்வொரு சோதனையையும், உங்கள் மேல் எறியப்படக் கூடிய ஒவ்வொன்றையும், உங்களை நோக்கி எறிகிறான். அப்பொழுது உங்களுக்கு கடினமாகி விடுகிறது. ஆனால் உங்களுக்கு என்ன உள்ளது “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிரலிருக் கிறவர் பெரியவர்” (1 யோவான் 4:4). பாருங்கள்? நீங்கள் பிசாசின் பக்கம் இருந்தபோது, உங்களுக்கு எந்தப் போராட்டமும் இருக்கவில்லை, நர், அசுத்தத்தில் சுற்றிதிரிந்தீர்கள். பாருங்கள்? ஆனால் இப்பொழுதோ நீங்கள் உங்கள் போக்கை சுத்தமாக்கிக் கொண்டீர்கள்; நீங்கள் நாணயமாக உடை உடுக்கிறீர்கள்; நீங்கள் சவரம் செய்து கொள்கிறீர்கள்; தலையை நன்றாக வாரிக் கொள்கிறீர்கள்; நீங்கள் ராணுவ உடையை போட்டுக் கொள்கிறீர்கள்; உங்கள் கையில் ஒரு துப்பாக்கியை வைத்துக் கொண்டு, “வாருங்கள், போகலாம்” என்கிறீர்கள். பாருங்கள்? நீங்கள் போர்களத்தில் இருக்கிறீர்கள், உங்களைப் பெரிதாக காண்பித்துக் கொள்ள அல்ல, ஆனால் போரிட், போரில் சோதனைகள் எழும்பும்போது . ஆவியினால் - விசுவாசம் என்னும் கேடயத்தை பிடித்துக் கொண்டு, போராயுதங்களை தொடுத்துக்கொண்டு முன் செல்கிறீர்கள். அது நிச்சயம்! பாருங்கள்? அது உண்மை. ஓ. தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் போரிடவில்லையென்றால், எதற்காக போராய தங்களைத் தரித்துக் கொள்ள வேண்டும்? இராணுவ வீரர் அனைவரும் சண்டையிடுவதற்காகவே அவ்விதம் தரித்துக் கொள்கின்றனர். தங்களைப் பெரிதாக காண்பித்துக் கொண்டு, “நான் இன்னார். நான் ஒரு கிறிஸ்தவன், நான் யாரென்று பாருங்கள். நான் இன்னின்னதை சேர்ந்தவன். அல்லேலூயா! அன்றொரு இரவு நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டேன். நிச்சயமாக, ஒன்றும் என்னை தொல்லைப் படுத்துவதில்லை” என்று சொல்வதற்காக அல்ல. உ-ஊ! ஓ, சகோதரனே, நீ திரும்பிச் சென்று மறுபடியும் முயற்சி செய்வது நலமென்று எண்ணுகிறேன். பார்? 93ஒ. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட மாத்திரத்தில், சாத்தான் ஒவ்வொரு துப்பாக்கியையும் உங்களை நோக்கி குறி வைத்து உங்களைச் சுட முற்படுகிறான். ஆனால் நீங்களோ சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொண்டிருக்கிறீர்கள். விசுவாசம் என்னும் கேடயத்தை எடுத்துக் கொள்ளுங்கள், ஆவியின் பட்டயத்தை, வார்த்தையின் பட்டயத்தை கையில் பிடித்துக் கொள்ளுங்கள், சுவிசேஷம் என்னும் பாதரட் சையை கால்களில் தொடுத்துக் கொள்ளுங்கள், அந்த நடுத் துண்டாகிய மார்கச்சையை போட்டுக் கொண்டு, அதிலுள்ள வாரை இழுத்து இறுகக் கட்டிக் கொண்டு, ஆயத்தமாகுங்கள். ஏனெனில் அது வந்து கொண்டிருக்கிறது. கவலைப்படாதீர்கள். ஆம், ஐயா! உங்களுக்கு நிறைய தொல்லைகள் வரும். ஆனால் “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 94இயேசு பரி. மத்தேயு 16:910 வசனங்களில் கூறினதன் அர்த்தமென்ன? பன்னிரண்டு கூடைகளும் ஏழு கூடைகளும் எதற்கு எடுத்துக்காட்டாயுள்ளன? ஞாயிறு காலைக்கு கேள்வி. மத். 16:10 என்னவென்று நாம் பார்ப்போம், அது என்னவென்று இப்பொழுது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. அந்த வேதபாகத்தை நான் எடுக்கட்டும். மத். 16:9-10. இதோ உள்ளது: இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும்; ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா? (இப்பொழுது கவனியுங்கள், இதற்கு முன்புள்ள சில வசனங்களை வாசிப்போம்) இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார். நாம் அப்பங்களைக் கொண்டு வராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனை பண்ணிக் கொண்டார்கள். இயேசு ... (இப்பொழுது கவனியுங்கள்)... இயேசு அதை அறிந்து. (அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து கொண்டார். பாருங்கள்?). அற்ப விசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டு வராததைக் குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனை பண்ணுகிற தென்ன? இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும்; 95வேறு விதமாகக் கூறுவோமானால்: “தேவன் ஒரு அற்புதத்தை செய்து தேவையானதை தருவதை நீங்கள் கண்டிருக்க, அவரால் ஒரு அற்புதத்தை மறுபடியும் செய்ய முடியாதா என்ன? பாருங்கள்?... இதை வேறு விதமாக இவ்விதம் கூறலாம்: அவர் உங்களை பாவ வாழ்க்கையிலிருந்து இரட்சித்திருக்க உங்கள் சரீரத்தை அவரால் சுகமாக்க முடியாதா என்ன? நீங்கள் பாவியாயிருந்த போது, நீங்கள் விசுவாசிக்கத்தக்கதாக உங்கள் ஆத்துமாவை எவ்வளவாக விசுவாச நிலைக்கு உயர்த்தினார் என் பதை நினைவுகூராமலிருக்கிறீர்களா? அவர் அப்படிப்பட்ட மகத்தான ஒன்றை உங்களுக்கு மறுபடியும் செய்ய முடியாதா என்ன? அவர் அற்புதத்தை அல்லது வேறெதாவதொன்றை உங்களுக்கு செய்ய முடியாதா என்ன? ஐந்து கூடைகள்... நினைவுகூருங்கள் என்றார். உதாரணமாக.... அவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்த போது, தேவன் சிவந்த சமுத்திரத்தை பிளந்து. வழியை உண்டாக்கி, அதன் வழியாக அவர்கள் நடந்து போகும்படி செய்தார். ஆனால் அவர்களுக்கு தண்ணீர் கிடைக்காத மாத்திரத்தில், அவர்கள் முறுமுறுத்தனர். அது சரியா? அவர்களுக்கு அப்பம் கிடைக்காத மாத்திரத்தில், அவர்கள், “எங்களுக்கு அப்பம் இல்லை என்று கூச்சலிட்டனர். பாருங்கள்? ”சிவந்த சமுத்திரத்தில் நடந்த அற்புதத்தை நீங்கள் உணரவில்லையா? அதன் வழியாக நீங்கள் வரவில்லையா?' என்று மோசே கேட்டான். அவர்கள் சிவந்த சமுத்திரத்தின் அருகில் கடினமான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டபோது, “ஓ, நாங்கள் அங்கேயே செத்திருக்க வேண்டும். எகிப்தியர் எங்களைத் துரத்திக் கொண்டு வருகிறார்கள். நாங்கள் என்ன செய்வோம்?” என்று அவர்கள் கூச்சலிட்டனர். அப்பொழுது மோசே, 'பூமியை அங்கே வாதைகளால் வாதித்தவர் யார்? கோசேனில் சூரியன் பிரகாசிக்கும்படி செய்தவர் யார்? என்று கேட்டான். பாருங்கள். அவைகளை நாம் நினைவில் கொண்டிருக்க வேண்டும். தேவன் தேவனாயிருக்கிறார் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். அல்லேலூயா! அவர் இன்னும் தேவனாயிருக்கிறார், அவர் நிச்சயமாக எதையும் செய்ய முடியும். 961கொரிந்தியர் 12:27ல்கூறப்பட்டுள்ள “கிறிஸ்துவின் சரீரம்' என்பதையும், வெளிப்படுத்தல் 21:9ல் கூறப்பட்டுள்ள ”கிறிஸ்துவின் மணவாட்டி' என்பதையும் தயவுகூர்ந்து விளக்குவீர்களா? வெளிப்படுத்தலில் கூறப்பட்டுள்ள புதிய எருசலேம் ஆவிக்குரியதா? அது சபையின் ஆவிக்குரிய பகுத்தறிதலா? இல்லை! இதை முதலில் எடுக்க முடியுமா என்று பார்க்கிறேன், 1 கொரிந்தியர் ,வேகமாக, 1 கொரிந்தியர் 12ம் அதிகாரம், சரி, 27ம் வசனம்: நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயங்களாயுமிருக்கிறீர்கள். அடுத்த வசனம் என்ன? வெளிப்படுத்தல் 21:9. வெளிப்படுத்தல் 21ம் அதிகாரம் 9ம் வசனம். சரி, இங்கே உள்ளது. பின்பு. கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து : நீ இங்கே வா; ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, 97ஆம், கிறிஸ்துவின் சரீரம். பாருங்கள், கிறிஸ்துவின் சரீரம் நமது பாவங்களுக்காக நொறுக்கப்பட்டது. ஒரே ஆவியினாலே அந்த ஒரே சரீரத்திற்குள்ளாக நாம் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, அதன் அங்கத்தினர்களாகிறோம். அந்த சரீரம் எங்கேயிருந்து ... அடையாள ரீதியில் பேசுவோமானால், என் மனைவி எங்கிருந்து... ஏவாள் எங்கிருந்து வந்தாள்? ஆதாமின் சரீரத்திலிருந்து. அவள் அவனுடைய விலாவிலிருந்து எடுக்கப்பட்டாள். கிறிஸ்து.. அவள் அவனுடைய சரீரத்தின் பாகமாயிருந்தாள். அவன், “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவளை நான் மனுஷி என்று அழைப்பேன்” என்றான். பாருங்கள்? இப்பொழுது, கிறிஸ்துவின் சரீரம் இயேசுவின் சரீரத்திலிருந்து எடுக்கப்பட்டது. எனவே நாம் அவருடைய ஆவியாயும், மாம்சமாயும், எலும்பாகவும் இருக்கிறோம். பாருங்கள்? நாம் அவருடைய சரீரத்துக்குள் பிறந்திருப்பதனாலும், இங்குள்ள இந்த சரீரம் அவருக்குச் சொந்தமானதாயும், ஆனால் பாவத்தில் பிறந்திருந்ததனாலும், அவர் அதை மீட்டுக் கொண்டார். “அதை கடைசி நாட்களில் தேவன் எழுப்புவார், நான் அதற்குள் நித்திய காலமாய் வாசம் செய்வேன்” பாருங்கள்? அதுதான். சரி. 98இப்பொழுது பார்ப்போம். இந்த கேள்வியின் கடைசி பாகம், “புதிய எருசலேம் ஆவிக்குரியதா? இல்லை, இல்லை, புதிய எருசலேம் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வருவதை யோவான் கண்டான். அது சபையின் பகுத்தறிதல் அல்ல. பாருங்கள்? அது... புதிய எருசலேம் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வருவதை யோவான் கண்டான் - வெளிப்படுத்தல் 21 (பாருங்கள்?). அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப் பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாயிருந்தது. இப்பொழுது கடைசி கேள்வி, கேள்விகள் அவ்வளவுதான் என்று நினைக்கிறேன். 99தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதாக வேதம் உரைக்கிறது. அப்படியானால் நீங்கள் தேவனிடத்தில் அன்புகூர்ந்து, பிறகு உலகத்துக்குத் திரும்பிச் செல்வீர்களானால், நீங்கள் பாவத்தில் மரிக்கும்படி தேவன் விட்டு விடுவாரா, அல்லது அவர் உங்களை எடுத்துக் கொள்வதற்கு முன்பு நீங்கள் ஒப்புரவாகி அவரிடம் திரும்பும்படி செய்வாரா? அந்த பெண்மணி, இதற்கு கையொப்பமிட்டிருக்கிறாள். எனவே அது ஒரு பெண்மணி என்று (பாருங்கள்?) அவள் கையொப்பமிட்டுள்ளதால் என்னால் கூற முடிகிறது. ஆம், சகோதரியே. நீ பிறந்திருந்தால்.... இப்பொழுது, இதை நான் உன்னிடம் கூறட்டும். பார், தற்காலிகமாக, சிறு விஷயங்களில், நாம் ஒவ்வொருவருமே ஒரு நாளில் பலமுறை பின் மாற்றம் அடைகிறோம். அது நமக்குத் தெரியும். நாம் ஒவ்வொருவருமே அதைக் குறித்து குற்றமுள்ளவர்களாயிருக்கிறோம்; நம்மில் எவருமே பிழையற்றவர் அல்ல. இந்த சரீரத்தில் நாம் உள்ள வரைக்கும், நாம் இன்னும்... ஜனங்கள் எவ்வளவுதான், “நான் பரிசுத்தமடைந்து விட்டேன், நான் அந்த ஸ்திரீயை முத்தமிடலாம், அல்லது அதைச் செய்யலாம்” என்று சொன்னாலும், அவர் பொய் சொல்லுகிறார்; அவரால் முடியாது. இப்பொழுது, அவ்வளவுதான். “கர்த்தாவே, நான் அதற்கு எவ்வளவு அருகாமையில் செல்ல முடியும் என்பதைக் காணட்டும்” என்று நான் கூற முயல்வதில்லை. அது “கர்த்தாவே, அதை விட்டு எவ்வளவு தூரம் நான் விலகியிருக்க முடியுமோ, அங்கு என்னை வைத்திரும்” என்பதாய் உள்ளது. பாருங்கள்? எவ்வளவு தூரம் உங்களால் விலகியிருக்க முடியுமோ, அவ்வளவு தூரம் விலகியிருங்கள். நீங்கள் இன்னும் மானிடர் என்பதை நினைவுகூருங்கள். பாருங்கள்? 100மற்றும்... இப்பொழுது நீங்கள் ஏதாவதொரு தவறைச் செய்வீர்களானால்... நீங்கள் வேண்டுமென்று செய்யவில்லை ... நீங்கள் கிறிஸ்தவராக, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவராக இருந்தால், நீங்கள் தவறு செய்ய எண்ணங்கொள்வதில்லை. உங்கள் எண்ணங்கள் மற்றும் எல்லாமே சரியாயிருக்கும். ஆனால் நீங்கள், ஏதாவதொரு தவறு செய்வீர்களானால், இந்த பெண் இங்கு சொன்னது போல, நீங்கள் அதில் தொடர்ந்து சென்று கொண்டேயிருந்து, இழக்கப்பட்டு, மரிக்கும்படி தேவன் விட்டு விடுவாரா, அல்லது நீங்கள் ஒப்புரவாகி, உங்களைத் திரும்பக் கொண்டு வருவாரா? அவர் உங்களைத் திரும்பக் கொண்டு வருவார். நீங்கள் ஏதாகிலும் தவறு செய்து. அது உங்களைக் குற்றப்படுத்தாமல், நீங்கள் அதில் தொடர்ந்து சென்று கொண்டிருப்பீர்களானால், நீங்கள் முதற்கண் இரட்சிக்கப்படவேயில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உண்மை. நீங்கள் இரட்சிக்கப் படவேயில்லை; நீங்கள் ஏதோ ஒரு பாவனை விசுவாசத்தை கொண்டிருந்தீர்கள். நீங்கள் இரட்சிக்கப்படவேயில்லை. நீங்கள் இரட்சிக்கப்படும் போது, உங்களுக்கு வேறு ஆவி உள்ளது; உங்கள் சுபாவம் வித்தியாசமாகி விடுகிறது. நீங்கள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாயிருக்கிறீர்கள், பழையவைகள் ஒழிந்து போய், அவை மரித்து மறதி என்னும் கடலில் புதைக்கப்படுகின்றன. பாருங்கள்? மற்றும்... ஆனால் இந்த உலகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கையில், உங்களுக்கு எல்லாவிடங்களிலும் கண்ணிகள் வைக்கப்படுகின்றன, உங்கள் கண்களை கிறிஸ்துவின் மேல் வைத்து நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள். இதை ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் தவறு செய்வீர்களானால், ஒரு உண்மையான கிறிஸ்தவன் ஒப்புரவாகி விரைவில் திரும்பி வந்து விடுவான். 101பாருங்கள், பேழையிலிருந்து தேவன் காகத்தை வெளியே அனுப்பினார் - நோவா காகத்தை வெளியே அனுப்பினான். இப்பொழுது, அது யார்? அது ஒரு காகம். ஓ, ஆமாம், அது புறாவுடன் கூட ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தது. அவையிரண்டுமே ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தன; ஆனால் அவன் காகத்தை வெளியே அனுப்பின போது, நல்லது. அந்த... லட்சக்கணக்கான ஜனங்களின் உடல்கள் உப்பிப் போய், அழுகி, குதிரைகளும் மிருகங்களும் மூழ்கி செத்து, தண்ணீர் நாற்றமெடுத்திருக்கும் என்று எண்ணுகிறேன். முழு உலகமே அழிக்கப்பட்டது. அந்த செத்த பிணங்கள் தண்ணீரின் மேல் மிதந்து கொண்டிருந்தன. நோவா புறாவை வெளியே அனுப்பினான், ஏனெனில் சிறிது சூரிய வெளிச்சத்தை அவன் கண்டதாக எண்ணினான். தண்ணீர் மட்டம் இறங்கி விட்டதா என்று அறிய, அவன் காகத்தை வெளியே அனுப்பினான். ஆனால் காகமோ பறந்து பிணத்தின் மேல் இறங்கி, “என்னே , இது அருமையானது; மிகவும் நன்றாயுள்ளது” என்றது. பாருங்கள். அது பிணத்தை தின்று கொண்டிருந்தது. ஏன்? அதுதான் அதன் இயல்பு. அது ஒரு காகம். அது எவ்வளவு தான் புறாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்த போதிலும், அது எவ்வளவுதான் நோவாவின் பிரசங்கத்தைக் கேட்டிருந்த போதிலும், அது எவ்வளவு தான் இந்த சுத்தமான பறவையுடன் உட்கார்ந்து கொண்டிருந்த போதிலும், அது தொடக்கத்திலேயே ஒரு காகமாயிருந்தது. தன் நிறத்தைக் காண்பிக்க அதற்கு தருணம் கிடைத்த மாத்திரத்தில், அது காண்பித்து விட்டது. ஆனால் அவன் புறாவை வெளியே அனுப்பினபோது, அது புறப்பட்டுச் சென்ற போது, வ்யூ, அதனால் சகிக்க முடியவில்லை. அது எங்கும் செல்ல முடியவில்லை, தன் பாதங்களை இளைப்பாறச் செய்ய அதற்கு இடம் எங்குமில்லை, எனவே அது பேழைக்கு திரும்பி வந்தது. அப்படித்தான் அது உள்ளது. 102சில நேரங்களில், நீங்கள் என்ன செய்வீர்கள் என்று காண சிறிது நேரத்துக்கு நீங்கள் அவிழ்த்து விடப்பட்டிருக்கலாம். ஆனால் உங்களுக்கு புறாவின் சுபாவம் இருக்குமானால், உங்களால் காகத்தின் ஆகாரத்தை தின்ன முடியாது. அவ்வளவுதான், அது ஜீரணமாகாது; அவ்வளவுதான். நீங்கள் எங்கே செல்வீர்கள், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் கிறிஸ்தவனாக இல்லாமல் போயிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று எனக்குச் சொல்லுங்கள்! நான் கிறிஸ்தவனாக இல்லாமலிருந்தால், இன்று காலை நான் என்ன செய்திருப்பேன் என்று எனக்குச் சொல்லுங்கள்! என் தாயார் நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் படுத்திருக்கும் போது, இந்த பிரசங்க பீடத்தில் நான் நின்று கொண்டு என்னால் பிரசங்கிக்க முடிந்து, நான் செல்லும் வழியில் சென்று, அதற்கு அதிக கவனம் நான் செலுத்தாதது போல் காணப்படுகிறதற்கு காரணமென்ன? ஏனெனில் என் தாயார் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். பாருங்கள்? அவர்கள் இரசிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நானறிவேன். நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன்; நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக் கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்திருக்கிறேன். 103தாயார் இப்பொழுது என்ன செய்வார்கள்? ஒருக்கால் அவர்களுக்கு வாழ்நாள் பூராவும், “என்றாவது ஒரு நாள் நான் கிறிஸ்தவளாகி விடுவேன்' என்னும் நல்லெண்ணம் இருந்திருக்கக் கூடும். ஆனால் இப்பொழுது அவர்கள் நினைவிழந்த நிலையில் படுத்துக் கொண்டிருக்கும்போது, அவர்களால் எப்படி கிறிஸ்தவளாகியிருக்க முடியும்? அவர்கள் இப்பொழுது எப்படி கிறிஸ்தவளாகியிருக்க முடியும்? அவர்களுடைய பிள்ளைகள் என்ன செய்வார்கள்? அன்று நாங்கள் அவர்களுக்கு க்ளுகோஸ் செலுத்த அவர்களைக் கொண்டு போன போது ... அவர்களுடைய உடலில் உள்ள ஒன்றே ஒன்று க்ளூகோஸ் மட்டுமே. அவர்களால் விழுங்கமுடியவில்லை அவர்களுக்கு கைகால் முடங்கி விட்டது. அவர்கள், “பில்லி, இந்த ஒன்றை நீ அறிய வேண்டுமென்று விரும்புகிறேன்' என்றார்கள். அவர்கள் என்னைக் குறித்தும், அங்கு நின்று கொண்டிருந்த டீலோராஸைக் குறித்தும், அவர்களுடைய பிள்ளைகளைக் குறித்தும், என் சகோதரர்களில் சிலர் குடிப்பதைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். நான், “அவர்கள் உங்கள் இருதயத்தை உடைத்து விட்டார்கள்” என்றேன். அவர்கள், “ஆனால் பில்லி, இவையனைத்தும் ஒரு தாயாரின் வாழ்க்கை சக்கரத்தில் சுழலும் காரியங்களே. ஆனால் நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன், நான் போக ஆயத்தமாயிருக்கிறேன்” என்றார்கள். நான், “அம்மா, நீங்கள் ஜெபர்ஸன்வில் தொடங்கி ஊடிகா வரைக்கும் விஸ்தாரமுள்ள ஒரு அரண்மனையை எங்களுக்கு விட்டு சென்றாலும்.. நீங்கள் போய் விட்ட பிறகு நாங்கள் சண்டை போட்டுக் கொள்ள (அப்படித்தான் அது நடக்கும்) ஒரு கோடி டாலர்களை வைத்து விட்டுச் சென்றாலும், நீங்கள் எங்களுக்கு வைத்துப் போகும் மிகப் பெரிய பொக்கிஷத்துக்கு அது ஈடாகாது. நதிக்கு அப்பாலுள்ள அந்த தேசத்தில் நாங்கள் உங்களை மறுபடியும் காண்போம் என்னும் உறுதியை எங்களுக்கு நீங்கள் விட்டுச் செல்கிறீர்கள்” என்றேன். அது உண்மை . பாருங்கள்? 104நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள், கிறிஸ்து நம்மை இரட்சித்திருக்கிறார் என்பதற்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்... நாம் பின் மாற்றமடையக் கூடும்; நாம் தவறு செய்யக் கூடும்; நம்மனைவருக்கும் ஏற்றத்தாழ்வு உண்டு; ஆனால் உங்கள் ஆத்துமாவில், நீங்கள் ஏதாவதொன்றைச் செய்யும்போது, உடனே உங்களில் ஏதோ தவறு ஏற்பட்டு விடுகிறது; அதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அது தான் குதித்து ஓடி விடுவதற்கான நேரம். அதிலிருந்து விலகிச் செல்லுங்கள். இன்று நீங்கள் இங்கிருந்து வெளியே செல்லுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். யாராவது ஒருவர் உங்களிடத்தில் வந்து, “நீ உருளும் பரிசுத்தரில் ஒருவன் என்று அவர்கள் என்னிடம் சொல்லுகிறார்கள்' என்று சொல்லுகிறார் என்று வைத்துக் கொள்வோம். சாத்தான் உடனே உங்களிடம், ”அவனை கன்னத்தில் அறை என்கிறான். “நான் உருளும் பரிசுத்தனா என்பது எனக்குத் தெரியாது. நான் ஒரு கிறிஸ்தவன்” என்று சொல்லுங்கள். பாருங்கள்? தீமையை நன்மையினால் சந்தியுங்கள். இதை ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் தீமையை நன்மையினால் சந்திக்கும்போது, தீமை நன்மைக்கு முன்பாக நிற்க முடியாது. அதனால் முடியாது. 105நான் ஒரு மிஷனரி, நான் உலகம் முழுவதும் சென்று, பலவித தீமைகளை கண்டிருக்கிறேன் - பலவித மந்திரவாதிகள், கொள்கைகள், பலவித பிசாசு வழிபாடு, ஓ, நான் நினைத்துப் பார்க்கக் கூடிய எல்லாமே. தீமையை நன்மை எப்பொழுதும் வெல்கிறது என்பதை நான் கண்டிருக்கிறேன். - கவனியுங்கள், இரவு எவ்வளவு இருளாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை; உங்களால் உணர முடிகின்ற அளவுக்கு அது இருளாயிருக்கக் கூடும். உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தி எந்தவிதமான நிழலையும் காண முடியாமல் இருக்கக் கூடும். ஆனால் மிகச் சிறிய வெளிச்சம் கூட அந்த இருளை அம்பலப்படுத்தி விடும். நிச்சயமாக, அப்படித்தான் மரணத்தின் சமுகத்தில் ஜீவன் செய்கிறது. அப்படித்தான் தீமையின் சமுகத்தில் நன்மை செய்கிறது. அப்படித்தான் சந்தேகத்தின் சமுகத்தில் விசுவாசம் செய்கிறது, அது அதை சிதறடித்து விடுகிறது. 106சூரியன் பிரகாசிக்கும்போது - ஆசீர்வாதம் பிரகாசிக்கும் போது - இரவு எவ்விதம் இங்கு தங்கியிருக்க முடியும்? இரவு எங்கு சென்று விடுகிறது? அது இருக்க முடியாது. இரவுக்கு என்ன நேர்ந்தது? பன்னிரண்டு மணி நேரத்துக்கு முன்பாக இந்த கூடாரத்தில் இருந்த இருள் இப்பொழுது எங்கே? இந்த சுவர்களுக்குள் பரந்து கிடந்த அந்த இருள் இப்பொழுது எங்கே? அது இப்பொழுது இல்லை, அது மறைந்து விட்டது. ஏன்? வெளிச்சம் உள்ளே வந்தது. வெளிச்சம் உள்ளே வரும்போது, இருள் போகத்தான் வேண்டும். ஆம், ஐயா! 107இரவிலே திரியும் கரப்பான் பூச்சிகள், வண்டுகள் போன்றவைகளை எடுத்துக் கொள்ளுங்கள். சூரியன் எழும்பினால் அல்லது வெளிச்சம் பிரகாசிக்கத் தொடங்கினால், அவை எவ்விதம் இருளுக்கு ஓடி வருகின்றன என்பதை கவனியுங்கள். சுவிசேஷமும் அதை தான் செய்கிறது. அது பிரகாசிக்கும்போது, உங்களை “உருளும் பரிசுத்தர் என்று அழைக்க விரும்புகிறவர்களுக்கு என்ன நேரிடுகிறது? உங்களை கேலி செய்பவர்களுக்கு என்ன நேரிடுகிறது? வெளிச்சம் பிரகாசிக்கத் தொடங்கினவுடனே, அவர்கள் மெல்ல இருளுக்குச் சென்று விடுகின்றனர். ஏனெனில் அவர்கள் இருளின் பிள்ளைகள். ஆனால் வெளிச்சத்தின் பிள்ளைகளோ வெளிச்சத்தில் நடக்கின்றனர். நாமோ தேவனுடைய கிருபையினால் வெளிச்சத்தின் பிள்ளைகளாயிருக்கிறோம். எனவே வெளிச்சம் பிரகாசித்தபோது, நாம தேவனுக்கு நன்றி செலுத்தி, திறந்த கண்களுடன் நடந்து சென்று, மாம்சக் கண்கள் காணக்கூடாதவைகளை நாம் பார்த்தோம். ஏன்? விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப் படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. ஆமென்! அது எனக்குப் பிரியம். 108நான் பேசவேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த என் சிறு பிரசங்கத்துக்கு இப்பொழுது நேரமில்லை. ஏனெனில் நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும். எத்தனை பேர் கர்த்தரை நேசிக்கிறீர்கள்? ஆமென்! இந்த கேள்விகளை நாம் பார்த்த பிறகு - அவைகளில் சில மிக நுட்பமாகவும் எல்லாவிதமாகவும் இருந்தன, அவைகளுக்கு சரியான பதில் அளிக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.... ஒரு வேளை அதன் பேரில் நான் சரியான விதத்தில் செயல்படவில்லை என்றிருக்கலாம், ஏனெனில் வேதத்தை ஆராய்ந்து பார்க்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்விதம் நான் ஆராய்ந்திருந்தால், வேதவசனங்களை ஒரு தாளில் குறித்து வைத்திருப்பேன். எல்லோருக்கும் திருப்தி என்று நம்புகிறேன். இல்லாவிட்டால், அதை மறுபடியும் எழுதி எனக்கு அனுப்புங்கள். அவைகளுக்கு முழுவதுமாக பதிலளிக்கப்படவில்லை என்று நீங்கள் எண்ணினால், அதை ஆராய்ந்து படிக்க நான் நேரத்தை ஒதுக்குகிறேன். 109நீங்கள் தங்கியிருந்ததற்காக நன்றி. இன்னும் சில நிமிடங்களில் நாங்கள் ஜெப வரிசையை அமைக்கப் போகிறோம். அவ்விதம் செய்வதற்கு முன்பு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இருந்த சூழ்நிலையை நாம் மாற்றி அமைப்போம் - ஒருவர் கேள்வி கேட்டால், ஒருவர் இந்த விதமாக விசுவாசிப்பது, வேறொருவர் அந்த விகமாக விசுவாசிப்பது போன்ற நிலையை பாருங்கள், கேள்விகளுக்கு பதிலளிக்கையில், அது சில நேரங்களில் கடுமையாயுள்ளது. எனவே இப்பொழுது நாம் கர்த்தரைத் தொழுது கொண்டு பாடுவோம்: நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்தத்தால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். இதை மறுபடியும் பாடும்போது, உங்கள் அருகிலுள்ள யாராகிலும் ஒருவருடைய கைகளைக் குலுக்குங்கள். நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். இப்பொழுது நம்முடைய கரங்களை அவரிடம் இப்படி உயர்த்தி, நமது கண்களை மூடுவோம். நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 110எங்கள் பரலோகப் பிதாவே, உம்மை நாங்கள் நேசிக்கிறோம். கர்த்தாவே. இந்த சிறு கூட்டத்தாரும் உம்மை நேசிக்கின்றனர் என்று நான் விசுவாசிக்கிறேன். நாங்கள் ஜீவனுள்ள தேவனுடைய வீட்டுக்கு, இந்த சிறு கட்டிடத்துக்கு வந்திருக்கிறோம். கட்டிடம் முக்கியம் வாய்ந்ததல்ல, இந்த கட்டிடத்துக்குள் வாசமாயிருக்கிற தேவனே முக்கியம் வாய்ந்தவர். உதாரணமாக எனக்குள்ளே; இந்த பழைய சரீரம் இந்நாட்களில் ஒன்றில் மடிந்து விழுந்து போகும். ஆனால் அதற்குள் வாசமாயிருக்கிற மனிதன் மடிந்து விழுந்து போவதில்லை. ஏனெனில் தேவனுடைய வல்லமை அதை பற்றிக் கொண்டிருக்கிறது. இன்று காலையில் நாங்கள் தொழுது கொள்ள வந்திருக்கிற இந்த கட்டிடம். அதை எவ்வளவு அழகாக நாங்கள் கட்டினாலும், என்றாகிலும் ஒரு நாள் அது அழிந்து போகும், ஆனால் அந்த கட்டிடத்துக்குள் வாசம் செய்யும் தேவனோ நித்தியமானவராயிருக்கிறார். பிதாவே, உம்மை சந்தித்து, உமக்கு நன்றியறிதலையும் ஸ்தோத்திரங்களையும் ஏறெடுக்க நாங்கள் வந்திருக்கிறோம். ஜனங்களின் இருதயங்களிலிருந்த இந்த கேள்விகளை பார்க்கும்போது, அவர்கள் இதை செய்யலாமா அதை செய்யலாமா என்று வியந்து கொண்டிருந்ததாக நாம் காண்கிறோம். பிதாவே, ஒவ்வொரு கிறிஸ்தவனின் மிருதுவான இருதயத்திலும், அளிக்கப்பட்ட பதில்கள் ஏதாவதொரு வகையில், அவர்கள் சத்தியம் என்னவென்பதை அறிந்து கொள்ள உதவி செய்திருக்குமென்று நம்புகிறேன். கர்த்தாவே, அதை அருளும். நான் சரியான பதில் கூற தவறியிருந்தால், என்னை மன்னித்தருளும். நான் தவற வேண்டு மென்று நினைக்கவில்லை, ஏனெனில் இவர்கள் உம்முடைய பிள்ளைகள். இவர்கள் இந்த கேள்விகளைக் கேட்டனர். பிதாவே, நான் சொல்வதன் பேரில் என்னை நியாயந்தீர்ப்பதற்காக இங்கு நீர் நின்று கொண்டிருந்தீர் என்பது போல, எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அவர்களுக்கு அளிக்க விரும்பினேன். 111இப்பொழுதும், கர்த்தாவே, வியாதியஸ்தருக்காக உமது சமுகத்தில் வருகிறோம். நாம் விசுவாசிப்பதை மட்டுமே நாம் பெற்றுக் கொள்வோம் என்று வேதம் உரைக்கிறது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஒரு சமயம், பிதாவே, இயேசு இவ்வுலகில் இருந்த போது, சீரோபோனிக்கியா தேசத்தாள் அவரிடம் வந்து, “கர்த்தாவே, என் மகள் மேல் இரங்கும், அவள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்றாள். அவர், “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குப் போடுகிறது நல்லதல்ல என்று சொன்னதை நாங்கள் கேட்கிறோம். ஓ, தேவனே, அது எத்தகைய நேரடியான மறுத்தல்! அது மாத்திரமல்ல, அவளை நாய் என்றழைப்பது. அவள் அதைக் குறித்து கோபப்படுவதற்கு பதிலாக, அவள் இனிமையாயும் தாழ்மையாயும், அது உண்மை, ஆண்டவரே என்றாள். ஏனெனில் அது உண்மைதான். அது உண்மை , ஆண்டவரே. ஆனால் நாய்கள் எஜமானின் மேசையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே“ என்றாள். அதுதான் இயேசு செயல்பட காரணமாயிருந்தது. அவள் பிள்ளைகளின் மேசையிலிருந்து விழும் துணிக்கைளை ஏற்றுக் கொள்ள சித்தம் கொண்டாள். தேவனே, இப்பொழுது அதுவே எங்கள் மனப்பான்மையும் கூட. பிதாவே, நீர் எங்களுக்கு செய்ய விரும்புகிற எதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள சித்தமாயிருக்கிறோம். 112தரிசனங்களைக் காண்பித்து அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்த பழைய ஏற்பாட்டின் தேவன் இன்றைக்கும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன். பழைய ஏற்பாட்டின் மக்கள் போக விரும்பின அதே பரலோகத்துக்கு என்றாகிலும் ஒரு நாள் தேவனுடைய கிருபையினால் நாங்களும் செல்வோம். ஏனெனில் அதே தேவன் நமது மத்தியில் தம்மை மாறாதவராகக் காண்பித்துக் கொண்டு வருகிறார். பிதாவே, எங்கள் மத்தியில் இன்று காலை வியாதியஸ்தர்களும் தேவையுள்ளவர்களும் உள்ளனர். அவர்கள் ஜெப வரிசையில் கடந்து வரப் போகின்றனர். அவர்கள் வந்து, “நீர் எனக்கு நன்மை செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை” என்று சொல்லாதிருப்பார்களாக. கர்த்தாவே, அத்தகைய மனப்பான்மை இருக்க வேண்டாம். அவர்கள் “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று தேவன் உரைத்துள்ளதை நினைவுகூர்ந்து இங்கு வருவார்களாக. அதை நீர் வாக்களித்திருக்கிறீர், அவ்வாறு நீர் உரைத்திருக்கிறீர். அவர்கள் பரிசுத்தமான பயபக்தியுடன் வந்து, ஜெபம் ஏறெடுக்கப்பட்டு கைகள் அவர்கள் மேல் வைக்கப்பட்ட மாத்திரத்தில், இந்த சகோதரி, “பரிசுத்த ஆவியானவர் அவருடைய பிரசன்னத்தினால் அவளை அதிகமாக அபிஷேகித்து அவளுடைய சரீரத்தை ஏறக்குறைய கொன்று போட்டார்” என்று அந்த கேள்வியை எழுதினது போல, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்குவார் என்று விசுவாசிப்பார்களாக. கர்த்தாவே, இன்று காலையில் இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் அந்த பலன் கிடைப்பதாக. அதை அருளும். அவர்கள் சுகமடைவார்களாக. அதை நீர் வாக்களித்துள்ளீர் என்றும், நீர் பொய் சொல்ல முடியாது என்றும், வெளிச்சம் தோன்றும் மாத்திரத்தில், இருளும் சந்தேகமும் ஓடிப்போம் என்று சிறிது கூட சந்தேகமுமின்றி அவர்கள் வருவார்களாக. பிதாவே, இதை அருளும். அவர்களுக்காக இப்பொழுது நாங்கள் ஜெபிக்கையில், அவர்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம், இயேசுவின் நாமத்தில். ஆமென். இந்தப் பக்கத்தில் முதலாவதாக ஜெபித்துக் கொள்ளப்பட விரும்புவோர், டெட்டி, மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகில் இருக்கிறார்' என்னும் பாடலை வாசிக்கும்போது, கட்டிடத்தில் வரிசையில் நில்லுங்கள். (ஜெபித்துக் கொள்ளப்படுகிறவர்களுக்கு சகோ. பிரான்ஹாம் வழிகாட்டுகிறார் - ஆசி). 113இப்போது, ​​பெருமை கொள்ள விரும்புவோர், இந்தப் பக்கம் மார்பகம், அமெரிக்காவுக்கான டெட்டி இடத்தில் குனிந்து வரிசையாக நிற்கவும் “இப்போது பெரிய இயற்பியல் நெருங்கிவிட்டது.” 114அண்ணன் நெவில்லே... தொடருங்கள், வாருங்கள். நாங்கள் இங்கேயே நிற்போம். எல்லா தேவாலயங்களும் ஜெபிக்கட்டும். மேலும் சகோதரர் நெவில்லும் நானும் இங்கு ஒன்றாக இருப்போம்; அவன் அபிஷேகம் செய்வான்; உடம்பு சரியில்லாதவர்கள் மீது கை வைப்பேன், சரியா...?... இப்போது, ​​அனைவரும் பிரார்த்தனையில் இருக்கிறார்கள்.இப்போது, ​​நாம் என்ன செய்கிறோம்? நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அபிஷேகம் செய்யவும் அவர்களுக்காக ஜெபிக்கவும் வருகிறோம். இப்போது, ​​நான் உங்களுக்கு வேதத்தை மேற்கோள் காட்டுகிறேன். “உங்களில் யாராவது நோயாளிகள் இருந்தால், அவர்கள் தேவாலயத்தின் மூப்பர்களை வரவழைக்கட்டும், அவர்கள் அவர்களுக்கு எண்ணெய் தடவி, அவர்களுக்காக ஜெபிக்கட்டும். விசுவாச ஜெபம் நோயாளிகளைக் காப்பாற்றும், கடவுள் அவர்களை எழுப்புவார். எந்த பாவம் செய்தாலும் அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். உங்கள் தவறுகளை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, நீங்கள் குணமடைய ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள். இப்போது இந்த பக்கத்தில் மீதமுள்ளவை, நீங்கள் விரும்பும் போது, ​​​​அந்தக் கோட்டிற்கு கீழே, அந்த இடம், அந்த இடைகழி, நீங்கள் பின்னால் வந்துவிடுவீர்கள். இப்போது இங்கே தேவாலயத்தின் பெரியவர் அபிஷேகம் மற்றும் பிரார்த்தனை செய்வார். நான் பிரார்த்தனை செய்வேன், நோயாளிகள் மீது கைகளை வைப்பேன். இப்போது, ​​நண்பர்களே, பிரார்த்தனை வரிசையில் நிற்கிறீர்களே, நீங்கள் எதற்காக இங்கு நிற்கிறீர்கள் என்பதை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை நிரூபிக்கும் தருணம் இது. நீங்கள் நலம் பெற வேண்டும். நான் முழு மனதுடன் நம்புகிறேன், அதுதான் என் அம்மாவை இவ்வளவு நேரம் வைத்திருந்தது, (மற்றும் அவர் ஒரு வயதான பெண்) அதை நான் நம்புகிறேன். அவர் என்னிடம் சொல்லும் வரை... அவள் இறந்து கொண்டிருக்கலாம், ஆனால் அவன் என்னிடம் சொல்லும் வரை, அவள் இறக்கவில்லை என்று நான் நம்புகிறேன், பார். இப்போது, ​​​​அவள் போக வேண்டும் என்று எனக்குத் தெரியும், அவள் செல்ல வயதாகிவிட்டாள், மேலும் செல்ல விரும்புகிறாள், செல்ல முயற்சிக்கிறாள். ஆனாலும் நான்-அவர் என்னிடம் சொல்வார் என்று நான் நம்புவேன். இப்போது அவர் என்னிடம் சொல்வார் என்று நான் நம்புகிறேன், பார். இப்போது அவர் இல்லாமல் இருக்கலாம். எனக்குத் தெரியாது, அவர் செய்வார் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவர் செய்வார் என்று நான் நம்புகிறேன், பார். ஆனால் இதுவரை அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. நான் அதை நம்புகிறேன். மற்றும் நீங்கள் என்றால்...?... 115அவர் எனக்குக் காட்டும் அனைத்தையும் நான் மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை, அது உங்களுக்குத் தெரியும். சரி, நேற்று நான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்தேன், என்ன செய்யப் போகிறது என்பதை நான் ஒரு தரிசனத்தைப் பார்த்தேன், அது உண்மை என்று கடவுளுக்குத் தெரியும், மேலும் இரண்டு அல்லது மூன்று பேருடன் சரியாக உட்கார்ந்துகொண்டார். ஒரு அரை மணி நேரத்திற்குப் பிறகு, அது நடந்ததைப் பார்த்தேன். நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன், எனக்குள் நடுங்கினேன், பார்? மே... நான் சொன்னேன், “ஒருவேளை அப்படித்தான் நடக்கும் என்று நான் அவர்களிடம் சொல்லியிருக்கலாம்.” ஆனால் நான், “சரி, அதை விடுங்கள். பார்க்கவா?” அதுவும் தினமும் நடக்கும். பார்க்கவா? ஏதோ நடக்கப் போகிறது; நான் தான் அனுமதித்தேன். அது உண்மை என்று கடவுளுக்குத் தெரியும். பார்க்கவா? ஏதோ நடக்கப் போகிறது, அதைக் காட்டுகிறது, சொல்கிறது. எனக்கு ஏதோ தோன்றி, “இந்த வார்த்தையை இப்படிச் சொல்லுங்கள், இது இங்கே நடக்கும்” என்று கூறுவார்கள். பின்னர் நான், “சரி, அது அப்படியே இருக்கட்டும்” என்று கூறுவேன். பிறகு நான் பார்க்கிறேன்; இங்கே அது இங்கே முடிந்துவிட்டது. பார்க்கவா? ஆம். சரி, அவரால் பொருள்கள், பொருள், உயிர் இல்லாத ஒன்றைச் செய்ய முடிந்தால், அவருடைய வார்த்தைக்கு நகர்த்தலாம், ஏனென்றால் நாம் அதைச் சொன்னோம், மேலும் அவர் உங்களையும் என்னையும் என்னுடன் இணைக்க முடியும். நீ என்னுடன் இருக்கிறாய்; நீங்கள் என்னுடையவர் - நீங்கள் நோய்வாய்ப்பட்ட என் சகோதரனும் சகோதரியும். “கடவுளின் சக்தி இவரைக் குணப்படுத்தட்டும்” என்று நாம் இந்த வார்த்தைகளைச் சொன்னால், அது ஏன் நடக்க வேண்டும். இப்போது, ​​“இல்லை, எனக்கு சந்தேகம்” என்று சொல்ல முடியாது. அது முன்னோக்கிச் சென்று அதைச் செய்யும். ஆனால் நீங்கள், “சரி, நான் ஆச்சரியப்படுகிறேன்” என்று சொல்லலாம், அது நடக்காது. பார்க்கவா? ஆனால் நீங்கள் முன்னோக்கிச் சென்று, “நான் குணமடையப் போகிறேன்” என்ற உங்கள் எண்ணத்திற்கு இணங்கச் சென்றால். நீங்கள் அதை வைத்திருக்க வேண்டும். நீங்கள் அதை நம்புகிறீர்களா? 116இப்போது அனைவரும் பிரார்த்தனை செய்வோம். எங்கள் பரலோகத் தகப்பன், இந்த இளம் பெண்ணின் மீது கைகளை வைக்கிறார், இந்த இளம் தாய், இந்த மோசமான குளிரால் அவதிப்படுகிறார். விடுங்கள்... எனவே இந்த கைக்குட்டைகள் மக்கள் மீது வைக்கப்படும் மக்களை நீங்கள் குணப்படுத்த வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அவர்களின் கோரிக்கைகளை அவர்களுக்கு வழங்குங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் கேட்கிறேன். ஆமென். 117நீங்கள் தங்கியிருப்பதற்கும், இந்த நேரம் முழுவதும் தங்கியிருப்பதற்கும், நாங்கள் இருக்கும் போது தேவாலயத்தில் இப்படிக் காத்திருப்பதற்கும் உங்கள் விசுவாசத்திற்கு ஆழ்ந்த பாராட்டுக்கள். தேவாலயமா? எனக்கு ஒரு சிறந்த இடம் தெரியாது. மேலும் கடவுள், அவர் இப்போது இருப்பதில் நமக்கு இருக்கும் ஆறுதல். நாம் ஒரு கணம், அவர் எவ்வளவு பெரியவர், அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்று சிந்திப்போம். அவர் இல்லாமல் நாம் என்ன செய்திருக்க முடியும்? நாம் அவரை எப்படிப் பார்த்தோம், ஒரு விஷயத்தை மட்டும் அவர் நமக்குச் சொல்லவில்லை... அவர் எனக்கு தரிசனங்களைக் கொடுத்தார். நான் இன்று காலை உங்களிடம் கேள்வி கேட்கிறேன், அவர் நிறைவேற்றியதைத் தவிர ஒன்றை நீங்கள் எப்போதாவது பார்த்தீர்களா? அவர் என்ன செய்வேன் என்று சொன்னாரோ, அதையே இந்த நேரத்தில் செய்ய வேண்டும். பிறகு அவர் கடவுள். அப்போது அவர் நம் தந்தை. அவர் நம்மை நேசிக்கிறார். மேலும் அவருடைய சொர்க்கம் எங்கிருந்தாலும், நாம் ஒரு நாள் அங்கு செல்ல வேண்டும் என்பது நமக்குத் தெரியும். அவர் இப்போது இங்கே இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். என்பதை உணர்ந்து கொள்கிறோம். 118நாம் - நாம் பார்க்காத விஷயங்களைப் பார்க்கிறோம். இப்போது, ​​உங்களில் பலர் ஜெபிக்கப்பட்டனர், மேலும் (பார்க்க?), அதற்கு முரணான எந்தவொரு விஷயத்தின் அறிகுறிகளையும் நாங்கள் மறுப்பதால்... பார்க்கிறீர்களா? கடவுள் வாக்களித்த எதையும்... பார், கிறிஸ்தவன் பார்ப்பதில்லை... நீ எப்படியும் உன் கண்ணால் பார்ப்பதில்லை. உனக்கு அது தெரியும். நீங்கள் உங்கள் கண்களால் பார்க்கவில்லை. நீங்கள் உங்கள் இதயத்தால் பார்க்கிறீர்கள். பார்க்கவா? “பார்த்தல்” என்றால், “புரிந்துகொள்வது.” நீங்கள் உங்கள் இதயத்தால் புரிந்துகொள்கிறீர்கள்; எனவே, நம் கண்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பார்க்கிறோம். பார்க்கவா? கிறிஸ்தவ வாக்குமூலம், கிறிஸ்தவத்தின் முழு கவசம் அதை அடிப்படையாகக் கொண்டது. நாம் காணாதவற்றைப் பார்க்கிறோம், ஏனென்றால் ஆபிரகாம் கடவுளை நம்பியதால், இல்லாதவற்றைப் போல் அழைத்தார். பார்க்கவா? இப்போது நாம் என்ன செய்வது? இப்போது, ​​நீங்கள் அப்படி ஜெபிக்கும்போது, ​​கடவுள் உங்களைக் குணப்படுத்துவதாக வாக்களித்தார். இப்போது நீங்கள் வித்தியாசத்தை உணராமல் இருக்கலாம், ஆனால் அவர் ஒருபோதும்... அது-அதுவே இல்லை. பார்க்கவா? நாங்கள் எப்படியும் நம்புகிறோம். 119உங்களுக்குத் தெரிந்திருந்தால், நான் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு பிரசங்கத்திற்கு வருவேன், கூட்டத்திலிருந்து பாதி வழியில் செல்வேன் என்று நான் நினைக்கவில்லை. நான் மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் இருந்தேன், எனக்கு காய்ச்சல் வருவது போல் உணர்ந்தேன், ஆனால் இப்போது நான் நன்றாக உணர்கிறேன், ஏனெனில் நான் சொன்னேன், “நான் கடவுளுக்குக் கட்டுப்பட்டவன். நான் கடவுளை நம்புகிறேன்.” மேலும் நான் அவருடன் சண்டையிட வேண்டியிருந்தது. இன்று காலை இங்கே இறங்க முயற்சித்ததில் அங்குள்ள என் மனைவியும் உன்னிடம் அதையே சொல்லலாம், நான் தொண்டையில் கரகரப்பாக இருந்தேன். நான், “நான் அதை எப்படி செய்ய முடியும்?” ஆனால், நேர்மையாக, நான் இப்போது அற்புதமாக உணர்கிறேன். மேலும் நான்-எனது உரையை எடுத்துக்கொண்டு முன்னோக்கிச் சென்று பிரசங்கிக்க முடியும் என்று நான் நம்புகிறேன், அதுவும் நன்றாக உணர்கிறேன். ஆனால், நீங்கள் பார்க்கிறீர்கள், உங்கள் கண்களால் பார்க்காத விஷயங்களை நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் அதை உங்கள் இதயத்துடன் பார்க்கிறீர்கள். நீங்கள் அதை நம்புகிறீர்கள், நீங்கள் பார்க்காதவைகளுக்கு நீங்கள் சாட்சியமளிக்கிறீர்கள், ஆனால் நீங்கள் எதை நம்புகிறீர்கள். ஏனென்றால் அது நம்பிக்கை. “விசுவாசம் என்பது நம்பப்படும் காரியங்களின் சாராம்சம், காணப்படாதவைகளின் ஆதாரம்.” 120இன்று காலை, ஒரு இளம் கிறிஸ்தவர் எனக்கு முன்னால் வந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன், அந்த நபர் எடுத்த ஒரு முடிவை நான் அறிவேன். மற்றும் நான் நிச்சயமாக அதை பாராட்டுகிறேன். அது யார் என்று நான் சொல்லமாட்டேன், ஆனால் இந்த குறிப்பிட்ட கிறிஸ்தவர், ஒரு கூட்டாளியாக இருந்தாலும் சரி, நண்பராக இருந்தாலும் சரி, தந்தையாக இருந்தாலும் சரி, தாயாக இருந்தாலும் சரி, அவர்கள் நிலைத்திருக்க விரும்புகிற ஒரு முடிவை நான் பாராட்டுகிறேன். கிறிஸ்துவுக்கு விசுவாசமாக. பார்க்கவா? விசுவாசமாக இருப்பதன் மூலம் நீங்கள் அன்பானவரை வெல்வீர்கள். விசுவாசமாக இருப்பது அன்புக்குரியவர்களை வெல்லும் வழி. உங்கள் நம்பிக்கையில் இருங்கள். நீங்கள் கடவுளுடன் சரியாக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், பின்னர் எப்போதும் அங்கேயே இருங்கள். அதனுடன் சரியாக இருங்கள். நீங்கள் சரியாக இருந்தால் எதுவும் உங்களை அதிலிருந்து நகர்த்த முடியாது. 121இப்போது நாம் அனைவரும் தவறு செய்யப் போகிறோம். ஞாபகம் வைத்துகொள். நீங்கள் ஒருவரையொருவர் பார்க்கும்போது, ​​மற்றவரின் தவறைப் பார்க்காதீர்கள். பார், அதைச் செய்யாதே, ஏனென்றால், நீங்களும் தவறு செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் இந்த நபரை வழிநடத்தும் கிறிஸ்துவைப் பாருங்கள். அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், நீங்கள் அவர்களுக்காக ஜெபியுங்கள். அதுதான் - நாம் பழகுவோம் (பார்க்க?), பிரார்த்தனை. நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வேறு ஒருவருக்காக ஜெபிக்கும்போது, ​​​​அந்த வகையான பிழைத்திருத்தத்தில், நீங்கள் வேறொருவருக்காக ஜெபிக்கும்போது கடவுள் உங்களை மதிப்பார் மற்றும் குணப்படுத்துவார். அது சரி. ஒருவருக்கு ஒருவர் உதவுதல், ஒருவருக்காக ஒருவர் செய்தல், ஒருவருக்கு ஒருவர் இரக்கம் காட்டுதல், ஒருவரையொருவர் புரிந்துகொள்தல் போன்றவற்றின் அடிப்படையில் தான் கிறிஸ்தவம் உள்ளது. இப்போது, ​​​​உங்கள் அண்டை வீட்டாரின் தவறைப் பார்த்தால், அவர்கள் எங்கே தவறு செய்தார்கள் என்று நீங்கள் பார்க்கிறீர்கள், அவர்களுடன் தவறாகப் போகாதீர்கள், ஆனால் அவர்களுக்காக ஜெபிக்கவும். ஜெபித்துக் கொண்டே இருங்கள், கடவுள் அதைப் புரிந்துகொள்வார். அவர் எல்லாவற்றையும் சரியாகச் செய்வார். 122இப்போது, ​​நான் நம்புகிறேன், அது இறைவனின் விருப்பமாக இருந்தால், பில்லிக்கு ஒரு அமைப்பு கிடைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன், அவர் அனைவருக்கும் ஒரு அட்டையை அனுப்புகிறார். அம்மா இந்த வாரம் நன்றாக இருந்தால்; இப்போது எங்களுக்குத் தெரிந்தவரை, எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த வாரம் அம்மா சரியாகிவிட்டால், அடுத்த ஞாயிற்றுக்கிழமை நான் ஒரு நற்செய்தியைப் பற்றி பேச விரும்புகிறேன். அது சரி என்றால், எங்களுடைய விலைமதிப்பற்ற போதகருடன். உங்களால் முடிந்தால் நாங்கள் உங்களை மீண்டும் எதிர்பார்க்கிறோம்... உங்களால் வர முடிந்தால், உங்களைப் பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் அவரை முழு மனதுடன் நேசிக்கிறீர்களா? அவர் அற்புதமானவர் அல்லவா? அவர் இல்லாமல் நாம் என்ன செய்ய முடியும்? இப்போது, ​​நீங்கள் என்ன செய்ய முடியும்? பெரியதாக இருக்கும் எதையும் என்னிடம் சொல்ல முடியுமா? அதைவிட பெரியதை உன்னால் எனக்குக் காட்ட முடிந்தால், நான்-நான்-நான்-நான் பெற்றதை விற்றுவிடுவேன், இதைவிடப் பெரியதை நீங்கள் எனக்குக் காட்ட வேண்டும் என்று ஏங்குகிறேன். ஆமாம் ஐயா. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன் தம்மைத்தாமே தாழ்த்தி, இறங்கிவந்து, நம்மிடையே குடியிருந்து, நமக்காகச் செய்வார் என்பதை, நாம் இரட்சிக்கப்படுகிறோம் என்ற உறுதியுடன் அறிந்துகொள்வது, நான் அறிந்த மிகப் பெரிய காரியம் இதுவே. 123இப்போது, ​​நாம் சரியா இல்லையா என்பதை நாம் எப்படி அறிவோம் (பார்க்க?), ஏனென்றால், அந்த கிறிஸ்தவர்களுடன் அவர் ஆரம்பத்தில் செய்த காரியம், தேவாலயம், மிகவும் செயல்பாடு, பரிசுத்த ஆவியானவர் நகர்ந்த விதம், பிசாசு அவர்களுக்கு எதிராகப் போரிட்ட விதமும், அவர்கள் நின்ற விதமும், அதே அடையாளங்களோடு, அதே அற்புதங்களுடன், அதே கடவுள், அவரைப் பற்றிய தவறில்லாத சான்றாக, இங்கேயே நடக்கிறது. விஞ்ஞான வார்த்தையில் சொல்லுங்கள், அது நடக்கும் முன், வரும் ஆண்டுகளில் அல்லது காலங்களில் நடக்கும் ஒன்றை எப்படி யாராலும் முன்னறிவிக்க முடியும் என்பதை அறிவியல் வழியில் சொல்லுங்கள். சக்தியை எனக்குக் காட்டுங்கள், அது எங்கே இருக்கும், அது நடக்கும் முன் அதை முன்கூட்டியே அறியும். நீங்கள் விரும்பும் எதையும் பின்வாங்கக்கூடிய எந்த மனித மனதையும் என்னிடம் சொல்லுங்கள், மேலும் நீங்கள் எதையாவது பார்க்க முடியும் மற்றும் நடந்ததை முன்னறிவிக்கக்கூடிய எந்த வழியையும் எனக்குக் காட்டுங்கள்-அது நடக்கும். பார்க்கவா? இல்லை. 124எனவே, அவர் கடவுள். பார், அவர் கடவுள். மேலும் அவர் கடவுளாக இருப்பதால், அவருடைய கிருபையின் மூலம் அவர் நம்முடன் வந்து வாழ்கிறார், மேலும் அவர்களுடன் இந்த விஷயங்களை முன்னறிவித்த மனிதர்களைப் போலவே, அவர்கள் முன்னறிவித்தபடியே அவை ஒவ்வொன்றும் நடந்தன. இப்போது, ​​அதே கடவுள் நம்முடன் இருக்கிறார், முன்னறிவித்து, அவர் அங்கு செய்த அதே விஷயங்களைக் காட்டுகிறார். ஏன், நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நாம் மேகத்திலிருந்து மேகத்திற்குச் செல்வது போல, விண்வெளியில் நடப்போம், கிட்டத்தட்ட, ஏனென்றால் அது நமக்குத் தெரியும். நாம் மரணத்திலிருந்து ஜீவனை அடைந்துவிட்டோம் என்பதை அறிவோம். நமக்கு இரட்சிப்பு உண்டு என்பதை நாம் அறிவோம். நாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதை அறிவோம். நாம் பரலோகத்திற்குச் செல்கிறோம் என்பதை நாம் அறிவோம், ஏனென்றால் கடவுள் வாக்குறுதியளித்தார், மேலும் இங்கே அவர் நம்முடன் சரியாகச் செல்கிறார் - நாம் அவரைப் பார்க்கும் விதத்தில். 125நாம் அவரை பார்க்கிறோம். நான் அவரை எப்படி பார்ப்பது? உன்னை பார்க்கும் போது. நீங்கள் அவரை என்னில் காண்கிறீர்கள்; நான் அவரை உன்னில் காண்கிறேன். பார், அவர் உங்களுக்காக என்ன செய்கிறார் என்பதை நான் காண்கிறேன். இப்போது, ​​இங்கே அவர் எனக்கு வார்த்தையை வெளிப்படுத்துவதை நான் காண்கிறேன். நீங்கள், “என்னில் அவரை எப்படி பார்க்க முடியும்?” சரி, பார், அவர் இங்கே எனக்கு வார்த்தையை வெளிப்படுத்துகிறார். நான் அதை அங்கே பார்க்கிறேன், அவர் அதை உங்களுக்குக் கொடுக்கிறார், நீங்கள் அதை வைத்திருக்கிறீர்கள். பார்க்கவா? பின்னர் நீங்கள் திரும்பிப் பார்க்கிறீர்கள், “அவர் எப்படி இருந்தார், அது எப்படி வந்தது?” பிறகு நீங்கள் திரும்பி வாருங்கள், அது சரி என்று கண்டுபிடியுங்கள். பார்க்கவா? எனவே நீங்கள் அவரை என்னில் காண்கிறீர்கள்; நான் அவரை உன்னில் காண்கிறேன். மேலும் சூரிய உதயத்தில் அவரைக் காணலாம். சூரிய அஸ்தமனத்தில் நாம் அவரைக் காணலாம். பூக்களில் அவரைக் காணலாம். நாம் அவரைப் பார்க்க முடியும்... நாம் எங்கும் அவரைக் காணலாம், ஏனென்றால் நாம் இந்த பூமிக்குரிய நிலையின் கீழ் கூறுகளிலிருந்து, கடவுளின் மகிமையின் இந்த உயர்ந்த உறுப்புக்குள் கடந்துவிட்டோம், அதனால் அவருடைய அழகைக் காணலாம். சில நாட்களுக்கு முன்பு, நான் இந்தப் பயணத்தில் இருந்தபோது, ​​அலாஸ்கன் நெடுஞ்சாலையில், நான் வேட்டையாடச் சென்றபோது, ​​அங்கே திரும்பி வந்து, “ஏன்? ஏன்?” கடவுள் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள். இப்போது, ​​எல்லா இடங்களிலும் நோய்வாய்ப்பட்டவர்கள் இருக்கிறார்கள், ஆனால் கடவுளுக்குத் தெரியும். 126இப்போது, ​​நாளை நான் புறப்பட வேண்டும், சகோதரர் ராய் அங்கேயே திரும்பிச் செல்கிறோம், நாங்கள் அனைவரும், நாளை கொலராடோவுக்குப் புறப்பட வேண்டும், எங்கள்... ஒவ்வொரு வீழ்ச்சிக்கும் வேட்டையாடப் போகிறோம். கூட்டங்கள், செல்ல. அம்மா, அம்மாவின் நிலை காரணமாக என்னால் போக முடியாது.இப்பொழுது, பரிசுத்த ஆவியின் இரக்கத்தைப் பாருங்கள். அது அவருக்கு வெகு காலத்திற்கு முன்பே தெரியும். அதனால் என்னைப் போக விடாமல், அவர் திரும்பி, எனக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்து, என்னை அங்கே அனுப்பினார், மேலும் கொலராடோவில் என்னால் செல்ல முடியாத வேட்டையாடும் பயணத்தில் ஒன்றை எனக்குக் கொடுத்தார் (பார்க்க?), ஏனெனில் அவை கொலராடோவில் இல்லை. அது போல. திரும்பி, கொலராடோவுக்கான இந்த பயணத்தில் அவர் என்னை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதை அறிந்து, அதை ஒரு பார்வை மூலம் எனக்குக் கொடுத்தார். நன்மை மற்றும் கருணை பற்றி பேசுங்கள். பிறகு ஏன்? என் அம்மா கஷ்டப்படப் போகிறார் என்று நீண்ட காலத்திற்கு முன்பே அவருக்குத் தெரியும். என் அம்மா மருத்துவமனையில் இருப்பார் என்று அவருக்குத் தெரியும். அவர் அதை அனுமதித்தால், எனக்கு எதுவும் தெரியாத நல்ல நோக்கத்திற்காக அவர் அதைச் செய்கிறார். ஆனால் கர்த்தரை நேசிப்பவர்களுக்கு எல்லாமே நன்மைக்காக ஒன்றாக வேலை செய்வதை நான் அறிவேன்.நாம் எப்போதாவது ஒருமுறை நின்று, தேவாலயத்தில், நம் கடவுளைப் பார்க்க வேண்டும் என்றால்... உங்களை நிறுத்திவிட்டு, உங்கள் குழப்பங்களிலிருந்து விலகி, அவருடைய ஆவியின் பிரசன்னத்தில் சில நிமிடங்கள் நிற்கவும், அவர் நகர்வதை நீங்கள் பார்க்கலாம். எல்லா இடங்களிலும். அவர் எவ்வளவு நல்லவர் என்று பாருங்கள்? 127இப்போது, ​​அம்மா அங்கே கிடக்கிறார்கள், நான் அவளைப் பற்றி ஆச்சரியப்படுகிறேன். அவளுக்கு பக்கவாதம் வந்தபோது அவன் ஏன் அவளை விடவில்லை? அவள் ஏன் அப்போதே இறக்கவில்லை? ஆனால், பார், அதை முன்னரே அறிந்திருந்தும், நான் உறுதியளித்தேன் என்று தெரிந்தும்... நான் கொலராடோவுக்குப் போகிறேன், அப்படிப்பட்ட காடுகளுக்குள் செல்வது எனக்குப் பிடிக்கும் என்பதை அறிந்து, அவர் திரும்பி வந்து எனக்கு ஒரு பரிசைக் கொடுத்தார். சிறந்த ஒன்று, என்னை அங்கு அனுப்பிவிட்டு, நான் என்ன பெறப் போகிறேன், அதைப் பற்றிய அனைத்தையும் என்னிடம் சொன்னேன், 'நான் கிளம்புவதற்கு முன்பே; மக்கள் எப்படி உடையணிந்து இருப்பார்கள், நாங்கள் என்ன செய்வோம், அதைப் பற்றி எல்லாம் சொன்னார். பிறகு வருகிறேன், எல்லாவற்றையும் சொன்னேன். பின்னர் அவர் மேலே சென்று அது நடப்பதைப் பார்க்கிறார், திரும்பி வாருங்கள், அது சரியாகவே இருக்கிறது. சரியாக, பாருங்கள், அம்மா வெளியே இருப்பார் என்று தெரிந்து, அவள்-அவள் இந்த நேரத்தில் உடைந்து போயிருப்பாள், என்னால் இந்த மற்ற பயணத்தை மேற்கொள்ள முடியாது. பார்க்கவா? நாங்கள் குறைய மாட்டோம்... அப்போது எனக்கே புரியவில்லை. ஆனால் நீங்கள் அவருக்கு உங்களை ஒப்புக்கொடுத்து அவரைப் பார்த்தால், அவர் எல்லாவற்றையும் சரியாக வழிநடத்துகிறார். பார்க்கவா? அவர் எல்லாவற்றையும் சரியாக, படிப்படியாக வெளிவரச் செய்கிறார். 128மறுநாள் நான் ஒரு இளம் மந்திரியின் அருகில் நின்று கொண்டிருந்தேன், அவர் சில கனவுகளைக் கொண்டிருந்தார், அவர் கனவுகளை என்னிடம் கொண்டு வந்தார். விளக்கம் வந்ததும், நாங்கள் அங்கேயே நின்றோம், பில்லியும் நானும் இந்த அமைச்சரும் ஒன்றாக நின்றோம். அங்கே அது இருந்தது. ஏன், அது முடிந்தவரை சரியாக இருந்தது. அந்த மனிதன் எப்படி பிரமிப்புடன் அங்கே நின்றான், எப்படி பரிசுத்த ஆவியானவர் அந்த விஷயங்களை வெளிப்படுத்தினார், அவரை நேராக திரும்பி அழைத்து வந்து, அதைச் செய்ய வேண்டிய இடத்தில் சரியாகக் காட்ட முடியும். ஓ, நான் உங்களுக்கு சொல்கிறேன்; அவர் கடவுள். அவர் - அவர் வசிக்கிறார் ... அவர் கடவுள். 129உங்களில் பலர் தியாகம் செய்துள்ளீர்கள். நீங்கள் உங்கள் காதலன் அல்லது தோழிகளை விட்டுவிட்டீர்கள், நீங்கள் வீடுகளை விட்டுவிட்டீர்கள், மற்றும் பலவற்றை விட்டுவிட்டீர்கள், மேலும் உங்களில் பலர் நீண்ட காலமாக உங்களுக்குத் தெரிந்த கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள், விஷயங்கள் மற்றும் பழைய நண்பர்களிடமிருந்து வெளியே வர வேண்டியிருந்தது. , இறைவனின் வழியில் நடக்க வேண்டும். அதற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன். அதைச் செய்வது அற்புதம் என்று நினைக்கிறேன். இப்போது, ​​நீங்கள் சுவிசேஷ ஒளியைப் பார்த்திருப்பதால், அதுவே உண்மை, நீங்கள் - அந்த ஒளியில் நடப்பீர்கள். குழந்தைகளே, நீங்கள் என்ன செய்தாலும், நீங்கள் எங்கு சென்றாலும், தீமையின் தோற்றத்தைத் தவிர்த்து, கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள். நீங்கள் வாழும் வரை, அந்த சாலையில் சரியாக இருங்கள். அதிலிருந்து நகர வேண்டாம், அது நிச்சயமாக நல்ல பலனைத் தரும். அது நித்திய ஜீவன். 130நான் அம்மாவை எப்போது பார்க்கிறேன் - அவள் எப்போது... சில நிமிடங்களில் அவள் தன்னை அடைய முடியும். நான், “அம்மா, அம்மா, நீங்கள் சொல்வதைக் கேட்கிறீர்களா?” சில நேரங்களில் அவள் அங்கேயே படுத்திருக்கிறாள், அவள் மாட்டாள். சிறிது நேரம் கழித்து அவள், “உம்” என்று தலையை அப்படியே ஆட்டுவாள். நான் சொல்வேன், “நீ...” நான் மறுநாள் இரவு சொன்னேன்; நான், “அம்மா, என்னைத் தெரியுமா?” அவளுக்கு என்னைத் தெரியாது. நான், “இங்கே நிற்பவர் யார் என்று உங்களுக்குத் தெரியும்” என்றேன். இல்லை, அது அவளுக்குத் தெரியாது. நான், “அம்மா, உங்களுக்கு இயேசுவைத் தெரியுமா?” மற்றும்... ஓ, என். தன் குழந்தையை மறந்துவிடலாம், ஆனால் அவளால் இயேசுவை மறக்க முடியாது. அவ்வளவுதான். ஓ தம்பி.நீங்கள் உங்கள் சொந்த குடும்பத்திற்கு வரும் வரை, அது என்னவென்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் பார்க்கிறீர்களா? அவரை அறிவதே வாழ்க்கை. அவரை அறிவதே இந்த வாழ்வின் ஓட்டப் பந்தயத்தில் ஓடும்போது, ​​வானத்தைத் தாண்டி ஒரு வீடு கிடைத்ததை அறிந்த திருப்தி. அது என்ன, எனக்குத் தெரியாது. அது உங்களுக்கு எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை, 'எனக்குத் தெரியாது, நானே. ஆனால் கடவுளின் கிருபையால் என்றாவது ஒரு நாள் நாம் அங்கு பயணிப்போம் என்பது எனக்குத் தெரியும். 131இந்த வாரம் எனக்காக ஜெபியுங்கள். எனக்கு அது தேவை. இப்பொழுது, நீங்கள் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நான் உங்களுக்காக ஜெபிப்பேன். இறைவன் சித்தமாக இருந்தால், அடுத்த ஞாயிறு உங்களை சந்திக்கிறேன். இன்றிரவு சேவையை நினைவில் கொள்க. சாத்தியம், இன்றிரவு அல்லது வேறு எதையும் அமைத்துவிட்டு, அம்மாவுடன் வெளியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றால், நான் இன்றிரவு உங்களுடன் வருவேன்.இப்போது, ​​சகோதரர் நெவில், எங்கள் மதிப்புமிக்க போதகர், இங்கே வாருங்கள். எப்படி நான் நிச்சயமாக... அங்கே—வீட்டுக்காரர்களைத் தவிர வேறு யாரும் இங்கு இல்லை, உங்களுக்குத் தெரியும். நாம் அனைவரும் வீட்டு மக்கள் என்று அழைக்கிறோம். இந்த நற்செய்தி சத்தியத்திற்கான சகோதரர் நெவில்லின் நிலைப்பாட்டை நான் பாராட்டுகிறேன். மக்கள் முன் அவரது விசுவாசத்தையும் நேர்மையையும் நான் பாராட்டுகிறேன். மறுநாள் அவர் பேசும்போது, ​​நான் அதை ஒருபோதும் கவனிக்கவில்லை, ஆனால் அவர் தூண்டுதலின் கீழ், தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தபோது, ​​அவர் என்னை ஒரு தீர்க்கதரிசி என்று அழைத்தார். அப்போது அவர் என்னை அழைக்கவில்லை, அதுதான் பரிசுத்த ஆவியானவர். அதனால் கடவுளுடன் ஆழமான ஆழம் மற்றும் உயர்ந்த உயரங்களை நகர்த்துவதற்கு எனக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. சகோதரர் நெவில், நான் உங்களைப் பாராட்டுகிறேன். கடவுள் உங்களை எப்போதும் ஆசீர்வதிப்பார். நான் உன்னை மீண்டும் பார்க்கும் வரை, கடவுள் உன்னுடன் இருப்பார்.